Pages

Monday, January 1, 2018

ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்





வணக்கம் நட்புறவுகளே!  உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த  வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் அன்பான வணக்கம்.

 நான் வலையுலகில், வலம் வந்து உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாட்கள்( இல்லையில்லை! நீண்ட  வருடம் ) ஆகி  விட்டது.எனினும், இன்னமும் மறவா அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

குடும்ப  சூழல்களினால், வலைப்பக்கம் வர இயலாது போப் விட்டது மன்னிக்கவும்.!  வலையினுள் பிரேவேசிக்க முடியாத நேரங்கள், மிகுந்த வருத்தத்தை அளித்த அந்த நாட்கள் வருடமாக  வளர்ந்து  2018 ன் முதல் நாளை தொட்டு விட்ட தருணத்தில், மீண்டும்  என்  சகோதர சகோதரிகளை  சந்தித்து விட்டதை நினைத்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.


இ்ன்று பிறந்த புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும். அன்பையும், மகிழ்ச்சியையும், மனித நேயங்களையும் குறைவர தந்து, நோய் நொடி இல்லாத இனிதான வாழ்வையும்  மலர செய்யுமாறு,  மலர்ந்து மணம் பரப்ப வேண்டுமென  இறைவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் என் அன்பான இனிய 2018 ம்ஆண்டின் ஆங்கிலப்புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.




இத்துடன் வாட்சப்பில் வந்து படித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளேன். படித்தமைக்கு மிக்க நன்றி.


*புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்..*

1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. இந்துக்களாக இருப்பின், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோ மீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
       
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்  நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள். யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.  
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப் பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கொரு முறை அரை மணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள். அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.
16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை  பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.    
   
19 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று "ஆசைப்படுவேன்" .
இவற்றை முயற்சி செய்தால் 2018  மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்.



10 comments:

  1. வணக்கம் சகோ நலமா ?
    இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளையும் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமே!தாங்கள் நலமா? என் பதிவை பார்த்ததும் உடனே வந்து கருத்து தெரிவித்தற்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நலமா சகோதரி?

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    நலமே! தாங்கள் நலமா? என் பதிவை பார்த்ததும்.உடனடியாக வந்து கருத்து தெரிவித்தமைக்கும, புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியமைக்கும் எனது மனமார்ந்த நன்றிக்ள்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. நீண்ட நாட்களுக்கு பிறகு புத்தாண்டு வாழ்த்தோடு வாட்ஸ்அப் செய்திகளும் அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? நீண்ட நாடகளுக்கு பின் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். என் தளம் வந்து கருத்துரை தந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றிகள்.
      தங்களுக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நெடுநாள் கழித்து கண்டதில் மகிழ்ச்சி. பதிவினைக் கண்டேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? நானும் நீண்ட நாட்கள் கழித்து வலைத்தள உறவுககளை சந்தித்தது குறித்து மன மகிழ்வடைகிறேன். தங்களது வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
      தங்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.நன்றி.

      மிக்க நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்களின் வருகைக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகொ.
      தங்களுக்கும், என் மனம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete