ஆணிவேர்..
______________
முயலுதல் என்பது பல
வேராகினும்,
முழுமையாய் நாம் வளர்ந்து
நின்றிட,
அதிர்ஷ்டம் என்ற அந்த
அதிசயந்தான்,
ஆணி வேராக அமைய வேண்டும்.
வரட்டு
ஜம்பம்…
_____________________
ஆணவமும், அகம்பாவமும்,
வறட்டு
ஜம்பத்தின்
அடையாள
முத்திரைகள்…
நேற்று..இன்று…நாளை...
______________________________
இன்று
என்றொரு இனிய வசந்தத்தை,
இன்முகம்
காட்டி உபசரிக்க நாம் தவறியதால்,
நாளை
என்பது நல்ல நண்பனாகினும்,
நாம்
நடுங்கியே தினமும் நலமிழக்கிறோம
போலி
நாகரீகம்…
______________________
பொய்யும், பித்தலாட்டமும்,
போலி
நாகரீகத்தின்
ஸ்வீகார
குழந்தைகள்….
எதார்த்தம்..
_______________
அடுத்தவர்
தோல்வியை பரிகசிக்கும் போதும்,
நம்
வெற்றியைக்கண்டு பெருமிதித்தப் போதும்,
"நேரம்" என்ற பிராயசித்தத்தை எதார்த்தம்
எகத்தாளச்
சிரிப்பொன்றுடன், விட்டுச்செல்கிறது...
படங்கள்: நன்றி கூகுள்
இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்
ஆஹா ஒவ்வொன்றும் சொல்லுதே நடைமுறை யதார்த்தத்தை அருமை வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
போலி நாகரீகம்…
ReplyDelete______________________
பொய்யும், பித்தலாட்டமும்,
போலி நாகரீகத்தின்
ஸ்வீகார குழந்தைகள்….//
இதை மிகவும் ரசித்தேன்.
ஓவ்வொன்றும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்,ஒவ்வொன்றையும் ரசித்துப் பாராட்டி வாழ்த்தியமைக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மிக மிக அருமை
ReplyDeleteமுதல் கவிதையில் முயற்சியும்
அதிஷ்டமும் கொஞ்சம் இடம் மாறி இருக்கலாம்
என மட்டும் தோன்றியது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும்,கருத்துப் பரிமாற்றத்திற்கும், நல்வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரரே!
\\முதல் கவிதையில் முயற்சியும்
அதிஷ்டமும் கொஞ்சம் இடம் மாறி இருக்கலாம்
என மட்டும் தோன்றியது//
தங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
எதார்த்தம் கவிதையை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நனறிகள்.
எதார்த்தம் கவிதையை அதிகம் ரசித்து படித்தமைக்கு என் பணிவான மகிழ்ச்சியைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் சகோதரரே! மிக்க நன்றி
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பல வரிகள் உணர வேண்டிய வரிகள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்....
வணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், உணர வேண்டிய வரிகள்...என மனமாறக் ௬றி பாராட்டி வாழ்த்தியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே!
தங்கள் ஊக்குவிப்புக்கள்தான் என்னை இன்னமும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி.!
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
பொய்யும், பித்தலாட்டமும்,
ReplyDeleteபோலி நாகரீகத்தின்
ஸ்வீகார குழந்தைகள்….
அருமையான வரிகள் சகோதரி...
எல்லாமே நன்று...
சகோதரி மன்னிக்க...
தொடர்பவர் பட்டியல் இல்லாததால் பேவரைட்டில் சேமித்து வைத்திருக்கிறேன்... டாஷ்போர்டில் வரும் எல்லாவற்றையும் படித்து கருத்திடுவேன். தங்கள் பதிவுகள் பதிந்த விவரம் பேவரைட்டுக்குள் போனால்தான் அறிய முடியும்... பெரும்பாலும் மறதியால் பேவரைட்டில் இருப்பவர்களை வாரம் ஒருமுறைதான் வாசிக்க முடிகிறது.
இனி தொடர்ந்து எல்லாப் பதிவுகளுக்கும் வர முயற்சிக்கிறேன்...
வணக்கம் சகோதரரே!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
"இனி தொடர்ந்து என் பதிவுகளை காண வருகை தருகிறேன்." என்று சொன்னதற்கும், என் பணிவான நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறேன். தங்களின் இந்த ஊக்கமிக்க கருத்துரைகள்தான், என் எழுத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், ஆணிவேராக இருந்து என் பதிவுகளை வளர்க்கின்றன. நன்றி!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.