பொதுவாக இன்பமும், துன்பமும் சேர்ந்து வருவதுதான் வாழ்க்கை. இப்படி சந்தோஷங்களும், வருத்தங்களும் இணைந்து இரு தண்டவாளங்களாக முடிவில்லாத ரயில் பயணங்களாக பயணிக்கும் இவ்வாழ்வில், நமக்கு இன்பம் வரும் போது சந்தோஷிப்பதும், துன்பம் வரும் போது வருந்துவதும் வாடிக்கையாகி போன விஷயம்.. ( இப்ப என்னதான் சொல்லப் போறீங்க? "தலையும், வாலும் புரியலை" என நீங்கள் கொஞ்சம் தலையை தாங்கிப் பிடிப்பதற்குள் நிச்சயம் சொல்லி விடுகிறேன்.)
கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி என் உறவுகளிடமி ருந்து எனக்கு வாட்சபில் வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தன. காரணம் நான் அன்றுதான் (அன்று என்பதற்கு அப்போது என அர்த்தமில்லை. அன்றைய நாள் என்பதாகும்.) பிறந்தேனாம். (ஆஹா... சின்ன நூல் கிடைத்து விட்டது. இனி வருடம் என்ற கயிறு கிடைத்து விட்டால், உறவுச் சிக்கலை பிணைத்து கட்டி விடலாம் என சகோதரி கீதா அவர்கள் சந்தோஸிப்பதும் என் மனக் கண்ணில் தெரிகிறது. ஹா ஹா ஹா ஹா. ) எனக்கும் இப்போதுதான் வாட்சப் வசதிகள் கொண்ட ஃபோன் கிடைத்திருப்பதென்பது குறிப்பிடத்தக்கது . நாங்கள் பொதுவாக பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று நினைவில் வைத்துக் கொள்வோம். ஆங்கில தேதிகளில் வாழ்த்துக்கள் தெரிவிப்பது என் குழந்தைகள் ( சகோதரி அதிரா அவர்கள் மன்னிக்கவும் .. "குழந்தைகள் எப்படி கல்லூரியில்.... இந்த கமலா சிஸ்டருக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புரியலே" என மனசுக்குள் சொல்வது கேட்கிறது. ஹா ஹா ஹா ஹா ) பள்ளி கல்லூரிக்கு சென்ற பிறகுதான் பழக்கமாகி போனது.
ஆனால் எனக்கு அன்றைய தேதியில் இன்றைய அனைவரின் வழக்கப்படி வாழ்த்துக்கள் வந்தது சற்றே விசித்திர மகிழ்வை தந்தது. "நான் எப்போதுமே ஒவ்வொரு வருடமும் கடக்கும் போது நாம் இந்த வருட இளமையை தொலைத்து விட்டு முதுமையை நோக்கித்தான் அடுத்து அடியெடுத்து வைக்கிறோம் என நினைத்துக் கொள்வேன். சில சமயம் அடுத்தப்பிறவியின் வாசல் படியென்றும் நினைத்துக் கொள்வேன்." (எனக்கு போட்டியா இவங்க அப்போதையிலிருந்தே இங்க ஞானியா? என சகோதரி அதிரா அவர்கள் ஆனந்தத்தோடு விய(ழு)ந்து விய(ழு)ந்து அதிசயப்பது புரிகிறது. ஹா.ஹா ஹா ஹாா..) எப்போதுமே என் பிறந்த நாளுக்கென்று சிறப்பான முறையில் ஏதும் செய்யாத நிலையில், இந்த வருடம் அனைவரின் வாழ்த்துகள் மட்டும் ஏனோ சிறிது ஆனந்தத்தை அளித்ததும் உண்மை.. (காரணம் புது வாட்சப் பாக இருக்கலாம். இல்லை.. நமக்கு அடுத்தபடியாக சிஷ்ய ஞானி உருவாகி விட்ட திருப்தியாகவும் இருக்கலாம். ஹா ஹா ஹா ஹா ஹா )
அதன் பின் அந்த மாதத்தில் பத்தொன்பதாம் தேதி என் நாத்தனார் பெண் அவர்கள் வீட்டில் பத்து வருடத்திற்கும் மேலாக வளர்த்து வந்த செல்லம் ( இங்கு செல்லம் என்று குறிப்பிடுவது சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிகவும் திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கும் என நினைக்கிறேன்.) தீடிரென்று மரணித்து விட்டதாக அதே வாட்சபில் சொன்ன போது, மனசு சங்கடப்பட்டு அன்று முழுவதும் வேதனையாக இருந்தது. அதற்கு முன் இரு தடவை அவர்கள் வீட்டுக்கு (ஹைதராபாத்) சென்ற போது அந்த செல்லத்தை பார்த்திருக்கிறேன்.. அந்த ஞாபகம் வந்து அதனை நினைத்து அன்று முழுவதும் அவர்களுடன் பேசிக்கொணடிருந்தேன். அவர்களும் அதன் காரணமாக குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து எங்கும் பயணப்பட மாட்டார்கள். யாரேனும் ஒருவர் அதற்கு காவலாக... இருப்பார்கள். அக்காலத்தில் "வீட்டை காக்கும்" எனப் படித்தது ஞாபகம் வருகிறது.
இப்படியாக அந்த ஒரு மாதத்தில் இன்பமும் துன்பமுமாக இரு நிகழ்வுகள்.( முதலில் சொன்ன வரிகள் ஒரளவுக்கு பொருந்தி வந்து விட்டது.) இந்த பிறந்த நாள்என்றதும் யாருக்கு யார் பெரியவர். சின்னவர் என்பதைக் கண்டதும், ஒரு நினைவு... நமக்கு தெரிந்த பதிவர்கள் அனைவருமே ஒரிரு, இல்லையேல் நான்கைந்து, அதுவும் இல்லையேல் ஆறேழு, அப்படியும் இல்லையென்றால், ஏழெட்டு வயது வித்தியாசத்தில் இருப்போம். ஆனால் சகோதரர் நெ. த அவர்கள் அரை விநாடி பின் பிறந்து விட்ட காரணத்தாால், கீதா ரெங்கனை "அக்கா" என அழைப்பதாக சகோதரி கீதா அவர்கள குறிப்பிடுகிறார்.
ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய 1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.
சரி "நினைவைச் " சொல்லவேயில்லையே... நாங்கள் சென்னையில் குடியிருந்த போது
நான்கு குடித்தனம். அதில் கீழ் வீட்டில் ஒரு அம்மா, இரண்டு மகள்கள் ஒரு மகன்,. தன் பெரிய பெண்ணின் மகளை தன் மகனுக்கு மணமுடித்திருந்தார். (பாட்டியே மாமியார்) அந்த பேத்திக்கு அப்போது என்னை விட ஒரு ஐந்து வயது கம்மியாகயிருக்கலாம். நான் அவர்களை எப்படி பேர் சொல்லி அழைப்பது என்று பரஸ்பரம் இருவருமே "மாமி" என அழைத்துப் பேசிக் கொள்வோம். தீடீரென ஒருநாள் அந்த மாமியார் (பாட்டி) என்னிடம் "மாமி.. (அவரும் என்னை அப்படியே அழைத்தார் என்பது வேறு விஷயம்.) இனி எங்க பேத்தியை மாமி என்று அழைக்காதீர்கள். அவள் உங்களை விட சின்னவர். சீக்கிரமே திருமணம் செய்து விட்டோம். ஆனால் இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கு. அதை வைத்துக்கொண்டு அவளை பெரியவராக நினைத்து விடாதீர்கள்.. இனி பேரைச் சொல்லியே கூப்பிடுங்கள்.. எனச் சொல்லவும் எனக்கு என்னமோ போலாகி விட்டது. (பேத்தி என்பதால், மருமகளிடம் அவ்வளவு பாசம்..) அதற்கு முன் பழகும் போதே எனக்கு பத்தொன்பது வயதில் திருமணமானதையும், சீக்கிரமாகவே குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து வியந்தவர்தான் அந்த அம்மா. சரி... அதுதான் போகட்டும்...ஒருநாள், " நான் உங்கள் அம்மா மாதிரிதான்... ஆனாலும் உங்களை பேர் சொல்லி அழைக்க என்னமோ மாதிரி இருக்கு.. அதனால் மாமி என்றே அழைக்கிறேன்" என்றாறே பார்க்கலாம்.
எனக்கு சிரிப்புதான் வந்தது. "என்னை எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளுங்கள் . பாட்டி, கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி என அழைத்தாலும் ஆட்சேபனை இல்லை. கூப்பிட்டு விளிப்பதற்காகத்தான் பெயரிடுவது, உறவை குறிப்பிடுவது எல்லாம்... எப்படி அழைத்தால் என்ன.... என்றேன். (ஆஹா எவ்வளவு பெருந்தன்மை... என அனைவரும் புகழாரம் பதியலாம் என யோசிப்பது புரிகிறது. ஆனாலும் வேண்டாமே....)
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் மறக்க இயலாதவையாக அமைந்து விடுகிறது.
அதெல்லாம் சரிதான்.. இன்னமும் பதிவில் முதலில் எழுதியது வரவில்லையே.. எண நீங்கள் பொங்குவதற்குள், சகோதரி பானுமதி அவர்கள் சகோதரி வல்லி சிம்ஹன் பதிவில், "என்ன இந்த மாதம் எல்லோரும் புனித பயணமா இருக்கே" என நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.
அதைத்தான் பதிவின் தொடக்கத்தில் ரயிலோடு இணைத்திருந்தேன்.. (இவங்களுக்கு நிஜமாகவே தலைசுத்தல் வந்ததை எந்த இடத்திற்கும் வந்து அடிச்சு சொல்றேன். ஆயுர்வேதமும் பலன் அளிக்கவில்லை போலும் ..) என பொறுமை தாளாமல் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நினைப்பதும் என்னால் ஊகிக்க முடிகிறது.
அட.. எல்லோரும் கடுப்பாவது தெரிகிறது. இதோ.... விடுவிக்கிறேன்.விடுவித்தே விடுகிறேன். வரும் ஞாயிறன்று மாலை குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பிறந்து வளர்ந்த ஊருக்குச் (திருநெல்வேலி) செல்கிறோம். ஒரு வாரம் அங்கு தங்க வேண்டியதிருக்கும். இந்த மாதம் குலதெய்வ மாதம் போலும். (அதனால்தான் முதலிலேயே பிறந்தது, இன்பம், துன்பம். அனைத்தையும் ரயில் பயணங்களுடன் கோர்த்து விட்டேன்.)
பொதுவாக உப்புமாவை எங்கள் வீட்டில் "இன்று குலதெய்வ வழிபாடு" என்றுதான் குறிப்பிடுவோம் . கிளம்பும் அன்றாவது உப்புமா இடையில் வராமல் இருக்க வேண்டும்.... ஆமாம்.. வளவளன்னு எழுதியதுதான் எழுதியாச்சு. (ஆனால் தலைப்பையாவது மாத்தி கொடுத்திருக்க கூடாதா? .. பேசாமே கடைசியிலே சொன்னமாதிரியே "விளையாட்டா கோர்த்த பதிவு"ன்னு வச்சிருக்கலாம்..) என்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள் அவரின் நண்பர் இருவருடன் சத்தமாகவே பேசுவது கேட்கிறது.
அது சரி.. ஊருக்கெல்லாம் போயிட்டு நிதானமா வாங்கோ . அவசரமேயில்லை. Day யை சொன்னீங்களே.. Year யும் சொல்லிட்டு போங்கோ.. கணக்கு போட்டு குழப்பம் தீர்க்கலாமே.. என அனைத்துக் குரல்களும் ஒருசேர அழகான இசையாய் ஒலிப்பது கேட்கிறது.
போயிட்டு வர்றேன். சொல்லலாமா என்று கேட்டு விட்டு வந்து சொல்கிறேன். ( வேறு யாரிடம்? தெய்வத்திடந்தான்.....) 🙏...
அனைவரையும் விளையாட்டாகத்தான் குறிப்பிட்டேன். தவறெனின், 🙏. மன்னிக்கவும்...
(அட... இங்கு தலைப்பும் வந்து விட்டதே...)ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய 1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.
சரி "நினைவைச் " சொல்லவேயில்லையே... நாங்கள் சென்னையில் குடியிருந்த போது
நான்கு குடித்தனம். அதில் கீழ் வீட்டில் ஒரு அம்மா, இரண்டு மகள்கள் ஒரு மகன்,. தன் பெரிய பெண்ணின் மகளை தன் மகனுக்கு மணமுடித்திருந்தார். (பாட்டியே மாமியார்) அந்த பேத்திக்கு அப்போது என்னை விட ஒரு ஐந்து வயது கம்மியாகயிருக்கலாம். நான் அவர்களை எப்படி பேர் சொல்லி அழைப்பது என்று பரஸ்பரம் இருவருமே "மாமி" என அழைத்துப் பேசிக் கொள்வோம். தீடீரென ஒருநாள் அந்த மாமியார் (பாட்டி) என்னிடம் "மாமி.. (அவரும் என்னை அப்படியே அழைத்தார் என்பது வேறு விஷயம்.) இனி எங்க பேத்தியை மாமி என்று அழைக்காதீர்கள். அவள் உங்களை விட சின்னவர். சீக்கிரமே திருமணம் செய்து விட்டோம். ஆனால் இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கு. அதை வைத்துக்கொண்டு அவளை பெரியவராக நினைத்து விடாதீர்கள்.. இனி பேரைச் சொல்லியே கூப்பிடுங்கள்.. எனச் சொல்லவும் எனக்கு என்னமோ போலாகி விட்டது. (பேத்தி என்பதால், மருமகளிடம் அவ்வளவு பாசம்..) அதற்கு முன் பழகும் போதே எனக்கு பத்தொன்பது வயதில் திருமணமானதையும், சீக்கிரமாகவே குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து வியந்தவர்தான் அந்த அம்மா. சரி... அதுதான் போகட்டும்...ஒருநாள், " நான் உங்கள் அம்மா மாதிரிதான்... ஆனாலும் உங்களை பேர் சொல்லி அழைக்க என்னமோ மாதிரி இருக்கு.. அதனால் மாமி என்றே அழைக்கிறேன்" என்றாறே பார்க்கலாம்.
எனக்கு சிரிப்புதான் வந்தது. "என்னை எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளுங்கள் . பாட்டி, கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி என அழைத்தாலும் ஆட்சேபனை இல்லை. கூப்பிட்டு விளிப்பதற்காகத்தான் பெயரிடுவது, உறவை குறிப்பிடுவது எல்லாம்... எப்படி அழைத்தால் என்ன.... என்றேன். (ஆஹா எவ்வளவு பெருந்தன்மை... என அனைவரும் புகழாரம் பதியலாம் என யோசிப்பது புரிகிறது. ஆனாலும் வேண்டாமே....)
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் மறக்க இயலாதவையாக அமைந்து விடுகிறது.
அதெல்லாம் சரிதான்.. இன்னமும் பதிவில் முதலில் எழுதியது வரவில்லையே.. எண நீங்கள் பொங்குவதற்குள், சகோதரி பானுமதி அவர்கள் சகோதரி வல்லி சிம்ஹன் பதிவில், "என்ன இந்த மாதம் எல்லோரும் புனித பயணமா இருக்கே" என நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.
அதைத்தான் பதிவின் தொடக்கத்தில் ரயிலோடு இணைத்திருந்தேன்.. (இவங்களுக்கு நிஜமாகவே தலைசுத்தல் வந்ததை எந்த இடத்திற்கும் வந்து அடிச்சு சொல்றேன். ஆயுர்வேதமும் பலன் அளிக்கவில்லை போலும் ..) என பொறுமை தாளாமல் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நினைப்பதும் என்னால் ஊகிக்க முடிகிறது.
அட.. எல்லோரும் கடுப்பாவது தெரிகிறது. இதோ.... விடுவிக்கிறேன்.விடுவித்தே விடுகிறேன். வரும் ஞாயிறன்று மாலை குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பிறந்து வளர்ந்த ஊருக்குச் (திருநெல்வேலி) செல்கிறோம். ஒரு வாரம் அங்கு தங்க வேண்டியதிருக்கும். இந்த மாதம் குலதெய்வ மாதம் போலும். (அதனால்தான் முதலிலேயே பிறந்தது, இன்பம், துன்பம். அனைத்தையும் ரயில் பயணங்களுடன் கோர்த்து விட்டேன்.)
பொதுவாக உப்புமாவை எங்கள் வீட்டில் "இன்று குலதெய்வ வழிபாடு" என்றுதான் குறிப்பிடுவோம் . கிளம்பும் அன்றாவது உப்புமா இடையில் வராமல் இருக்க வேண்டும்.... ஆமாம்.. வளவளன்னு எழுதியதுதான் எழுதியாச்சு. (ஆனால் தலைப்பையாவது மாத்தி கொடுத்திருக்க கூடாதா? .. பேசாமே கடைசியிலே சொன்னமாதிரியே "விளையாட்டா கோர்த்த பதிவு"ன்னு வச்சிருக்கலாம்..) என்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள் அவரின் நண்பர் இருவருடன் சத்தமாகவே பேசுவது கேட்கிறது.
அது சரி.. ஊருக்கெல்லாம் போயிட்டு நிதானமா வாங்கோ . அவசரமேயில்லை. Day யை சொன்னீங்களே.. Year யும் சொல்லிட்டு போங்கோ.. கணக்கு போட்டு குழப்பம் தீர்க்கலாமே.. என அனைத்துக் குரல்களும் ஒருசேர அழகான இசையாய் ஒலிப்பது கேட்கிறது.
போயிட்டு வர்றேன். சொல்லலாமா என்று கேட்டு விட்டு வந்து சொல்கிறேன். ( வேறு யாரிடம்? தெய்வத்திடந்தான்.....) 🙏...
அனைவரையும் விளையாட்டாகத்தான் குறிப்பிட்டேன். தவறெனின், 🙏. மன்னிக்கவும்...
//எனக்கும் இப்போதுதான் வாட்சப் வசதிகள் கொண்ட ஃபோன் கிடைத்திருப்பதென்பது குறிப்பிடத்தக்கது //
ReplyDeleteஒருவகையில் மகிழ்ச்சி. ஆனால் பலவகையில் பெரும் தொல்லை!! நம் நேரத்தை பெருமளவு எடுத்துக்கொள்ளும்.
நான் சொல்ல நினைத்தது ஸ்ரீராம்ஜி சொல்லி விட்டார்.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என மனம் நிறைந்த நன்றிகள்.
ஆம் வாட்சப் நம் நேரத்தை பெருமளவு எடுத்துக் கொள்ளும். வாட்சப் பயன்படுத்துவதென்னவோ கொஞ்ச நேரந்தான். அதுவும் எப்போவோதான். ஆனால் இதைதான் நான் கணினியாக முக்கால்வாசி பயன்படுத்துகிறேன். சகோதரர் கில்லர்ஜிக்கும் இதை சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்கள் வீடுகளிலும் நிறையபேர் நட்சத்திர பிறந்தநாள்தான் கொண்டாடுவார்கள். எங்களை பொறுத்தவரை ஆங்கில தேதி நாட்களையே நினைவில் வைத்துக் கொள்கிறோம். எளிதாக இருக்கிறது.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எளிதாக இருப்பதை கையாள்வதில் தவறில்லையே.. இப்போது அனைவரும் ஆங்கில தேதி நாட்களில்தான் கொண்டாடுகின்றனர். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// "நான் எப்போதுமே ஒவ்வொரு வருடமும் கடக்கும் போது நாம் இந்த வருட இளமையை தொலைத்து விட்டு முதுமையை நோக்கித்தான் அடுத்து அடியெடுத்து வைக்கிறோம் என நினைத்துக் கொள்வேன்//
ReplyDeleteஆண்டொன்று போனால் வயதொன்று போகும்...!!!
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நல்ல பொருத்தமான பாட்டுதான். பாடல்களை தேர்வு செய்வதற்கு தங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம்...உண்மை என்ன தெரியுமோ?:).. ஒவ்வொரு பிறந்தநாளும் நமக்கு வரும்போது.. நாம் சாவதற்கான வருடத்திலிருந்து ஒரு வருடம் குறைஞ்சு போச்ச்ச்சு என அர்த்தம்:)-
Deleteஇப்படிக்க்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
தத்துவம் நம்பர் 883712098348625...
Deleteவணக்கம் சகோதரி
Deleteசூப்பர் தத்துவம்.. தங்களிடம் இதைத்தான் எதிர்பார்த்தேன். சிஷ்ய கோடிகள் தன் திறமைகளை வெளிப்படுத்தும் போது குருவுக்கு உண்டாகும் புளகாங்கிதத்தை நானும் உணர்ந்தேன்.
சகோதரர் ஸ்ரீராமும் நம்பரிலேயே தன்னுடைய பாராட்டை தெரிவித்திருப்பது கண்டு மேலும் ஆனந்தத்தில் மூழ்கி விட்டேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இங்கு செல்லம் என்று குறிப்பிடுவது சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிகவும் திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கும் என நினைக்கிறேன்//
ReplyDeleteஹா..ஹா..ஹா.. கண்டிப்பாக.
ஆனால்,
செல்லம் என்பது பலவகைப்படும். குறிப்பாக இரண்டுவகை! ஒன்று பூஸார். இன்னொன்று என் பிரிய செல்லம்! இதில் எது நீங்கள் குறிப்பிடுவது?
// வீட்டை காக்கும்" எனப் படித்தது ஞாபகம் வருகிறது.//
ஓ.... புரிகிறது. என் செல்லம்தான்!
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் தளத்திற்கு வந்த பின்தான் இந்த செல்லங்கற வார்த்தையை கற்றுக்கொண்டேன். அதனால்தான் தங்களுக்கு மகிழ்வை தரும் என குறிப்பிட்டேன். ஓ.. இதில் இரண்டுமே செல்லங்கள்தானா? நான் நினைத்தபடி செல்லம் எனறது தங்களுக்கு சந்தோஸ மளித்ததற்கு மகிழ்ச்சி. அதில் ஒரு நல்ல வேளை "வீட்டை காக்குமென" ஒரு க்ளு கொடுத்தேன். இல்லாவிடில் சற்று குழப்பமாகியிருக்கும் எனவும் புரிந்து கொண்டேன். மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"நட்பில் நாயளவு இருப்பதில்லை பூனைகள்" என்று ஒரு கவிதை (ன்னு சொன்னா நம்பணும்) முன்பு எழுதி இருந்தேன். அது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உண்மைதான். பூனையை விட நாய்கள் நனறியுடையவைதான். முன்பு அம்மா வீட்டில் இருக்கும் போது ஒரு பூனை எங்கிருந்தாலும் காலை நாங்கள காபி குடிக்கும் சமயம் ஆஜராகி விடும். வீட்டிற்குள் அவ்வளவாக புகுந்து அட்டகாசம் செய்ததில்லை. எங்கள் அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அது அப்பறம் இதைபுரிந்து கொண்டதோ இல்லை, காபி போரடித்து விட்டதோ போயே போச்சு..வாசலில் நின்று சத்தமிட்டு விட்டு அழைத்தாலும் ஓடி விடும். வலுக்கட்டாயமாக தூக்கி வர எங்களுக்கும் சற்று பயம்.பூனை கடிக்கு மருந்தில்லை என்று அப்போது ஒரு பயம் இப்போ எப்படியோ? இந்த மாதிரி பிராணிகளை வளர்ப்பவர்கள் முன்கூட்டியே மருநதெடுத்து கொள்ளும் காலங்கள் எப்போதோ வந்து விட்டதே..
பக்கத்து உறவு வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்கள். ஒரு ஸ்பூன் பால் கூட நாங்கள் தந்ததில்லை. ஆனால் அது நாங்கள் எங்கு சென்றாலும் பின்னாடியே வந்து விட்டுச் செல்லும். பார்த்து பழகிய தோஷம் போலும். அதனால்தான் பூனையை விட நாய்கள் என்றும் நன்றியுள்ளவைதான்.
தங்கள் கவிதைக்கென்ன...அழகாய் அமர்களமாய் இருந்திருக்கும். இப்போது வெளியிட்டால் படிக்கலாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா... நீங்களும் திருநெல்வேலியா? கோஷ்டி சேர்ந்துவிடும் போலவே.... ஆஹா...!!! அதே போல நீங்களும் குலதெய்வம் வழிபாட்டுக்குப் போகிறீர்களா? ஆஹா... முதலில் நான், அப்புறம் கீதாக்கா... இப்போது நீங்கள்!
ReplyDeleteநட்புறவுகள் அத்தனை பெயர்களையும் இணைத்து எழுதி இருப்பதை ரசித்தேன். பிறந்த வருடம் சொல்லலாம். தப்பில்லை!
:)))
பிறந்த வருடம் சொல்லலாம். தப்பில்லை!//
Deleteஹா ஹா ஹா எஸ்ஸு..கமலாக்கா சொன்னீங்கனா.. ஆச்சி அதிராவுக்கு நீங்க தங்கச்சிதன் நோ டவுட் ..இருந்தாலும் கஃப்ர்மேஷனுக்குத்தான் ஹா ஹா அதிரடிக்குத் தெரியாம மறைஞ்சுடணும்...ஹிஹிஹி
கீதா
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
/ஆஹா... நீங்களும் திருநெல்வேலியா? கோஷ்டி சேர்ந்துவிடும் போலவே.... ஆஹா...!!! அதே போல நீங்களும் குலதெய்வம் வழிபாட்டுக்குப் போகிறீர்களா?/
ஆமாம் சகோதரரே. எ.பி கூட்டு குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராய், குலதெய்வ வழிபாட்டிற்கு செல்கிறோம். எல்லா கடவுள்களும் ஒன்றுதான். அனைவரும் அனைவரது வேண்டுகோள்களையும் நிறைவேற்றி வைக்கட்டும். தாங்களும் தி. லியா?
பதிவை ரசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
பிறந்த வருடம் சொல்லலாம்.... ஆம் சொல்லாமலேயிருந்தாலும் நமக்கே ஒரு நாள் மறந்து விடும். ஹா ஹா...
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// தாங்களும் தி. லியா?//
Deleteஇல்லை. தஞ்சை என்று சொல்லலாம். மதுரை என்று சொல்லலாம். சென்னை என்றேயும் சொல்லலாம்! குழப்புகிறேனோ!
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/சொன்னீங்கனா.. ஆச்சி அதிராவுக்கு நீங்க தங்கச்சிதன் நோ டவுட் /
ஆமாம் சகோதரி அதிராவுக்கு ஆச்சி பட்டம் எப்போது கிடைத்தது? தி. லியில் எங்கள் வீட்டை சுற்றியிருப்பவர்கள் என்னை பெயர் சொல்லி அழைக்காமல், சின்ன வயதில் "சின்ன ஆச்சி"எனறுதான் அழைப்பார்கள். அவருக்கும், எனக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.... ஒரு வேளை நான் பிறந்த வருடம் கூறினால், அவர் சின்ன ஆச்சியா,பெரிய ஆச்சியா என்பது புரிந்து விடும். இல்லை, அவர் கூறினாலும் ஓகேதான். ஆனால் எப்படியும் நான் அவருக்கு தங்கைதான். இதை நீங்களே ஒத்து கொண்டு விட்டீர்கள். இதையும் அதிராவுக்கு தெரியாமல் மறைத்து விடலாம். ஹா ஹா ஹா ஹா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா... பலகுரல் மன்னன் மாதிரி பல ஊர்களின் மன்னனோ? நல்லது. ஊர்கள் சுற்றும் வாலிபர்..பணிகளின் இடம் மாற்றல்தான் காரணமாக இருக்கும் இல்லையா?
Deleteநானும் என் கணவரின் பணி நிமித்தம் சென்னை, மதுரை, இப்போ இங்கே என ஒரே சுற்றல்தான். நன்றி.
// பிறந்த வருடம் சொல்லலாம். தப்பில்லை!//
Deleteஆங்ங்ன் சொல்லுங்கோ ஸ்ரீராம் சொல்லுங்கோ:) எப்பவுமே நாங்கள் நம்மில இருந்துதான் ஆரம்பிக்கோணும் என ஆரோகணச் சாமியார் சொல்லியிருக்கிறார்:) ஹா ஹா ஹா:).
// எப்பவுமே நாங்கள் நம்மில இருந்துதான் ஆரம்பிக்கோணும் என ஆரோகணச் சாமியார் சொல்லியிருக்கிறார்:) /
Deleteகர்ர்ர்ர்ர்ர்... நானா ஆரம்பிச்சேன் அதை? நானா சொல்லியிருக்கேன் அதை? அக்கா சொல்லியிருக்காங்க!
ஹா ஹா ஹா ஓ அப்போ நீங்க சேவ்ட்:)
Delete//அவர்களும் அதன் காரணமாக குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து எங்கும் பயணப்பட மாட்டார்கள். யாரேனும் ஒருவர் அதற்கு காவலாக... இருப்பார்கள். அக்காலத்தில் "வீட்டை காக்கும்" எனப் படித்தது ஞாபகம் வருகிறது.// எங்க மோதிக்காக எங்க பெண்ணின் கல்யாணத்தையே அம்பத்தூரில் உள்ள சத்திரத்தில் வைத்தோம். கல்யாண வேலைகளுக்கு இடையிலும் யாராவது ஒருத்தர் நான், என் கணவர், எங்க பையர் மூணு பேரும் மாத்தி மாத்திப் போய்ப் பார்த்துப்போம். அது போனப்புறமா இனிமேல் செல்லங்கள் வளர்ப்பே வேண்டாம்னு வைச்சுட்டோம். இப்படித் தான் எல்லார் வீட்டு விசேஷங்களுக்கும் யாராவது ஒருத்தர் வீட்டில் தங்கி மோதியைப் பார்த்துப்போம். எல்லோரும் சேர்ந்து கிளம்பிட்டா தவிப்பாய்த் தவிப்பான். விட்டுச் செல்ல மனம் கஷ்டப்படும். எல்லாத்தையும் யோசிச்சுட்டுத் தான் ஈனி செல்லங்களே வேண்டாம்னு முடிவு எடுத்தோம். :( இப்போ நினைச்சால் கூட இந்தக் குடியிருப்பு வளாகத்தில் வைச்சுக்க முடியாது. :(
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் மோதிக்காக நீங்கள் விட்டு கொடுத்தவைகள் படிக்கும் போது மனதுக்கு சந்தோஸமாக இருந்தது. என்ன இருந்தாலும் ஒரு ஜீவன், அதுவும் நாம் பார்த்து வளர்த்த ஜீவன் நம்மை விட்டு பிரியும் போது மனது கஸ்டந்தான் படும். அதனால்தான் இதையெல்லாம் வளர்க்கும் ஆசை இல்லாது போய் விட்டது. குடியிருந்த இடச்சூழலும் ஒரு காரணம். நாய் வளர்ப்பு ஆசையை எப்போதேனும் வெளிப்படுத்தும் போதெல்லாம், "முதலில் எங்களையெல்லாம் டிபன் சாப்பாடு ஒழுங்காக பண்ணிப் போட்டு வளர்த்து விடு. அது போதும்" என்பார்கள் எங்கள் வீட்டில். நான் குறிப்பிட்டிருந்த நாத்தனார் பெண்ணும், "நாய் வளர்ப்பு ஒன்றும் சாதரணமில்லை. அதன் கூடவே எப்போதும் நாமும் இருந்தால்தான் அதுவும் நன்றாக வளரும்." என்பார். நீங்களும் உங்கள் அனுபவங்களை இங்கு எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பிறந்த நாளுக்கும் புதிய ஃபோன் கிடைத்திருப்பதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடைபெறவும் பிரார்த்தனைகள். பொதுவாய்க் கல்யாணம் ஆகிவிட்டாலே மாமி என்றே சொல்கின்றனர். எனக்கும் பத்தொன்பது வயதில் தான் திருமணம். அப்போவே 30 வயதுக்கு மேல் உள்ள 2,3 குழந்தைகள் பெற்றவர்கள் எல்லாம் மாமி என அழைக்கத் துவங்கி விட்டனர். பழகி விட்டது! :)))))
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் வாழ்த்துகளுக்கும், பிராத்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வோடு கூடிய நன்றிகள்.
/பொதுவாய்க் கல்யாணம் ஆகிவிட்டாலே மாமி என்றே சொல்கின்றனர். எனக்கும் பத்தொன்பது வயதில் தான் திருமணம். அப்போவே 30 வயதுக்கு மேல் உள்ள 2,3 குழந்தைகள் பெற்றவர்கள் எல்லாம் மாமி என அழைக்கத் துவங்கி விட்டனர். பழகி விட்டது! :)))))/
ஆம். திருமணத்திற்கு பின் மடிசார் மாமிதான். ஹா ஹா. உங்களுக்கும் பத்தொன்பதில்தான் திருமணமா? கீதா அவர்கள் சொல்வது மாதிரி ஹைஃபைவ்... திருமணத்திற்குப்பின் நம் பிறந்த வீட்டை விட்டு பிரிந்து
வந்த சோகம், புது வீட்டின் கொஞ்ச பயமுறுத்தல்கள், கணவர், பிள்ளைகள் என்ற வாழ்க்கைச் சுற்றில், சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் மாமி என்றழைக்க கொஞ்ச நாளில்,பழகி விடும். எப்படி அழைக்கிறார்கள் என்பதே கவனத்தில் இல்லாது போய் விடும். ஆனால் இந்தக் கால குழந்தைகள் கொஞ்சம் உஷாராகவே இருக்கிறார்கள்...தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கீசாக்காவுக்கும் 19 லயா? எனக்கு மட்டும்தான் 9 வயசில நடந்திட்டுது:) அது ஒரு கொயந்தைட்த்ஹிருமணம்:).. அதனாலேயே சுவீட் 16 ல ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிட்டேன்:).
Deleteஅதிரடி,குழந்தைத் திருமணம்? சட்ட விரோதமாச்சே! இதோ போய்ப் புகார் செய்யறேன்! :))))
Deleteவணக்கம் சகோதரி
Deleteஎங்களுக்கே சீக்கிரம் கால்கட்டு என நினைத்துள்ளோம். அதன் பின்தான் இருபத்தி ஒன்றுதான் பெண்களுக்கு திருமணத்திற்கு உரிய வயது என ஆட்டோகளில் ஏற்றி ஒட விட்டார்கள். உங்களுக்கு குழந்தை (அறியாவயது) திருமணமா? அநியாயம்.. அது சரி. ஸ்வீட்16 ல் இரண்டு குழந்தைகள். இன்னுமா வளரவில்லை.. வயதல்ல.. குழந்தைகள்.. ஹா ஹா ஹா ஹா சிரித்து முடியவில்லை..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
(ஆஹா... சின்ன நூல் கிடைத்து விட்டது. இனி வருடம் என்ற கயிறு கிடைத்து விட்டால், உறவுச் சிக்கலை பிணைத்து கட்டி விடலாம் என சகோதரி கீதா அவர்கள் சந்தோஸிப்பதும் என் மனக் கண்ணில் தெரிகிறது. ஹா ஹா ஹா ஹா. //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா..கமலாக்கா இங்கு மீ டூ.....பிங்கியாயிட்டேமன் ஹா ஹா
மிக்க மிக்க நன்றி..
அது சரி ஒவ்வொரு ஆண்டும் நம் வயது ஏறினால் என்ன மனசுதானே முக்கியம் கமலாக்கா...ஸோ எஞ்சாய்!! பி ஹேப்பி!!! இளமைதான்! மீ வயசு கூடுவதைப் பத்தி யோசிக்கவே மாய்ட்டேனாக்கும்...யார் நம்மை எப்படி அழைத்தாலும் நாம் எப்பவுமே ஸ்வீட் 16 ஆக்கும்....
இது ஆச்சி அதிராவின் காதில் விய்ந்துடாம பார்த்துக்கோங்க சொல்லிப்புட்டேன்...
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நான் சொன்னது தங்களை மிகவும் சந்தோஸித்ததா? நன்றி.
வயது ஏற ஏற மனது இளமையாய் மாறுவதென்னவோ உண்மைதான். ஆசைகள் அதிகமாக அதிகமாக மனம் இளமையாய் இருக்கத்தானே விரும்புகிறது. உண்மை சகோதரி.. நாம் எப்போதுமே மனசை இளமையாய் வைத்துக்கொண்டால், ஏறும் வயதால், உடலின் பலவீனங்கள் ஒரு பொருட்டாக தெரியாது. உண்மைதான்.
நாம் என்றுமே மார்கண்டேயினிதான். அந்த ஈசனின் அனுக்கிரகமும் தப்பாமல் நமக்கு கிடைக்கட்டும்.
எதுவுமே சகோதரி அதிராவின் காதுகளுக்கு இன்னமும் எட்டவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எட்டியிருந்தால் இன்னேரம் இங்கு வந்திருப்பார்கள்... கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//யார் நம்மை எப்படி அழைத்தாலும் நாம் எப்பவுமே ஸ்வீட் 16 ஆக்கும்....//
Deleteசே..சே..சே ஒரு பிள்ளை[அது நாந்தென்] தன் உண்மை வயசைச் சொல்லிக்கொண்டு திரியவும் வழியில்லாமல் கிடக்கே:)
நானும் ஸ்ரீராம், ஏஞ்சல் லிஸ்டில். செல்லம்னுதான் சொல்வது வழக்கம்...பாவம்..அது இருங்க இன்னும் பார்த்துட்டு வரேன்
ReplyDeleteகீதா
This comment has been removed by the author.
ReplyDeleteவாட்சப் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் நிறைய நேரத்தைப் பறித்துக் கொள்ளும். எனவே நாம் அளவா பயன்படுத்திக்கலாம்.
ReplyDeleteகீதா
உண்மையான கருத்துக்களுக்கும் நல்லதொரு அறிவுரைக்கும் நன்றி சகோதரி.
Deleteஅக்கா நீங்களும் தின்னவேலி சைட்தான்னு உங்கள் பதிவிலிருந்துஅறிய முடிந்தது....கேட்க நினைத்து விட்டேன் இப்ப தெரிஞ்சுருச்சு...ஹைஃபைவ்!! மீ டூ தின்னவேலிதான் ஆனால் இந்த நெல்லைக்கு நான் எந்த ஊர் நு சொல்லி என்னை உசுப்பேத்துவார்...ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் நினைப்பு இப்போது ஊர்ஜிதமாகி விட்டதா? நல்லது..
/மீ டூ தின்னவேலிதான் ஆனால் இந்த நெல்லைக்கு நான் எந்த ஊர் நு சொல்லி என்னை உசுப்பேத்துவார்...ஹா ஹா ஹா ஹா/
நெல்லைத தமிழருக்கு அவர் பெயரிலேயே அது இருப்பதால், அப்படி ஒரு ஊர் இருப்பதையே மறந்து விட்டார் போலும்.. .. பரவாயில்லை.. நாமும் இனி நெல்லை தமிழச்சி என கூறிக் கொள்வோம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குலதெய்வ வழிபாடா ? நன்கு தரிசனம் செய்து வாருங்கள்.
ReplyDeleteநாங்கள் அடுத்த ஆண்டுதான் போக முடியும்.
உங்களுக்கும் திருநெல்வேலியா? மகிழ்ச்சி.
எங்களுக்கும் அது தான் சொந்த ஊர்.
எனக்கும் சிறுவயதில் திருமணம் சிலரை தவிர எல்லோரும் என் பெயரையும் சேர்த்து அக்கா என்று தான் அழைப்பார்கள். அது இன்றும் வலைத்தளத்தில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்கள் மனமுவந்து சொன்ன வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.
தாங்களும் தி. லியா சகோதரி. எனக்கும் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீங்களும் அடுத்த ஆண்டு நல்லபடியாக சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.
/எனக்கும் சிறுவயதில் திருமணம் சிலரை தவிர எல்லோரும் என் பெயரையும் சேர்த்து அக்கா என்று தான் அழைப்பார்கள். அது இன்றும் வலைத்தளத்தில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது./
தங்களுக்கும் சிறுவயதில் திருமணமா.. அந்த காலத்தில் அனேகமாக இருபது வயதிற்குள் மணமுடிப்பது இயல்புதானே சகோதரி. திருமணமான பின் சற்றே பெரியமனுஷதனம் இயல்பாய் வந்து விடுவதால், அனைவருக்கும் பின் பட்டமாக ஒரு தகுதி வந்து சேர்ந்து விடும் போலிருக்கிறது. வலைதளத்தில் தங்களை அக்கா என அழைப்பதை கவனித்திருக்கிறேன். கருத்துக்களை சொன்னமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சொல்லிச் சென்ற விதம் ரசிக்க வைத்தது.
ReplyDeleteநான் நினைத்தது உண்மைதான் இரண்டு நண்பர்களிடம் சொல்லி சிரிக்கவில்லை.
கோவிலுக்கு நலமுடன் சென்று வந்து அனுபவங்களை பகிரவும்.
எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி அருகில் வள்ளியூர், சித்தூர் தென்கரை மஹாராஜா.
திருநெல்வேலி என்றதும் இங்குதானோ என்று நினைத்து விட்டேன்.
கில்லர்ஜி மெய்யாலுமா? வள்ளியூரா? ஹை! நானும் வள்ளியூர்ல அஞ்சாப்பு, ஆறாப்பு படிச்சேன்லா...
Deleteகீதா
குலதெய்வம் கோயில் பொய்க்காக சொல்ல முடியுமா ?பிறகு ராஜகோபால் கோவித்துக் 'கொல்'வார்.
Deleteவள்ளியூரில் தான் என் மாமி இருந்தார். அவர் திருமணம் அந்தப் பக்கம் தான் நடந்தது. மாமா-மாமி கல்யாணத்தின் போது தான் ஏர்வாடி, பொட்டல்புதூர், வள்ளியூர் எல்லாம் பார்த்தேன். கோவில்பட்டியில் ஓட்டலில் சாப்பிட்டது இன்னமும் நினைவில் இருக்கு.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
பதிவை ரசித்துப் படித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி.
/நான் நினைத்தது உண்மைதான் இரண்டு நண்பர்களிடம் சொல்லி சிரிக்கவில்லை./
சிரித்தாக நானும் குறிப்பிடவில்லை.. தங்கள் நண்பர்கள் எனச் சொன்னது சிவ தாமஸ் அலி, சிவசம்போ இருவரையுந்தான்..
தங்கள் குலதெய்வ கோவில் இருப்பிடம் அறிந்து மகிழ்ச்சி.
எங்களது வல்லநாடு அம்மன் கோவில். அங்குதான் செல்ல இருக்கிறோம். கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த மாமி ... ஹா ஹா ஹா...அது கீதாக்கா சொல்லியிருப்பது போல்தான்....அப்படிச் சொல்லிப் பழக்கமாகிவிட்டது என்னையும் எல்லோரும் மாமி என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது (நம் சமூகம் தெரிந்துவிட்டால் பிறர் அப்படித்தான் அழைக்கிறார்கள்..போனால் போகுது!! விடுங்க நாம யங்கோ யங்கு....இது அதிரடியின் கண்களில் படாமல் பார்த்துக்கோங்க கமலாக்கா..ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
கீதா...
Deleteகல்யாணத்துக்கு அப்புறம் மாமி என்று கூப்பிடுவதாவது பரவாயில்லை. என் பாஸை கல்யாணத்துக்கு முன்னாலேயே அவர் வீட்டுக்கு வரும் பிளம்பர், இன்னும் சிலபேர் எல்லாம் சின்ன மாமி என்று கூப்பிடுவார்களாம்!
ஹா ஹா ஹா ஹா அதான் ஸ்ரீராம் அந்த ப்ராக்கெட்டுக்குள்ள இருக்கே அதான் காரணம் என்று எனக்குத் தோன்றும்.
Deleteஹா ஹா ஹா ஹா //சின்ன மாமி/// ஸ்ரீராம் எனக்கு இலங்கைப் பாடல் நினைவுக்கு வருது சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே....சின்ன மாமியே வோடு நிறுத்திட்டாங்களே....இதைச் சொல்லாம விட்டாங்களே!!! ஹா ஹா ஹா ஹா ஏன்னா எங்கூர் பசங்க நான் என் கஸின்ஸ் எல்லாம் கல்லூரி சேரும் சமயத்துல இந்தப் பாட்டைப் பாடிக் கலாய்ப்பாங்க...நாங்க எங்க கஸின்ல ஒருவர் வாடா மருமகானு சொல்லுவா நான் சிலரை அண்ணே அப்படினு சொல்லிடுவேன்...சிலரிடம்... தம்பி எங்களுக்குக் கல்யாணம் ஆகி சின்ன மகள் பிறக்கும் போது உனக்குச் சொல்லிவிடுறோம் அப்பா வாப்பா அப்படினு சொல்லுவேன்..ஹா..ஹா ஹா
கீதா
// ஸ்ரீராம் எனக்கு இலங்கைப் பாடல் நினைவுக்கு வருது சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே....//
Deleteஎனக்கும் அந்தப் பாடல் நினைவுக்கு வந்து பாடி கிண்டல் செய்வேன்! இப்போதும் என் சேமிப்பில் அந்தப் பாடல் உண்டு கீதா...
இங்கு என் மூத்த சகோதரர்கள் எல்லாம் என்னமோ பேசுகிறார்களே.. யங்காமே யங்கு? அப்பூடி எண்டால் என்ன கமலா சிஸ்டர்?:)
Delete// யங்காமே யங்கு? அப்பூடி எண்டால் என்ன கமலா சிஸ்டர்?:) /
Deleteஏதாவது சீனப்பெயராக இருக்குமோ?
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இலங்கை பாடல் நானும் அறிவேன். அந்த மெட்டும் குரலும் மிக அற்புதமாக இருக்கும். தினமும் ஒருதடவையாவது சிலோன் வானொளியில் ஒலிபரப்பாமல் இருக்க மாட்டார்கள். அதோடு, அதே மாதிரி இன்னொரு பாடலும் உண்டு. சட்டென ஞாபகம் வரவில்லை.
சின்ன மாமி குறித்து சகோதரர் ஸ்ரீராம் சொன்னது இயல்பே.. அப்போதெல்லாம் நம் சமூகத்திற்கு அது ஒரு பட்ட பெயர். நானும் போனால் போகட்டும் எனத்தான் விட்டு விடுவேன். தங்கள் கல்லூரி நிகழ்ச்சிகளும் சுவையானவை..
அது சரி... "நாமெல்லாம் யங்கோ யங்கு" என சொல்லி விட்டு, அதிராவின் கண்களில் படக்கூடாது எனச் சொன்னீர்களே,.. உடனே அழிக்க வேண்டாமோ.. அவர் கண்களில் பட்டு அதற்கு என்னிடம் விளக்கம் கேட்டது மட்டுமின்றி, ஸ்ரீ சகோதரரும் வந்து அது சீன மொழியா.... ஜப்பான் மொழியா.. என்று டவுட்டை விரிவாக்கி விட்டு சென்றிருக்கிறார். உங்களுக்கு தெரிந்தால் விவரித்து சொல்லவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆனால் சகோதரர் நெ. த அவர்கள் அரை விநாடி பின் பிறந்து விட்ட காரணத்தாால், கீதா ரெங்கனை "அக்கா" என அழைப்பதாக சகோதரி கீதா அவர்கள குறிப்பிடுகிறார்.
ReplyDeleteஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய 1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.//
ஹா ஹா ஹா ஹா ஆமாம் கமலாக்கா...நீங்க கல்லூரினு சொன்னதால..நெ த என்னை அக்கா என்றவர் இப்ப சேச்சியையும் பிடித்துக் கொண்டிருக்கார் ஹா ஹா ஹா ஹா..சரி சரி இப்ப அக்கானா நான் ஸ்ரீராம் கீதாக்கா ஏஞ்சல் நெல்லை எல்லாம் என்ன ஆச்சி அதிராவை விடப் பெரியவங்களா என்ன? கீதாக்கா இன்னும் குயந்தையாக்கும்!! இப்பத்தான் பொறந்துருக்காங்க...ஹா ஹா ஹா
கீதா
கீதா .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கமலா சிஸ்டர் சொன்ன பின்பும் கமலாக்காவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteசகோதர் நெல்லை தமிழன் இன்னமும் "அக்காவை" எத்தனை மொழிகளில் கற்று வைத்திருக்கிறாரோ... ஹா ஹா ஹா ஹா
Deleteநான் சரி.. எப்படி அழைத்தால் என்ன... என்று நான் எவ்வளவோ சமாதானபடுத்தியும் " இன்னமும் முடிவாகாமல் எப்படி அக்காவென" என வன்மையாக கண்டித்து ஆச்சி அதிரா பொயிங்கி ஆட்சேபனை குரல் எழுப்பி விட்டார்... வேறு ஒன்றுமில்லை. ஹா ஹா ஹா ஹா ஹா. .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பயணம் மகிழ்வாகவும் சிறப்பாகவும் அமையட்டும் .....
ReplyDeleteசுவையான பதிவு..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/உங்கள் பயணம் மகிழ்வாகவும் சிறப்பாகவும் அமையட்டும் .....
சுவையான பதிவு../
வாழ்த்துகளுக்கும், சுவையான பதிவு என ரசித்தமைக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா உங்கள் குலதெய்வ வழிபாடு சிறப்பாக நன்றாக அமைந்திடட்டும்.
ReplyDeleteஸ்ரீராம் சொல்லியிருப்பது போல இப்ப வரிசையாக எல்லாரும் குலதெய்வ வழிபாட்டிற்குச் சொன்று வரும் விஷயம் நடக்கிறது நம் எபி குடும்பத்தில்...மகிழ்ச்சி..
இறைவன் நம் எல்லோருக்கும் நல்லது செய்திடட்டும்!
கீதா
நானும்கூட தற்சமயம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று கொண்டு வந்து இருக்கிறேன். நாங்கள் தங்குவதற்கு அறைகள் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அதற்காக...
Deleteஆனால் ஹெட்ஆபீஸ் வள்ளியூர் போகவில்லை ப்ராஞ்ச் ஆபீஸ் உத்திரகோசமங்கை அருகில் இதம்பாடல்.
மீண்டும் திங்கள்கிழமை செல்கிறேன்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/கமலாக்கா உங்கள் குலதெய்வ வழிபாடு சிறப்பாக நன்றாக அமைந்திடட்டும்./
தங்கள் வேண்டுதலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.
இறைவன் நம் எல்லோருக்கும் நல்லது செய்திடட்டும்!
நானும் அவ்வண்ணமே வேண்டிக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தாங்களும் குலதெய்வ கோவில் விஷயமாக சென்று விட்டு வருவதறிந்தேன். மகிழ்ச்சி. தாங்கள் குறிப்பிட்டுள்ள ஊரின் பெயர்கள் அறிந்தவைதான். கட்டி முடித்ததும் நலமுடன் சென்று வாருங்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செல்லங்களை வளர்க்க யாரேனும் கூட ஒருவர் இருந்தாக வேண்டும். ஊருக்குச் செல்லும் போது அவர்களை எங்கு விட முடியும்? நாங்கள் குடும்பத்துடன் ஊருக்குச் செல்ல நேர்ந்த போது எங்கள் செல்லங்களை (அப்போது இருவர் இருந்தனர். இப்போது ஒரு பெண் தான் இருக்கிறாள்) என் மகனின் சித்தப்பா பார்த்துக் கொள்வார். அதனால் பிரச்சனை இருக்கவில்லை. எங்கள் வீட்டில் செல்லப் பிரியர்கள் அதிகம் என்பதால் இதுவரை பிரச்சனைகள் இல்லை.
ReplyDeleteஎன்றாலும் செல்லங்கள் வளர்ப்பதில் இப்படியான யதார்த்த பிரச்சனைகள் உண்டு. ஆட்கள் இல்லை என்றால் ஒன்று - அவற்றை கேர் டேக்கர் கென்னலில் விட்டுப் போகும் பொருளாதார வசதி இருக்கணும். பொருளாதார வசதி இருந்தாலும் அங்கு விடுவதற்கு நம் மனது ஒத்துழைக்கணும். இல்லை என்றால் வீட்டில் யாரேனும் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
செல்லங்கள் வளர்ப்பதில் உள்ள பிரச்சனைகளை நன்கு அலசி சொல்லியுள்ளீர்கள். உங்கள் வீட்டில் அதன் பிரியர்கள் இருப்பதால் அட்ஜஸ்ட் ஆகிறது. எனக்கும் ஆசையிருந்தும் இதெல்லாம் சரிபட்டு வராது என ஆசையை விட்டு விட்டேன். கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நமக்கு வேண்டும் கட்டுப்பாடு...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/நமக்கு வேண்டும் கட்டுப்பாடு./
ரத்தன சுருக்கமாக உண்மையை உணர வைக்க வரிகளை நினைவுபடுத்திய மைக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் குலதெய்வ வழிபாடு நல்லவிதமாக அமைந்திடட்டும்.
ReplyDeleteவாட்சப் கவனமாகத்தான் கையாளவேண்டும்.
செல்லம் எங்கள் வீட்டிலும் இருக்கிறான் ஆனால் பார்த்துக் கொள்ள ஆள் இருப்பதால் நாங்கள் எங்கும் செல்ல முடிகிறது.
உங்கள் பிறந்த நாளுக்கு எங்கள் தாம்தமான வாழ்த்துகள். நாங்கள் ஆங்கிலப் பிறந்தநாள்தான் நினைவு வைப்பது எளிதாக இருக்கிறது என்பதால் அதைத்தான் கொண்டாடுகிறோம்.
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
முதலில் தங்கள் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
ஆம் வாட்சப் உரையாடல்கள் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.
வீட்டில் தகுந்த முறையில் பராமரிக்க ஆட்கள் இருந்தால்தான் செல்லங்களை செல்லமாக வளர்க்க முடியும். உண்மைதான்.
தாங்கள் ஆங்கில தேதியின்படி பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி. இப்போது அனைவருமே அப்படித்தான் நினைவில் வைத்து கொண்டாடு கின்றனர். கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குல தெய்வ வழிபாடு!..
ReplyDeleteஆகா.. நாங்க கும்புட்டுட்டு வந்துட்டமே!...
நீங்களும் நல்லபடியா போய்ட்டு வரணும்...
போய்ட்டு வந்து - பதிவுலக பரிவாரங்களுக்கு
நல்லதா ஒரு பொங்கல் வெய்க்க வேணும்!...
அடடே... ஆமாம். உங்களை விட்டு விட்டேனே...!
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/குல தெய்வ வழிபாடு!..
ஆகா.. நாங்க கும்புட்டுட்டு வந்துட்டமே!/
ஆமாம் தாங்கள்தான் இந்த வருடத்தில் எ. பி குடும்பத்தில் முதல்ஆளாக செண்று தரிசித்து வந்தீர்கள். பதிவிட்டு நாங்களும் தரிசனத்தில் கலந்து கொண்டோமே...
/நீங்களும் நல்லபடியா போய்ட்டு வரணும்...
போய்ட்டு வந்து - பதிவுலக பரிவாரங்களுக்கு
நல்லதா ஒரு பொங்கல் வெய்க்க வேணும்!.../
வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள். பொங்கல்தானே... நல்லபடியா போய் விட்டு தரிசனம் பண்ணிகிட்டு வந்ததும் எ. பி கிச்சனில் ஒரு பொங்கல் வைத்து விடலாம். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் அனைவருக்கும்
ReplyDeleteஅனைவரின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள். பதிலளிக்க கொஞ்சம் தாமதமாகிறது. மன்னிக்கவும். காலையிலிருந்தே ஏதோ வேலைகள்.
நன்றி...
ஸ்ரீராமின் செல்லம் மறைந்த செய்தி மிக வருத்தத்தை அளிக்கிறது.......
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
எங்கள் வீட்டு உறவின் (என் நாத்தனார் பெண் வளர்த்து வந்த செல்லம்.) செல்லத்தின் மறைவுக்கு தாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருப்பதற்கு நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மாமி நான் மதுரைத்தமிழன் என்று பெயர் வைத்து அழைத்து கொண்டாலும் என் சொந்த ஊர் என்னவோ செங்கோட்டைதான்....அப்ப நானும் திருநெல்வேலியைஸ் சார்ந்தவன் தானே....
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
ஆகா. தாங்களும் தி. லிதானா. ரொம்பவும் சந்தோஷம். மதுரைத்தமிழன் எனப் பெயர் கண்டு மதுரைவாசியோ என நினைத்துக் கொண்டேன். அனைவரும் தி. லி யிலிருந்து படையெடுத்து வந்து வலைத்தளம் அமைத்துள்ளோமோ? நாம் அனைவரும் வீரபாண்டிய கட்ட பொம்மனின் உறவுகளோ என்னவோ? கோட்டைத் தளங்களென நம் வலைத்தளங்கள்...தாங்கள் என் தளத்திற்கு வந்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கே எல்லாம் பெரியவளா இருக்கிங்க நான் மற்றும் என்றும் 16 ஆக இருக்கிறேன்
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்றுத், மீ தான் 16 என நீங்க வேறு ஏதும் இலக்கம் ஜொள்ளுங்கோ:))
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
ஆமாம். சகோ இங்கே எல்லோரும் தங்களை விட பெரியவங்கதான். அதனாலே (முக்கியமாஅதிரா) பெரியவங்க சொல்றதை கேளுங்க.. அதிரா அவருடைய இலக்கத்தை தவிர்த்து வேறு எதாவது இலக்கம் சொல்லச் சொல்கிறார். பேசாமே 16 ஐ மாத்தி 61 என்று சொல்லி விடுங்களேன். ஒரு ஐடியாதான். ஹா ஹா
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு சகோதரி கமலாவுக்கு,
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
குலதெய்வ வழிபாடு குடும்பத்தை விளங்க வைக்கும். ஆகக் கூடி நெல்லைத் தமிழர்கள்
நிரம்பிய இடமாகிவிட்டது எங்கள் ப்ளாக்.
பயணங்கள் நிரம்பிய வாரம் இது.
அனைவரும் நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
/குலதெய்வ வழிபாடு குடும்பத்தை விளங்க வைக்கும். ஆகக் கூடி நெல்லைத் தமிழர்கள்
நிரம்பிய இடமாகிவிட்டது எங்கள் ப்ளாக்./
உண்மைகளை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் சகோதரி. குல தெய்வங்களின் மகிமையால், எங்கள் ப்ளாக்கில் நெல்லை வாசிகள் அதிகம் இருப்பது அறியப்படுகிறது.
ஆம். பயணங்கள் நிரம்பிய மாதமிது..
தங்களின் மனம் நிறைந்த பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆவ்வ்வ்வ் சில சமயங்களில் பலரின் போஸ்ட் ஒரு நாளில் வந்திட்டால்.. அதில் பழையது கண்ணுக்கு காணாமல் கீழே போய் விடுது.. அவற்றில் ஒன்றுதான் உங்களோடதும்... இப்போ ஏதவது புரியுதோ?:)..
ReplyDeleteஅதாவது அதிரா என்ன சொல்றா எண்டால்:), தான் லேட்டா வந்தமைக்குக் காரணம் சொல்றாவாம்:)) ஹா ஹா ஹா.
//விளையாட்டுக்காக பிறந்த கதை...//
தலைப்பிலேயே தப்பிருக்குது யுவர் ஆனர்ர்:)) இது விளையாட்டுக்காகப் பிறந்த கதை அல்ல:).. விளையாட்டாகப் பிறந்த கதை:)) நேக்கு[மட்டும்தான் இங்கின] டமில்ல டி ஆக்கும்:))
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தாங்கள் தாமதமான வருகைக்கு காரணமே சொல்ல வேண்டாம். தாங்கள் வருகை தந்ததே எனக்கு மகிழ்வளிக்கிறது. (இறைவனின் வருகைக்காக தவம் செய்யும் போது தாமதங்கள் எழுவது இயல்புதானே..
மீ (நீ) இறைவனா எனும் விவாதங்களும், தாமதமின்றி எழுவதற்குள், சொல்லி முடித்து விடுகிறேன். இறைவனும், ஞானியும் அமர்வது அடுத்தடுத்த இருக்கைகள்தானே..இதை ஒரு பதிவின் கருத்துக்களில் நான் குறிப்பிட்டிருந்தேன். இறைவன் நம் தவத்திற்கிணங்கி ஞானியைதான் முதலில் அனுப்புவார். (அப்போதுதான் நம்முள் ஆத்ம ஞானம் உண்டாகி இறைவன் பரிபூரணமாக நம் கண்ணுக்குள் தெரிவார்.) ஞானியின் வரிசைக்குள் தாங்களும் இணைந்து விட்டதில் மகிழ்ச்சி. அனைத்துப் பதிவுகளிலும் என் வருகை அனேகமாய் தாமதமாக இருந்திருக்கும்... அதைப்பார்த்தே தாங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் . ஹா ஹா ஹா ஹா. ஸோ வருகைக்கு நன்றி..
தலைப்பிலேயே தப்பிருக்குது யுவர் ஆனர்ர்:)
தலைப்பில் குறை கண்டுபிடித்து வாதாடி தெளிவாக்கி மற்றும் ஒரு தலைப்பை சூட்டிய தங்கள் தமிழ் புலமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் டி என்றால் என்னவாக்கும்... அது ஒரு பட்டம் என்ற அளவில்தான் என் சிறிய மூளைக்குள் ஓரத்தில் உதிக்கிறது. சரியா...ஹா ஹா ஹா ஹா நன்றி..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ ஏப்ரல் 7 உங்கள் பிறந்தநாளோ? எங்கள் அண்ணிகும் அன்றுதானே பிறந்த நாள் அவ்வ்வ்வ்:))..
ReplyDelete// சகோதரி அதிரா அவர்கள் மன்னிக்கவும் ..///
நான் இங்கு எதையும் படிக்கல்லே:)).. இன்னொன்று நீங்க கஸ்டப்பட்டு சகோதரி எல்லாம் எழுதத் தேவையே இல்லை. அதிரா என ஸ்ரெயிட்டாவே கூப்பிடுங்கோ மி ஒண்ணும் டப்பா எடுக்க மாட்டேன்:))..
இப்போ பாருங்கோ என்னை விட 10 வயதில் பெரியவரான:)) ஸ்ரீராமை, மற்றும் 15 வயது பெரியவரான கீதாவை எல்லாம் பெயர் சொல்லித்தானே அழைக்கிறேன்ன்..:) அவர்கள் ஒண்ணும் கோச்சுக்கவே இல்லை:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு ஓடும் ரெயின் ஜன்னலால எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி
பதிவை படிக்காமலே எல்லாவற்றையும் படித்த அதிராவுக்கு (ஸ்ரெயிட்டாவே கூப்பிடுங்க... சொன்னது நம்பி கூப்பிட்டு விட்டேன்.) நன்றிகள்.
நீங்கள் உரிமையோடு அழைக்கும் அனைவரின் வயது விபரங்கள் தெரிந்து கொண்டேன். படிச்சு பத்திரமா வச்சிருக்கேன். கிழிக்க மனம் வரவில்லை. தங்களுக்கே தேவைபடும் சமயம் எடுத்துக் கொள்ளலாம்.அவர்கள் கோபிக்கும் சமயம் சமாதானத்துக்கு மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஹா ஹா ஹா ஹா
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// (எனக்கு போட்டியா இவங்க அப்போதையிலிருந்தே இங்க ஞானியா? என சகோதரி அதிரா அவர்கள் ஆனந்தத்தோடு விய(ழு)ந்து விய(ழு)ந்து அதிசயப்பது புரிகிறது. ஹா.ஹா ஹா ஹாா..) ///
ReplyDeleteஎனக்கு சிஷ்யைகள் கிடைச்சிருப்பது மிக்க மகிழ்ச்சி:).. கீதாவும் எபவோ என் ஆச்சிரமத்தில் இணைஞ்சிட்டா தெரியுமோ?:).. ஆண் சிஷ்யர்கள்தான் இணையாமல் அடம் புய்க்கினம்ம்:))
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/எனக்கு சிஷ்யைகள் கிடைச்சிருப்பது மிக்க மகிழ்ச்சி:).. கீதாவும் எபவோ என் ஆச்சிரமத்தில் இணைஞ்சிட்டா தெரியுமோ?:).. ஆண் சிஷ்யர்கள்தான் இணையாமல் அடம் புய்க்கினம்ம்:))/
உங்களுக்கு "முன்பே அப்போதை யிலிருந்தே" அந்த வரிகளை நீங்க கவனிக்கவேயில்லையா? சரி..சரி.. மறப் (மன்னி) போம். நாம் எப்போதும் ஒன்றுக்குள் ஒன்று இல்லையா? (பதிவர் இனம்) ஹா ஹா ஹா.
இயன்றால் நானும் இணைகிறேன். ஆனாலும் தனித்தனியாக ஆரம்பிப்பது நல்லது. எப்படி என் யோசனை சிறந்ததா? ஹா ஹா ஹா ஹா
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நமக்கு தெரிந்த பதிவர்கள் அனைவருமே ஒரிரு, இல்லையேல் நான்கைந்து, அதுவும் இல்லையேல் ஆறேழு, அப்படியும் இல்லையென்றால், ஏழெட்டு வயது வித்தியாசத்தில் இருப்போம்.///
ReplyDeleteநோஓஓஓஓஓஓஒ சந்தடி சாக்கில இப்பூடி அதிராவையும் இதற்குள் இணைச்சிட்டீங்க.. மீக்கு இப்போ சுவீட் 16 எனில் எத்தனை வயசு வித்தியாசம் என நீங்களே கணக்குப் பார்த்துக்கோங்க:) ஹா ஹா ஹா.
//ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய 1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார்///
கீதாக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
பதிவின் சில இடங்களை ரசித்து (ரசித்தா..... கர்ர்ர்ர்ர்ர்ர.....என ஆட்சேபனை குரல் வருகிறது.)
கருத்துக்கள் இட்டிருப்பதற்கு நன்றிகள். ஐயோ.. சந்தடி சாக்கில் தங்கள பெயரையும் பதிவர் என்ற முறையில் இழுத்து விட்டேனா... ஆனால் நம் எல்லோருக்குமே "இனிப்பின் பதினாறு" என்ற நாமகரணத்தை சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் நேற்றே வைத்து விட்டார்களே.. உங்க காதுக்கு எட்டி விடாமல் என்னை பார்த்துக்க சொல்லிட்டு, அவங்களே அந்த பெயரையும் உங்களுக்கு சூட்டி விட்டார்களா? ஹி ஹி ஹி ஹி
/கீதாக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா/
சகோதரி கீதா ரெங்கனுக்கு ஆடசேபனையா? எப்படி வேண்டுமானலும் அழைத்து விட்டுப் போகட்டும். விடுங்கள்... நாம்தான் முற்றும் துறந்தவர்களாயிற்றே. கோபம் என்ற உணர்ச்சிக்கு ஆளாக கூடாது. ஹா ஹா ஹா ஹா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்கேயும் இந்த வயசுப் பிரச்சனை ஓவராகத்தான் இருக்கு:) வெளிநாட்டில் நமக்கு இப்பிரச்சனை மிகக் குறைவே.. நம்நாட்டு நட்புக்களை பெரும்பலும் பெயர் சொல்லியே அழைக்கிறோம்.. நெருங்கிய உறவுகள் எனில் மட்டுமே முறை சொல்கிறோம்.. எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு..
ReplyDeleteவலை உலகிலும் எனக்கு எல்ல்லோரையும் பெயர் சொல்லி அழைப்பதே விருப்பம், ஆனா நம்மவர்கள் சிலருக்குப் பிடிக்காது எனும் பயத்திலேயே முறை சொல்ல வேண்டி வருது.. மற்றும்படி பெயர் சொல்லி அழைத்திட்டால் பிரசனை இல்லையே...
நல்லபடி குலதெய்வத்தை தரிசித்து விட்டு வாங்கோ வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/வலை உலகிலும் எனக்கு எல்ல்லோரையும் பெயர் சொல்லி அழைப்பதே விருப்பம், ஆனா நம்மவர்கள் சிலருக்குப் பிடிக்காது எனும் பயத்திலேயே முறை சொல்ல வேண்டி வருது.. மற்றும்படி பெயர் சொல்லி அழைத்திட்டால் பிரசனை இல்லையே/
வாஸ்தவமான பேச்சு. எனக்கும் இம்முறை பிடித்திருக்கிறது. ஆனால் மரியாதை நிமித்தமாக பார்க்கும் போது அது ஒத்து வருமா என தெரியவில்லை.
அலசலுக்கு நன்றி.
குலதெய்வ வழிபாட்டை நல்லபடியாக முடித்து வர வாழ்த்துகள் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ... அதிரா தூங்காமல் கதைக்கிறாவோ?
ReplyDeleteஎண்ட குருவாயூரப்பா....
ஹா ஹா ஹா இதைக் கவனிக்காமலே நித்திரையாகிட்டேன்:).. சனிக்கிழமை என்பதால் எங்கள்புளொக்கில் மீ த 1ஸ்ட்டாக் குதிக்க நினைக்காமல் ஏழியா நித்திரையாகிட்டேன்:)..
Deleteவாழ்த்துகள். குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமைய பிரார்த்தனைகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
தங்களுடைய வாழ்த்துக்களுக்கும், குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமைய பிரார்த்தனைகள் செய்வதற்கும் என் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
நான் தங்களின் சில பதிவுகளை தவற விட்டு விட்டேன் என நினைக்கறேன் இனித்தொடர்கிறேன். தாங்களும் என் பதிவுகளுக்கு வந்து ஊக்கமிகு கருத்துரைகள் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான்தான் சொன்னேனே, உங்களுக்கு எழுத வருகிறது என்று, அதற்கு இந்தப் பதிவே ஒரு சாட்சி. ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று கடைசி வரை எதிர்பார்க்க வைத்து விட்டு கடைசியில் பெரிதாக ஒன்றும் சொல்லாமல் ஒரு பதிவு போட்டு விட்டீர்களே!! சபாஷ்! ஹாஹாஹா!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி. எல்லாம் தங்களைப் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்.தங்களது ஊக்கமிகும் கருத்துரைகள் என் எழுதும் ஆர்வத்தை என்றும் குறையாமல் வைத்திருக்கும் என நம்புகிறேன். கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நண்பரே,
ReplyDeleteதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
https://www.tamilus.com
– தமிழ்US
வணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.