Pages

Thursday, October 22, 2015

குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 7

இயற்கை….



என் உணர்வினில் உதிக்கும்
கவிதைகளுக்கு  உயிரூட்டவே 
முதலில் என் கண்களுக்கு
"நீ"  தினசரி  உணவாகிறாய்..!





பரிசுகள்.....



இளமையில் வறுமையும், 
முதுமையில் தனிமையும், 
பாபத்தின் பாரபட்சமற்ற
பரிவான பரிசுகள்..


ஆறுதல்....




ஆண்டவனும் அவன் ஆறுதலும்,
ஆண்டுகள் எத்தனை மாறினும்,
எழுதுகோலும் அதன் மசியும் போல
உடன் பிறந்த சகோதரர்கள்ஆவார்கள்.



பொம்மலாட்டம்....





பொய்யும், மெய்யும் கலந்த நூல்களினால்,
எதிரில் வாழும் பிறரை கவர்ந்திழுக்கும்படி,
ஒவ்வொருவரையும், ஒரு பொம்மைகளாக்கி,
இறைவன் தினந்தினம் ஆடும் ஆட்டமாகும்.


வாழ்க்கைச் சிறப்பு....





தன்னை தானே இகழாமல் நேசித்து,
தன்னைப்போல், பிறரையும் பார்த்தறிந்து
தன்னடக்கம் என்றும் மறவாதிருந்தால்.
தானாகவே நம்மை வந்து சரணடைவது..


படங்கள்: நன்றி கூகுள்


இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்

பகுதிகள் – 123456



11 comments:

  1. அற்புதமான கவிதைகள்
    படித்து மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் முதலில் வருகை தந்து வாழ்த்துரைத்தமைக்கும்,தந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      என் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக பொம்மலாட்டமும், வாழ்க்கைச் சிறப்பும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தாங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      என் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  3. பொய்யும் மெய்யும் கலந்த
    பொம்மைகளா நாம் !!

    சிந்திக்கும் திறன் ஈந்த அந்தச்
    சிவன் நம்முள்ளே
    சீவனைத்தான் உள் வைத்தான்.

    சீவனுக்குள்
    சிவனைக் காணா நின்றது
    சிவன் குற்றமா ?

    புரியவில்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      என் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  4. அற்புதமான கவிதைகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி,

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      என் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  5. சின்னச் சின்ன நல்ல கருத்துகள் நன்று சகோ தொடர்ந்து கவிதைகளும் எழுதுங்கள் வாழ்த்துகளுடன் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      என் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete

  6. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA Exam Coaching Classes

    ReplyDelete