Pages

Sunday, March 4, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 3)

"பார்வதி அம்மா உங்களை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்!" காவலாளி வந்து சொன்னவுடன், மதிய உணவு உணடதும்  தூங்காமல்  இருந்த சில குழந்தைகளை தூங்க பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி எழுந்து அருகிலிருந்த உதவியாளரை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வரவேற்பறையை நோக்கி நடந்தாள்.

இவள் சென்றதும் இவள்தான் பார்வதி என புரிந்து கொண்ட வந்தவன் இவள் அருகில் வந்து," பாட்டி என் பெயர் தியாகு!  நான்தான் உங்களை தேடி வந்திருக்கிறேன். நீங்கள்தான் பார்வதி என நினைக்கிறேன்!"  என்று சரளமாக பேச ஆரம்பிக்கவும்,  "உரிமையுடன் பாட்டி எனஅழைக்கும இவன் யார்? என்றபடி அவனை ஏறிட்டு கூர்ந்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாயிருந்தது.

"நீ....யாரப்பா? உன்னை.எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!  .... நீ ராஜுவோட பிள்ளைதானே ? எனக்கு தெரியும் என்றாவது ஒருநாள் அவனை பார்ப்போம்ன்னு உள் மனசு சொல்லிண்டேயிருக்கு. எங்கே அவன்?  அவன் எப்படிப்பா இருக்கான்? நல்லா இருக்கானா? பார்வதி சற்றே உணர்ச்சிவசப்பட்ட குரலில் படபடத்தாள்.

என்ன இருந்தாலும், சொந்த மகனைப் போல் வளர்த்து , வயிற்றில் பிறந்தவனை பறி கொடுத்ததிலிருந்து   அவனையே உயிராக நினைத்து வாழ்ந்து வரும் போது பிரிந்தவனாயிற்றே!  அந்த நாட்களை நினைத்த மாத்திரத்தில். அவன் மேல் இருந்த கோபங்கள், வருத்தங்கள் நொடியில் காணாமல் போக, பாசத்தினால் அவன் நலம் விசாரிக்கையில் பார்வதியின் குரல் தளர்ந்து கண்களில் நீர் துளிகள் வெளிப்பட்டன.

தான் நினைத்தது ஒரளவு நடக்கும் என்ற நம்பிக்கை தியாகுவின் மனதில் தோன்றியது. பார்வதியின் இரு கரம் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டவன் "என்னை ஆசிர்வதியுங்கள் பாட்டி!" என்றவனாய் அவள் காலில்  விழுந்தான். சட்டென்று "நன்றாயிருப்பா" என்றவள், "நீ யாரப்பா சொல்லவேயில்லையே? நானாக ஏதோ நினைத்து கேட்டதற்குக் கூட நீ பதில் சொல்லவில்லையே? " சட்டென அவள் குரலில் சுதாரிப்பு தெரிந்தது.

எழுந்து நின்ற தியாகு அவள் கைகளை பிடித்தபடி, "பாட்டி! நான்தான் உங்க பேரன். உங்க ராஜுதான் என் அப்பா! இளமையிலே அவர் செஞ்ச தப்புக்கு அவர் தண்டனை அனுபவிக்கிறார். அதனாலே அவர் நினைசாலும் இங்கே வரமுடியலே.  அவர் தப்பையெல்லாம் அவர் சொன்னதுனாலே அதை சரி பண்ண  அவருக்கு   பதிலா நா வந்திருக்கேன். உங்க கால்லே  விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் இந்த  பிறவியிலே நல்லகதி கிடைக்கும்னு சொல்லிகிட்டே இருக்கார் பாட்டி! அதனாலே செய்த தப்புக்கெல்லாம் பிராயசித்தமா உங்களை எங்களோடவே நிரந்தரமாக  வச்சுக்க ஆசைப்பட்டு உங்களை அழைச்சிகிட்டு போக வந்திருக்கேன். எங்களையெல்லாம் மன்னிச்சு ஏத்துகிட்டு எங்க கூட வந்து தங்குவீங்களா பாட்டி?" என்று உள்ளம் உருக பேசிக் கொண்டே போனவனை தடுத்த பார்வதி, "என்னப்பா ஆச்சு அவனுக்கு? என்றாள் பதட்டமான குரலில்.

"பாட்டி! அவர் எந்த சூழலில் உங்களைவிட்டு  சென்றார் . சென்றவிடத்தில் வந்த ஏமாற்றங்கள், சறுக்கல்கள் அதன் பின் அம்மா வீட்டு உறவின் மூலம் அவர் சற்று நிமிர்ந்து நி்ன்றது , அதனால் வந்த வசதிகளும், கண்டிப்புகளும் உங்களை மறக்க வைத்த சந்தர்பங்களை உருவாக்கியதையும், நான் பிறந்து வளர்ந்து ஒரளவு அனைத்தையும் புரிந்து  கொள்ளும் பக்குவம் அடைந்ததும் என்னிடம் கூறியிருக்கிறார்....நல்லா போய்கிட்டே இருந்த எங்கள் வாழ்க்கையில் அப்பாவுக்கு மீண்டும் ஒரு பலமானஅடி.! . இதில் அவர் உயிர் பிழைத்து இரு கால்களை இழந்து தவிக்கிறார்.. எப்படியோ என் படிப்பு முடிந்து  ஒரு வேலையும் பார்ககிறேன்.. பழையதை நினைத்து வருத்தப்படும் போதெல்லாம் ,"நம்பிக்கையுடன் காத்திருந்த அம்மாவை  விட்டு விட்டு வந்த பாவந்தான் இப்படியாகி விட்டது. நிர்கதியாய் எனக்காக காத்திருந்த அம்மாவை தவிக்கவிட்டு ஒடி வந்த கால்களை ஆண்டவன் எடுத்துக்கொண்டு ஒரடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைமையை உண்டாக்கி விட்டான் ! .இனி எப்படி அவங்க முகத்திலே முழிப்பேன், எப்போ எப்படி சந்திச்சு அவங்ககிட்டே மன்னிப்பு கேட்பேன்! அப்படியே கேட்டாலும், அவர்கள் என்னை மன்னித்து தன் மகனா ஏத்துப்பாங்களா?   என்று சொல்லிச்சொல்லி வருத்தபடுவார். உறவுகளையெல்லாம் மறந்து தொலைத்து விட்ட ஒரு நிலையிலே உங்களை எப்படியாவது கண்டு பிடிச்சு ,அப்பாவுக்கு அந்த பாக்கியத்தை என் மூலம் ஏற்படுத்தி தரலாம்னு அங்கே இங்கே விசாரிச்சு இப்போ உங்ககிட்டே வந்து நிக்கிறேன் பாட்டி!. எனக்காக என்கூட வருவீங்களா பாட்டி.!  கெஞ்சிய குரலில் சுருக்கமாக தான் அங்கு வந்த விபரத்தை கூறினான் தியாகு.

கண்ணில் வழிந்த நீரை துடைத்தெறிய மறந்து அவன் கூறியதை கேட்ட பார்வதியின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. "தன்னை விட்டு விட்டு சென்றதற்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ? கடவுளே இது உனக்கே நியாயமாயிருக்கிறதா? அன்று கோகி கூட "கடவுள் அவனுக்கு தண்டனை கொடுப்பான்னு" சொன்னாளே!  அதுக்காக இப்படியா?  ஐயோ! இதை என் பிள்ளை எப்படி இதுநாள் வரைக்கும் தாங்கியிருப்பான்! "வளர்த்த பாசத்தில் மனசுக்குள் சோகம் தாக்கி சற்றே நிலை குலைய செய்தது. "கடவுளே! இன்னும் என்னை என்னவெல்லாம் சோதிக்கப் போகிறாய்?"எனப் பெருமூச்சு விட்ட போது கனத்த மனசில் வலி தெரிந்தது.
(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:12


8 comments:

 1. //"நம்பிக்கையுடன் காத்திருந்த அம்மாவை விட்டு விட்டு வந்த பாவந்தான் ... நிர்கதியாய் எனக்காக காத்திருந்த அம்மாவை தவிக்கவிட்டு ஒடி வந்த கால்களை //

  இந்த இடம் நெகிழ வைத்தது என்றால்,

  //தன்னை விட்டு விட்டு சென்றதற்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ? கடவுளே இது உனக்கே நியாயமாயிருக்கிறதா? //

  இந்த இடம் கண்கலங்க வைத்தது. காத்திருக்கிறேன்,

  தொடர.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் உடனடி முதல் வருகைக்கும, விரிவான கருத்துரைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையின் சில இடங்களை மேற்க்கோளுடன் சுட்டி காண்பித்து கருத்திட்டிருப்பதற்கு மிக்க நன்றிகள்.
   தொடர்ந்து வந்து படிப்பதற்கு மகிழ்கிறேன். இனியும் தொடர்ந்து கருத்திட்டு என் எழுத்துக்களுக்கு ஊக்கமளித்திட வேண்டுகிறேன்

   உறவின் வருகைகளால் பதிலழிக்க தாமதமாகி விட்டது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. பெற்ற மனம் மட்டுமல்ல, வளர்த்த மனமும் பித்துதான்...
  தொடர்கிறேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /பெற்ற மனம் மட்டுமல்ல, வளர்த்த மனமும் பித்துதான்./
   உண்மை இரண்டுமே தாய் பாசம் அல்லவா...

   கதையை தொடர்கிறேன் என்றமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

   உறவுகளின் வருகையால் பதிலழிக்க தாமதமாகி விட்டது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. வளர்த்த பாசம் சோகமாக வடிவெடுத்து வார்த்தைகளாக வெளிப்பட்டபோது அவள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள். நினைத்துப்பார்க்கமுடியவில்லை.

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரரே

  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  வளர்த்த மகன் தன்னுடன் இல்லாமல் வேறு எங்கோ இருக்கிறான் என்று தினம் கவலையே நெஞ்சை வருத்தும் சோகமல்லவா!

  கதையை தொடர்வதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 5. ஐயோ! இதை என் பிள்ளை எப்படி இதுநாள் வரைக்கும் தாங்கியிருப்பான்! "வளர்த்த பாசத்தில் மனசுக்குள் சோகம் தாக்கி சற்றே நிலை குலைய செய்தது. "கடவுளே! இன்னும் என்னை என்னவெல்லாம் சோதிக்கப் போகிறாய்?"எனப் பெருமூச்சு விட்ட போது கனத்த மனசில் வலி தெரிந்தது//

  படிக்கும் போது நம் மனதும் வலித்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் தொடர்ந்து படித்து தந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கதையினை தொடர்ந்து ரசித்துப் படித்து கருத்துக்கள் இட்டிருப்பது மிகுந்த மன மகிழ்வை தருகிறது. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete