Pages

Thursday, January 14, 2016

இயற்கை கடவுள்


தட்சிணாயனம் ஆறு மாத காலம் முடிந்து உத்தராயணம் துவங்கும் நாளே தைத்திங்களின் முதல் நாள். தினமும் சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைந்து முறையே ஏற்படுத்தும் பகல் இரவுகளில் மனிதன் முதற்கொண்டு சகல ஜீவ ராசிகளும் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,, ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும், தை முதல் ஆடி வரை உத்தராயணம் பகல் பொழுதாகவும், நம் புராணங்கள் பகருகின்றன.
பொதுவாக இறை வழிபாட்டில் நம் கவலைகளையும், மனதின் எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக இறைவனிடம் ஒப்படைக்கும் சமயத்தில், நம் மனதில் ஓர் இனம் புரியாத நிம்மதி உண்டாகும். தேவர்களில் ஒருவரான இந்த இயற்கைக் கடவுளாம் சூரியனை தினமும் வழிபட்டு வருவது சிறப்பாயினும், தை மாதத்தின் முதல் நாள் அதற்கு  மிகவும் உகந்தாக கருதப்படுகின்றது. அந்த தை மாதத்தில், சூரியன் தென் திசையிலிருந்து வட திசை வாயிலாக தன் பயணத்தை துவக்குகிறார். ஆண்டின் முதல் ஆறு மாத காலம் தானியங்களின் வளம் பெருக, பூமியின் செழிப்பிற்காக மழையிலும், பனியிலுமாக தன் ஒளி குறைத்துக்கொண்டு பயணிக்கும் சூரியன் பிரகாசமான ஒளியுடன் தை மாதம் முதல் பவனி வருவதால், அன்றைய தினம் அவருக்கு நம் நன்றியை செலுத்தும் விதமாக சிறப்பாக வழிபட்டு வருவது பொங்கல் பண்டிகையாக உருவானது.
நம் வாழ்வின் இருளை அகற்றி, ஆடி துவங்கி மார்கழி வரையிலான காற்றையும், மழையையும், குளிரையும் களைந்தெறிந்து விட்டு புதுப்பொலிவுடன் பிரகாசமாக துவங்கும் இந்நாளில், நாம் ஒருவருக்கொருவர் மனதாற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு மனித நேயங்கள் எந்நாளும் தழைத்தோங்க, அச்சூரியக்கடவுளின் பாரபட்சமற்ற தன்னலமற்ற பகல் இரவு என்று தோன்றும் கடமையின் செயலைப் போல நாமும் அன்புடன் செயலாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நம்முன்னோர்கள் துவக்கி வைத்த பண்டிகையாகக் ௬ட இருக்கலாம்.
நாராயணனின் அம்சமாக விளங்கும் சூரிய நாராயணனை வணங்குவது நம் தேக ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கை வளத்திற்கும் நல்லது.  சூரியனை, ஆதவன், அருணன். பாஸ்கரன் என்றும், உதித்தலின் காரணப் பெயராக, பகலவன், செங்கதிரோன் என்றும் இன்னும் ஏராளமான பல பெயர்களிலும் விளிப்பர். அவரின் போற்றுதலுக்குரிய ஆதித்திய ஹிருதயம்படித்து தினமும் அவரை வழிபட்டு வந்தால் நம் கண் பார்வை நம் வாழ்நாள் உள்ளளவும் சிறப்பாக அமையும்.
 இதிகாசங்களில் ராமாயணத்தில் ஸ்ரீ ராம பிரான் பதினான்காண்டு வன வாசத்தில் சூரியனை வழிபட்டு ஆதித்தய ஹிருதயம் ஜபித்து தன் பகையை வென்றார் எனவும், மஹாபாரதத்தில், பிதாமகரான பீஷ்மர் பாரத போரில் அடிபட்ட நிலையிலும், அம்பு படுக்கையில் காத்திருந்து, உத்தராயணம் துவங்கும் தை மாத்தில், சூரியனின் ரதம் வடதிசை திரும்பும் அந்நாளில், சப்தமி திதியில் தம் உயிரை உடலை விட்டுப் பிரியச் செய்தார், எனவும் ௬றுகிறது. மேலும் மனித குலத்திலும் உத்தராயணத்தில் மரணம் ஏற்பட்டால், இறைவனை அடைந்து பிறப்பில்லா முக்தியை அடையலாம் என்பதும் ஒரு நம்பிக்கையாக பேசப்படுகின்றது.
இவ்விதமான சிறப்புக்களை பெற்ற இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டுடன் இணைந்து ஆரம்பிக்கும் இந்த தைத்திருநாளை, தமிழர் திருநாளை, சங்கடங்கள் தகர்த்தெறியும் மஹா சங்கராந்தியை  சூரிய நாராயணனின் அருள் பார்வையுடன் அனைத்து வளங்களும் முழுமையாக அமையப் பெற்று, அனைவரும் களிப்புடன் கொண்டாட அவன்அருளையை வேண்டித்தொழுகிறேன்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

 படம்: நன்றி கூகுள்.

18 comments:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      முதல் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் திருநாள், மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அன்பினும் இனிய சகோதரி/

    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. தை மகளைக் குறித்த அழகிய விளக்கம் அறியத்தந்தமைக்கு நன்றி
    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      நலமா? தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.தங்களுக்கும் என்னுடைய இனியபொங்கல் திருநாள், மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அண்மையில் கும்பகோணம் சக்கரபாணி கோயில் சென்றுவந்தேன். தங்களது பதிவைப்பார்த்ததும் உத்திராயண தட்சிணாயன வாயில்கள் நினைவிற்கு வந்தன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம் சகோதரரே.

    தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
    தங்களுக்கும் என்னுடைய இனியபொங்கல் திருநாள் , மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete