Pages

Friday, March 23, 2018

வாழ்வின் இரு பக்கங்கள்.....


இந்த  மனித வாழ்க்கையில் பிறப்பிலிருந்தே ஜனனம், மரணம் என்றும், மற்றும், இறை நம்பிக்கையிலிருந்து மற்ற எந்த ஒரு விசயத்திற்கும், மாறுபட்ட இரு பக்கங்கள் இருந்து வருகின்றன. ஒரு வீட்டின் கதவுக்கு கூட உட்பக்கம், வெளிப்பக்கம் என்றும், ஏன் ஆலயங்களில் கூட உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்றும், அனைத்திலும் இந்த இரு பக்கங்கள் இருந்து நம்மை வழிநடத்திச் செல்கின்றன.

இறைவனை வணங்குவதில்,
ஆத்திகம், நாத்திகம் என்றும்
செயல் முறையில்,
சுத்தம், அசுத்தம் என்றும்,
சுவையை குறிப்பிடுகையில்,
இனிப்பு, கசப்பு என்றும்,
குணாதிசயங்களில்,
நல்ல குணம், தீய குணம் என்றும்,
வினைப் பயன்களை அனுபவிக்கையில்,
நல்வினை, தீவினை என்றும்
அதன் விளைவுகள் நெருங்கும் போது,
இன்பம், துன்பம் என்றும்,
இரு பக்கங்களும் நம்மை  சந்திக்கத்தான் செய்கின்றன.  

இன்னமும் இதைப் போல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இந்த துன்பம் வரும் சமயம் நம் மனமானது தளர்வுற்று கலக்கமடைந்து வேறு எந்த ஒரு  செயல்களில் ஈடுபட இயலாமல் செய்து விடுகிறது.
 
நாம் சாதரண மனிதர்கள். நமக்குள் தாங்கும் சக்தியாக உடல் பலம், மனோ பலம், ஆத்ம பலம், தெய்வ பலம் இவைகளை தோற்றுவிக்க  எத்தனையோ முயற்சிகள்  எடுக்கவும் இறையருளால் அவை கூடி வர வேண்டும்.


இவர்களுக்கு அது கை கூடியிருக்கிறது  ஏனெனில் இவர்கள் தெய்வங்களின் அருகாமையை உணர்ந்தவர்கள். இவர்களை படிப்பதால் நம் துன்பங்களை சிறிது களைய  முயற்சிக்கலாம். 
*"மனம் கலங்காதிருக்க..."*..... 

நான் படித்ததில் பிடித்தவர்கள்.........
படித்ததில் பிடித்தது........... 

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*


அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...
தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*
*ஜபமாக இருக்கலாம்...*
*தொழுகையாக இருக்கலாம்...*
*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*
மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும்
*"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."*
இருக்கலாம்.


இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடித்தாலும், எதை இழந்தாலும்,

*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே... எதையும் தாங்கும் சக்தி...ஆதலால் ...
*விடாது நாம் ஜபம் செய்வோம்...*
*தொடந்து தொழுகை செய்வோம்...*
*திடமாக பகவானை வழிபடுவோம்...*
*அன்பே கடவுள் என போற்றுவோம்...*
*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

*இந்த நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்...*


மேலே நான் எழுதியதோடு படித்ததில் பிடித்ததும் பதிந்துள்ளேன்.

நீங்கள் படித்தற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.....

12 comments:

  1. அருமை!!! சகோதரி!! அருமை!

    //*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*

    கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

    *ஆழ்ந்த நம்பிக்கை...*//

    ஆமாம்!! இதுதான்....நல்ல வழிகளையும் சொல்லியிருக்கீங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், விரிவான கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கடவுளிடம் ஆழந்த நம்பிக்கை அது ஒன்றே நம் துன்பங்கள் சிதற வழிவகுக்கும்.அதற்கு இறையருள் நமக்கு கிடைகக வேண்டும். பிராத்ததிப்போம்.நன்றி.

      மிக்க நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.


