Pages

Wednesday, December 3, 2014

அணிலாக நான்...




மழழை வந்தால் பொதுவாக  வீட்டில்
மகிழ்ச்சி வெள்ளம்! அதை  பெற்ற
மகளும் சொன்னால்,  நம்  அனைவரின்
மனமும் துள்ளும்!  அந்த  மகிழ்வின்
வரவை கட்டியங்௬றி,  மனம்  மகிழ்வுற 
வந்ததொரு தகவல் என்னைப்பிடித்து
விரைந்து தள்ளியது.! சென்னைச் செல்லும்
விஜயமொன்றுக்கும் வழி வகுத்தது.
இரு வாரங்களுக்கும் மேலாகவும்
இணையத்தின் தொடர்பையும் துண்டித்தது.
 
நாட்கள் தொண்ணூறு வரை
நகர்த்தும் சிரமம் குறித்தும்,
அன்னையென்ற பதவி தரும்
அளப்பறியா மதிப்பைச் சொல்லியும்,
அவள் அசதிக்கு தோள் கொடுத்து
அவள் அன்புக்கு அன்பு செய்து,
அருமை மகள் இயலாமை துடைத்து,  என்
அருகாமையில் அவள் அச்சம் வடித்து, நான்
உன்னைப்பெற்ற தவத்தின் அருமையை
நீயும் உணரும் நல்ல நேரமிது!எனும்
உண்மைதனை புரிய வைத்து,
உடனிருந்து உற்சாகப்படுத்தி,
உள்ளத்தில் மட்டற்ற களிப்புடன்
உவகையுடன் திரும்பி வந்தேன்!
 
வந்திங்கே  இணையம்  திறந்து  பார்த்துப்படித்திட,
வார்த்தைகள்  ஏதும்  எழுதிட  வரவில்லை!
அறிந்தவர்  தெரிந்தவர்  பதிவெல்லாம்  சிறப்பாக
அதி அற்புத  வேகத்தில்  பறக்குதிங்கே!
அனைவரின்  படைப்பும்  திறமையும்  கண்டு,
ஆனந்தத்துடன்  பெரும் ஆச்சரியபட்டாலும்,
அவர்களுடன்  பயணிக்க  உன்னால்  இயலாது!”  என
அகமானது  பரிகசிக்கமுயற்சியுடன்  ஒரு
அணிலின்  மனநிலையில்  மீண்டும்  பிரவேசிக்கிறேன்.
கடமைகளின்  இரு கரந்தனில்  கட்டுண்டாலும்,
கவலைகளை  களைந்தெறியும்  இக்கணிணி  வாழ்
நட்பினிடையே  நான்  அணிலாக  சுற்றி  வருவதில்
நட்புள்ளங்களுக்கு  ஏதும்  தடையொன்றும்  இல்லையே..?

மனமது மகிழ்வுற அழகிய மகவொன்றை
மனம் நிறைய, சிரமமின்றி, என் மகள்
நலமுடன் பெற்றுச் சிறந்து வாழ்ந்திடஅன்பு
நல்லுறவுகளின் இனிய நல்வாழ்த்துக்களும்,
நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன்,
நாடுகிறேன் உங்கள் வாழ்த்துக்களையும்,
நன்றிகள்  நிறைந்த  உள்ளத்துடன்..
            
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.




5 comments:

  1. சந்தோஷமான விசயம் அதனால்தான் காணவில்லையோ.... எமது வாழ்த்துகளோடு இறைவனின் ஆசியும் உண்டாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் உடனடி வருகைக்கும், சந்தோஷமான வாழ்த்துக்களுக்கும், எங்களுக்காக இறைவனின் ஆசியை வேண்டியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      \\அதனால்தான் காணவில்லையோ?//

      ஆம்! சகோதரரே! பொறுப்பான கடமைகளுக்காக, அங்குமிங்கும் உலாவி வருகிறேன்.

      தாமதமாக பதிலிடுவதற்கு வருந்துகிறேன். (பயணக் களைப்பு )

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஆஹா...சந்தோஷமான விஷயம் பாட்டியாக பதவி உயர்வு. வாழ்த்துக்கள்.
    இறைவனின் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்திற்கு இருந்து கொண்டே இருக்கும். ஓ. ஆகையால் தான் காணவில்லையோ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      \\ஆஹா.. சந்தோஷமான விஷயம் பாட்டியாக பதவி உயர்வு வாழ்த்துக்கள்.//

      பதவி உயர்வு என்பது சந்தோஷமான விஷயந்தானே! அதைதான் நட்புகளோடு பகிர்ந்து கொண்டேன். தாங்களும் அதே உரிமையில் வந்து சந்தோஷமாக வாழ்த்தியமைக்கும், இறைவனின் அருளுக்காக வேண்டியமைக்கும் , என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!

      கடமைகளின் நடுவே, நான் அவ்வப்போது உலா வந்தாலும், என்னையும் மதித்து என் வலைதளம் வந்து வாழ்த்தும் தங்களுக்கும், வலைதள உறவுகளுக்கும் என் பணிவான நன்றிகள்.

      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வணக்கம் சகோதரரே!

    தங்கள் வருகைக்கும், என் பதிவைப் படித்துப் பார்த்து வாழ்த்துக்கள் தந்தமை கண்டும், நான் மிகுந்த சந்தோஷமடைகிறேன் சகோதரரே!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete