Pages

Saturday, April 18, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 3)

முந்தைய பகுதியின் முடிவு

அப்பா, அம்மா அண்ணன் அக்கா என்று குடும்பமே அவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த, அவன் சற்று திகைத்து தடுமாறித்தான் போனான். தன்மனதின் எண்ணங்களை இவர்களிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது எனத்தெரியாமல் திண்டாடினான்….!

இன்றைய தொடர்ச்சி..

கால நேரம் பார்த்து தன்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த, அருணாவை தான் காதலிப்பதை, தன் குடும்பத்துக்கு உணர்த்தி, அவர்கள் சம்மதத்துடன் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற அவன் கனவு, சற்றும் எதிர்பாராத குடும்ப சூழ்நிலைகளினால், சிதைந்து தவிடு பொடியாய் போனது அவன் மனதை மிகவும் பாதித்தது. இந்த நேரத்தில் தான் காதலிப்பதை சொன்னாலும், தன்னை யாரும் நம்பவும் மாட்டார்கள் என்பதுடன், காதலிக்கும் பெண்ணை மறந்து விட்டு வசதி வாய்ப்புக்களுடன் வரும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும், வற்புறுத்தி சொல்வார்கள் என்பதும் அவன் அறிந்ததே! அதனால் தினசரி போராட்டத்தினால் பிரபாகரின் மனநிம்மதி அகன்றது.! வீட்டலிருப்பவர்களிடையே முன்பு போல் பேச முடியாமல், மெளனித்து இவன் தவிப்பதை இவனின் அரை குறை சம்மதமாக, எடுத்துக் கொண்டு, திருமணம் குறித்தப்பேச்சுக்களை மும்மரமாக துவக்க வேண்டி அண்ணியின் உறவினருடன், கலந்து பேச அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என்று அனைவரும் ஒன்றாகக்௬டி ஆரம்பித்து விட்டனர்.

பெண் பார்க்கும் படலத்திற்கு இவனை தள்ளிக்கொண்டு போகாதகுறையாக, அனைவரும் அழைத்துச்செல்ல வேறு வழியின்றி, இவனும், பாசங்களின் மிரட்டல்களுக்கு கட்டுப்பட்டு, சென்று வந்தான். பெண்ணின் அழகில் எந்தவகையிலும் குறையில்லாவிடினும், அவள் நடந்து வரும் போது, சிறிது வித்தியாசம் தெரிந்ததை அவன் கண்கள் கவனியாமலில்லை. ஒரு காலை சற்று லேசான சிரமத்துடன் எடுத்து வைத்தவாறு நடந்து வந்தது இவனுக்கு சற்று அதிர்ச்சி கலந்த பரிதாபத்தை உண்டாக்கும்படியாக இருந்தது. அவனுடன் வந்த குடும்பத்தின் உறவுகள், இதை ஒரு விஷயமாக பொருட்படுத்தாமல், சாதாரணமாக எடுத்துக் கொண்டதும், தங்களுக்கு இது ஏற்கனவே தெரியுமென்றும் பிறகு ௬றியதும், இவன் மிகவும் அதிர்ந்து போனான். குடும்பமே அதை மறைத்து தங்கள் நலத்திற்காக இவன் என்ன சொன்னாலும் கட்டுப்படுவான் இல்லை கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டுமென்ற மாதிரி நடந்து கொண்டது இவனை மேலும் சங்கடபடுத்தியது. அந்தப் பெண்ணைப் பற்றியோ, அவள் வசதியை பற்றியோ, அல்லது உருவ அழகை பற்றியோ அலசக்௬ட இவன் மனம் இடங் கொடுக்கவில்லை! ஏனெனில், பிறப்பின் ஏற்றத்தாழ்வுகள் இறைவனால் வகுக்கப்பட்டவை என்பதில் இவன் எந்தவித குழப்பமுமின்றி தெளிவாக இருந்தான்.

தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், அருணாவை இதுநாள்வரை சந்திக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் குடும்பத்தின் நன்மைக்காக இவன் கிணற்றில் விழக்௬ட தயாராக இருந்தான். ஆனால்இவன் உணர்வுகளை சுத்தமாக புரிந்து கொள்ளாமல், ஏன் திருமணம் வேண்டாம் என்று அடம் பிடித்தாய்? வேறு ஏதாவது உன் மனதில் எண்ணம் உள்ளதா? யாரையாவது திருமணம் செய்து கொள்ள விருப்பபடுகிறாயா? என்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற எந்த எண்ணமுமின்றி, அப்போதைய தேவையான பணத்தேவை ஒன்றையே காரணம் காட்டி, “நீ இதைத்தான் செய்ய வேண்டும், இல்லையென்றால், இந்தக் குடும்பத்தின் மீது உனக்கு கொஞ்சமாவது பாசம், அக்கறை, இல்லையென்றுதான் அர்த்தம்..! உன் கடமையை செய்ய தவறியவன் என்ற இழிச்சொல் உன்மீது காலங்காலமாய் முத்திரைக்குத்தப்படும்..! எனபது மாதிரியான பேச்சுக்களில், அவனை சிக்கவைத்து அவர்களின் வசப்படுத்தி கொள்ள முனைவது அவனுக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் தந்தது.

ஆச்சு! இவனிடம் கருத்து ஏதும் கேட்காமலேயே, “எங்கள் பேச்சை எஙகள் மகன் ஒருபோதும் தட்டி நடக்க மாட்டான்என்ற நற் பெயரை இவன் கேட்காமலே இவனுக்கு வழங்கியபடியே, இவன் அப்பா, அம்மாவும், பெண்ணின் பெற்றோரும், வெற்றிலைத்தட்டு மாற்றிக் கொண்டனர். இவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை! பெண்ணின் பெற்றோரும், பெண்ணும், இவன் வீட்டு மனிதர்களோடு சகஜமாக பேசி உறவாட தொடங்கி விட்டனர். “நம்ம பிரபாவுக்கு நல்ல அதிர்ஷ்டம்! நாமே அவன் கல்யாணத்துக்கு நல்ல இடமா பொண்ணு தேடியிருந்தாலும், இப்படி அமைஞ்சிருக்காது! கொடுத்து வைத்தவன்! என்றெல்லாம், இவனை புகழ்ந்து கொண்டே, தங்கள் விருப்பங்களை அவர்கள் சாதித்து கொண்டிருந்த போதுதான், ஒருநாள் கார்த்திக்கை பிரபாகர் சந்தித்தான். தன் கவலைகளை, அவனிடம் கொட்டித்தீர்த்ததும், பிரபாகருக்கு மனசு லேசான மாதிரி இருந்தது. அதனால் தன் நண்பனின் ஆலோசனைபடி நடந்து பார்க்கலாமென தீர்மானித்து கொண்டான் பிரபாகர்.

அந்த பூங்காவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு இடத்தில் சங்கவிக்காக காத்திருந்தான் பிரபாகர். அவளுக்கு அதிக சிரமம் கொடுக்க ௬டாது என்றுதான் அவள் வீட்டின் அருகிலிருக்கும் பூங்காவை தேர்ந்தெடுத்து அங்கு வரும்படி கைபேசிமூலமாக அழைத்திருந்தான். பெண் பார்க்க போகும் போது இருவரது கைபேசி எண்களை அவன் அண்ணி இருவரையும் கேட்காமலே பகிர்ந்து கொள்ள வறுப்புறுத்தியதும், இப்போது அவனுக்கு செளகரியமாகத்தான் இருந்தது. தயக்கத்துடன் அவளுடன் பேச அழைத்ததும், அவளும்சரிஎன ௬றவும், மனசு சற்று லேசானது மாதிரி இருந்தது. எப்படியாவது தனக்கு அருணாவின் மேலிருக்கும் விருப்பத்தைக்௬றி இந்த திருமணம் நடக்க இயலாது என்பதை தெளிவுபடுத்தி விடவேண்டும் என்ற முடிவுடன், எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி அவள் வரவுக்காக காத்திருந்தான்..

அதோ, அவள் வந்து விட்டாள். அருகில் வர வர அவளுடைய தீர்க்கமான விழிகளை சந்தித்தவுடன், கற்பனையில் செய்து வைத்திருந்த ஒத்திகைப் பேச்சுக்கள் சற்று மற(றை)ந்து போன மாதிரி இருந்தது.


தொடரும்

12 comments:

  1. நன்றாகச் செல்கிறது.

    மறுபடியும் சொல்கிறேன். ஒவ்வொரு பாராவையும் விவரித்து எழுதினால் ஒவ்வொரு பதிவாக எழுதலாம். கதைச் சுருக்கம் சொல்வது போல நிறைய பகுதிகள் வேகமாகக் கடக்கின்றன. ஒருவேளை இன்னும் எழுத நிறைய இருக்கிறதோ?

    :)))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் ஆலோசனைப்படி, அடுத்த பகுதியில் சிறிது விரிவுபடுத்தியிருப்பதாக எண்ணுகிறேன். ஆலோசனைக்கு நன்றி.
      தொடர்ந்து வந்து படித்து முதல் கருத்திட்டு ஊக்கபடுத்துவதற்கு நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பிரபா சந்திக்கக் காத்திருக்கும் பெண்ணை நினைத்தாலும் பாவமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      இரண்டு நாட்களாக இங்கு இணையம் பிரச்சனை காரணமாக உடன் பதிலிட இயலவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      \\பிரபா சந்திக்கக் காத்திருக்கும் பெண்ணை நினைத்தாலும் பாவமாய் இருக்கிறது.//

      அந்த கதாபாத்திரத்தை எழுதும் போது எனக்கே பாவமாய் இருந்தது. ஆயினும் மனதில் தோன்றிய ஒரு கதை கருவுக்கு வடிவம் கொடுத்தால்தானே கதை என்பது முழுமை பெற்று நகரும்.
      முடிவடையும் போது பரிசாக கிடைக்கும் பாராட்டுரைகளில்,கதைக்காக அமைத்த கதா பாத்திரங்களின் வேறுபாடுகள் மனதிற்கு திருப்பதியளிக்கும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பார்வை ஒன்றே போதுமே...! மறதியும் மறந்து போகும்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பார்வையின் தீர்க்கத்தில் பேச நினைப்பதை மறப்பது சகஜந்தானே!

      தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. யாதார்த்த சூழ்நிலையை அழகாக விளக்கி அடுத்தது என்ன ஆவலுடன் செல்கிறது கதை.....
    காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆவலுடன் அடுத்த பகுதியை காண காத்திருக்கும் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.



      Delete
  5. இப்படித்தான் பல காதல் கானாமல் போகிறதோ,,
    அடுத்த என்ன என்ற ஆவலுடன்,,,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அத்தனை காதலும் எப்போதும் ஜெயிப்பதில்லையே.!
      ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்ப்பதற்கு என் பணிவான நன்றிகள்.

      தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம்
    காதல் என்ற ஒன்று வந்தால் வைத்த பொருள் பக்கத்தில் இருக்கும் அங்கே இங்கே என்று தேடுவோம்... அது மட்டுமா... காதல் வந்தால் நாம்ம எடுக்கும் முடிவுதான் சரி என்ற நிலை உருவாகும்

    கதையில் அவள் பேச வேண்டியதை மறந்து போனதும் காதல்தான்.. தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கோம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      காதலின் நிலை குறித்து தாங்கள் விரிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
      அடுத்த பகுதிக்காக காத்திருக்கும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

      தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதால் என் எழுத்துக்கள் மேன்மையுறும் என நம்புகிறேன் அதற்காக நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete