காலங்களுக்கு ஏற்றபடி பழக்க வழக்கங்கள் எத்தனையோ மாறுதல்கள் வந்தாலும், பழைய நினைவுகள், அதனுடைய சுவையான அனுபவங்கள், அதன் நிழலாக சின்ன சின்ன சந்தோஸங்கள் இத்தனையும் ஞாபகம் வராமல் இருப்பதில்லை.
சின்ன வயதிலிருந்தே எனக்கு பிள்ளையார் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு விருப்பமாய், பய பக்தியாய், ஒரு உறவின் அருகாமையோடு அதைவிட மேம்பட்டு சொல்லப்போனால், இதமாக தோளணைக்கும் சினேகிதத்தோடு, அவருடன் உரையாடி வணங்கி மகிழ்வது என் பழக்கம் . ( இதிலென்ன அதிசயம் எங்களுக்கும் அப்படித்தானே! ! என்று அனைவரும் எண்ணலாம்...) உண்மை. !அனைவருக்கும் அவரது எளிய மனப்பான்மை மிகவும் பிடிக்கும். அவருக்கு பெரிய அழகான கோவில்கள்தான் வேண்டுமென்பதில்லை . சின்னதாய் இடமிருந்தாலும், நாலுசுவர்களுக்கு மத்தியிலும், நாலு கம்பியில் சட்டமடித்த சின்ன கதவுக்கு அப்பால் வீட்டு வெளிவாசல் மதில்சுவரகளில் சிறிதளவு இடத்தில் கூட தன் தேவையைபற்றி கவலையுறாது புன்னகைபூத்த விழிகளோடு நமக்காக அமர்ந்திருப்பார். சிலுசிலுவென காற்றடிக்கும் குளக்கரையிலும், அரச மரத்தின் கீழும் நாம் எங்கெல்லாம் அழைக்கிறோமோ அங்கெல்லாம் அவர் வரத் தயங்குவதில்லை. கடும் வெய்யிலோ, கடும்பனி பெரும்மழையோ எதையும் பொருட்படுத்தாது நமக்காக மரத்தடியில் அமர்ந்து நாம் வேண்டுவனவற்றை அருள தயங்குவதில்லை. அண்ட சராசரங்களையும், பஞ்ச பூதங்களையும் தன்னுள் அடக்கியவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகி விடுமா என்ன......
''பிடித்து வைத்ததெல்லாம் பிள்ளையார்'' என்ற பேச்சு வழக்குபடி எந்தப் பொருளைக்கொண்டும் அவரை நினைத்து பிடித்து வைத்தாலும், அந்த பொருளில் அவர் ஆவாஹனம் ஆகி நம்முடைய பூஜைகளை ஏற்றபடி, வேண்டும் வேண்டுதல்களை பரிபூரணமாக தந்தருள்வார். ஆடம்பர அலங்காரமெல்லாம் அவருக்கு தேவையில்லை. வாசமுள்ள மலர்களால் அவரை பூஜித்தால்தான் நம் வாழ்வை சிறக்க செய்வார் என்றில்லை. எளிய அருகம்புல் மாலையானாலும், எருக்கன்பூவில் தொடுத்த மாலையானாலும், மகிழ்வோடு அணிவித்தால் போதும் மனமுவந்து ஏற்றுக்கொள்வார். எளிய தெய்வம், முழுமுதல் தெய்வம், யானை முகத்தோன், கண நாதா இப்படி என்ன வேண்டுமானாலும் இவரை சொல்லலாம்.. ஓம் எனும் ஒரு மந்திரத்தில் அடக்கமானவர்.
இந்தப் பிள்ளையாரை பற்றி கேட்டு சொல்லி வளர்ந்ததினால், என் மகளுக்கும் பிள்ளையார் என்றால் மிகவும் இஸ்டம். அவளின் பதிநான்காவது வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு பிள்ளையார் படம் வெறும் வெற்றுத்தாளில்
வீட்டில் இருக்கும் கலர்பென்சில்களை கொண்டு வரைந்த படம் இது. முழுமனதாக விருப்பமாக வளர்ந்திருக்கிறாள். பிள்ளையாரை பற்றி நிறைய சொல்லியிருப்பதால் அவள் உள்ளத்திலிருப்பது அப்படியே படமாக அவர் அவதரித்திருப்பதாக எனக்கு தோன்றியது. வேறு மாற்றங்கள் செய்தால் படத்தின் தன்மை மாறுபட்டு விடும் என்பதினால், எவ்வித திருத்தங்களும் செய்யாமல், (கலர் மாற்றம்) அப்படியே பூஜையறையில் படங்களோடு வைத்திருந்தேன். ஊர், வீடு மாற்றங்களினால், பேக்கிங் பண்ணும் போது அது புத்தகங்களோடு கலந்திருந்து விட்டு இப்போதுதான் மறுபடியும் என் கண்ணில்பட்டது. இதை பார்த்தவுடன் அன்றைய நாளின் நினைவுகள், அவளை பாராட்டியது அத்தனையும் நினைவுக்கு வந்தது. பழைய நினைவுகள் என்றுமே இனிதானவையில்லையா ? அந்த இனிமையை ஒரு பதிவாக உங்களுடன் பகிர்ந்துள்ளேன். என் மகள் வரைந்த பிள்ளையாரை நீங்களும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.
மிகவும் நன்றியுடன்
உங்கள் சகோதரி.....

உங்கள் மகள் மிக அழகாக வரைந்திருக்கிறார். படம் மிக மிக அழகு. இப்போதும் படங்கள் வரைகிறாரா உங்கள் மகள்? பிள்ளையாரின் எளிமை பற்றி நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் உண்மை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteதாங்கள் முதலில் வருகை தந்து மனதாற தந்த கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இப்போது அவள் வரைவதில்லை. காலம் திசை திருப்பி விட்டது. படிப்பு, வேலை, திருமணமென்று சுழற்சியுடள் செல்கிறது. ஆனால் இன்னமும் ஆர்வம் இருக்கிறது. அனைத்திற்கும் கடவுள்தான் உறுதுணையாய் இருக்க வேண்டும். தங்கள் பாராட்டுகளை என் மகளிடம் கூறுகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிள்ளையாரின் ஓவியம் அருமை வாழ்த்துகள்.
ReplyDeleteஉண்மை எளிமையானவரே கணேசர்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்னை உமையின் மைந்தர் விக்கினேஷ்வரர் மிகவும் எளிதானவர்.
என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாவ்.... பிள்ளையார் ரொம்பவே அழகாய் இருக்கிறார் - உங்கள் மகளின் கைவண்ணத்தில்.
ReplyDeleteபாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
யதேச்சையாக வரைந்த ஓவியந்தான் இது. வரையும் கலையில் அவளுக்கு ஆர்வம் உண்டு. ஆனால் காலமும், நேரமும் ஒத்து வரவில்லை. அனைத்தும் அவன் செயலல்லவா...
என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் சிறுவயதில் வரைந்த பிள்ளையார் படங்கள் நினைவுக்கு வந்துவிட்டது. நன்றாக வரைந்திருக்கிறார் உங்கள் மகள். வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteமுதலில் எனது தளத்திற்கு முதல் வருகை தந்த தங்களுக்கு நனறிகள்
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். இனியும் தொடர்ந்து என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளித்தால் நன்று.
அப்படியா.. நீங்களும் சிறு வயதில் பிள்ளையார் படங்கள் வரைந்துள்ளீர்களா? மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கண்டிப்பாக கூறுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிள்ளையார் படம் அழகு.மகள் நன்றாக வரைந்து இருக்கிறார்,சிறு வயதில் இவ்வளவு அழகாய் வரைய முடியும் என்றால் இப்போதும் மேலும் அழகாய் வரைவார் அல்லவா?
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது போல் பிள்ளையார் எளிமையான தெய்வம். எனக்கு பிடித்த தெய்வம்.
சதுர்த்தி வரப் போகிறது.
படத்தை பிரேம் போட்டு வையுங்கள்.
நினைவுகள் அருமை.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
என் மகளை பாராட்டி வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ. தற்சமயம் மகளுக்கு ஆர்வமிருந்தும் முன்பு போல் ஒரு முனைப்புடன் வரைய முடியுமா என்பது தெரியவில்லை. தங்கள் அனைவரின் பரிபூரண ஆசிகள் அவளுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.
சதுர்த்தி வரப் போகிறது என நினைவுபடுத்தி படத்தை பிரேம் போட்டு வையுங்கள் என்று அன்புடன் தாங்கள் கூறிய அறிவுரை சாட்சாத் அந்த தெய்வமே வந்து சொன்ன மாதிரி மெய்சிலிர்த்துப் போய் விட்டேன். அன்பான அறிவுரைக்கு மிகவும் நன்றி சகோதரி. நானே நினைத்துக் கொண்டேதான் இருந்தேன்.நீங்கள் கூறி விட்டீர்கள்..
என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.
ReplyDeleteவணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil Us
வணக்கம்
Deleteதங்கள் தகவல்களுக்கு நன்றி.
தங்கள் மகளின் கைவண்ணத்தில் பிள்ளையார் ஓவியம் மிக அழகு. இதையொட்டி நடந்த நிகழ்வுகளும் சுவையாய் உள்ளன. வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் என் மக்களிடமும் கூறுகிறேன்.
இரண்டு தினம் வலைத்தளம் வர இயலவில்லை அதனால் தங்கள் கருத்துக்கு தாமத பதில் தந்துள்மைக்கு வருந்துகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிள்ளையார் ரொம்பப் பிடிக்கும். ஃப்ரென்ட்லி கடவுள். உங்கள் மகள் மிக மிக அழகாக வரைந்துள்ளார். வாழ்த்துகள் பாராட்டுகள். பதிவும் ரொம்பவே அருமை.
ReplyDeleteஇருவரின் கருத்தும்
கீதா: நான் கூட வெற்றிப் பிள்ளையார் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்..கதையாய்....பிள்ளையாரை நான் ரங்கோலியாகவும் கல்லூரி சமயத்தில் வரைந்ததுண்டு. அப்புறம் எதுவுமே இல்லை....
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் பிள்ளையார் ஃபிரெண்ட் எனபதைஅறிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தோழனாக இருக்க யாருக்குதான் பிடிக்காமல் போகும்?
இருவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.
சகோதரிக்கு வணக்கம்.
தாங்கள் எழுதிய பதிவை நேரம் கிடைக்கும் போது தவறாமல் வாசிக்கிறேன். கல்லூரி சமயத்தில் ரங்கோலியாக பிள்ளையாரை வரைந்திருக்கிறீர்களா? வாழ்த்துக்கள்.. அதை படமெடுத்து இருந்தால் தங்கள் பதிவில் வெளியிட்டிருக்கலாமே? அவ்வாறு பதிவில் போட்டிக்கிறீர்களா?
என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சகோதரி. அன்பிற்கும் மிக்க நன்றி
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
Delete/இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சகோதரி. அன்பிற்கும் மிக்க நன்றி/
எ. பி யில் தங்கள் இணையத்திற்கு பிரச்சனை என ஸ்ரீராம் சகோதரர் சொல்லி அறிந்தும், மனதிற்கு சங்கடமாக இருந்தது. அனைத்து பதிவுகளுக்கும் தங்களது பொறுமையாக கருத்துகளை மிகவும் ரசித்துப் படித்து வந்தேன். என் பதிவுகளுக்கும் தங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அதனால்தான் உரிமையுடன் பிரார்த்தித்தேன்.
(என் சுயநலமும் அதில் சிறிது கலந்திருப்பதாக எனக்கு ஐயப்பாடு... ஹா ஹா ஹா ஹா ..)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.