      Delete
  2. "கடவுள் நம்மோடு இருக்கிறார்" இதைத்தான் மனசாட்சி என்கிறோம் அது நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

    அதன் காரணமாக நாம் தவறு செய்ய, திருட தயங்குகிறோம். தவறிழைக்காத உள்ளம் யாருக்கும் பயப்படாமல் அமைதியாக வாழ்கிறது.

    நம் முன்னோர்களின் தத்துவங்கள் அனைத்துமே மனித வாழ்வுக்கு நன்மைக்காகவே... நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான உடனடி வருகைக்கும், விரிவான கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கடவுள் நம்மோடு இருக்கிறார்" இதைத்தான் மனசாட்சி என்கிறோம் அது நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது./

      உண்மையான வாசகம்.மனசாட்சிபடி வாழ்பவன் மனிதன். மனசாட்சியை மறந்து என்றொரு நாள் அவன் தவறிழைக்க துணிகிறானோ அன்றே தெய்வம் அவனை விட்டு விலகுகிறது.
      அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஆழமான அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      மனமார்ந்த நன்றிகளுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சொன்னவிதம் படிப்படியாக... அருமை... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் என் பதிவினுக்கு உடனடியாக வந்து கருத்துக்கள் தருவது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்துக்களை மென்மேலும் சிறக்கச் செய்யுமென நம்புகிறேன். மிக்க நன்றிகள் சகோ.

      மனமுவந்த நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. //அந்த ஆத்ம பலமே... எதையும் தாங்கும் சக்தி...ஆதலால் ...
    *விடாது நாம் ஜபம் செய்வோம்...*
    *தொடந்து தொழுகை செய்வோம்...*
    *திடமாக பகவானை வழிபடுவோம்...*
    *அன்பே கடவுள் என போற்றுவோம்...*
    *உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*//

    சரணாகதி இறைவனிடம்.

    அருமையான பதிவு.
    படித்த செய்திகளும், பகிர்ந்த செய்திகளும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான உடனடி வருகைக்கும், விரிவான கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சரணாகதி இறைவனிடம்./
      ஆம். உண்மைதான் சகோதரி. எவறொருவர் முழுமையாக இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுகிறரோ அதன் பின் அவரை வழிநடத்தி கொண்டு செல்வது "அவன்" பொறுப்பு.
      அழகாக கூறினீர்கள்.என்னை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றிகள்.

      நன்றிகளுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. Life is double-sided;
    There’s a wrong side and a right side; A sad side and a happy side.
    There’s a good side and a bad side; A black side and a bright side.

    So if things seem dark to you, just change your thoughts about it.
    Life will look quite different if you turn it best side out.

    இவை எனக்குப் பிடித்த வரிகள். உங்கள் வரிகளும் இவை போன்றே தோன்றுகிறது. நல்ல கருத்து

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Life is double-sided;
      There’s a wrong side and a right side; A sad side and a happy side.
      There’s a good side and a bad side; A black side and a bright side.

      So if things seem dark to you, just change your thoughts about it.
      Life will look quite different if you turn it best side out.
      உங்கள் பிடித்தமான வரிகள் நன்றாக இருந்தது,,மனமுவந்த பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மிக அருமையான பதிவு. கடவுள் நம்முள்ளே இருக்கிறான் என்பதையும், நம் மன பலத்தையும் நாம் அறிவதேயில்லை. சரியான அழகான உதாரணங்கள் மூலம் நன்றாகச் சொல்லியுயுள்ளீர்கள். நாம் வாழ்வை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று அழகாகச் சொல்கிறது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மிக அருமையான பதிவு. கடவுள் நம்முள்ளே இருக்கிறான் என்பதையும், நம் மன பலத்தையும் நாம் அறிவதேயில்லை./

      உண்மை! கடவுள் நம்முடன் இருக்கிறான் என்பதை சில சமயங்களில் நாம் உணர்வதில்லை.ஆனால் அவன் என்றுமே நம்முள்தான் குடி கொண்டுள்ளான். மிகவும் அழகாக கருத்துக்களை சொன்னமைக்கு மகிழ்ச்சி.

      தாமதமாக வந்து பதிலிடுவதற்கு மன்னிக்கவும். நேற்று முழுவதும் என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை.

      உடன் வந்து கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கு மீண்டும் என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete