தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன்
இணைந்து நடத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
வணக்கம் வலைத்தள உறவுகளே,
இந்த யுத்த களத்தில், “சொற்கள்” என்ற “வாளும்”, “கரு” என்ற “கேடயமும்” மட்டுமே
ஏந்தி, போராடி வெற்றி வாகை சூடும் என் வலைத்தள வீரர்களுக்கு, வீர வணக்கங்களுடன், என்
இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
கமலா ஹரிஹரன்.
காதல் மலரே..! காதல் மலரே…..!
காதல் மலரே..! காதல்
மலரே…! உன்
கரத்தில் உள்ளதும் நம்
காதல் மலரே..!
பொதுவாக மலரும் காதல்
மென்மையானது..!
மெதுவாக மலர்ந்த
நம்காதல் மேன்மையானது..!
தேனாய் இனித்தது,
நம்மிருவருக்கும்..!
தேளாய் கொட்டியது,
நம்மை பெற்றவர்களுக்கும்..!
எட்டிக்காயாய்,
என்னைப்பகைத்தனர்…!
எட்டாக்கனியென்று,
உன்னைப்பழித்தனர்…!
எட்டியத்தொலைவிலேயே,
நாமிருந்தும்,
ஏணி வைத்தாலும்,
எட்டாதென்றார்…!
அழகும், அந்தஸ்த்தும்,
அதிகாரமாக, அங்கே,
ஆணி ஏதும் அடிக்காமலே
அமர்ந்து கொண்டன…!
வருடம் பலவும்
நகர்ந்தது..! நாட்கள், நாழிகைகள்,
வாரங்கள், மாதங்களின்,
துள்ளலான துணையுடன்….!
காலச்சுழற்ச்சியில், நம் வாதங்கள் வென்றது…!
காதல் கனிந்திட,
அவர்தம் பிடிவாதங்கள் அகன்றது…!
மட்டில்லா மன
மகிழ்வோடு, மங்கை உந்தன் வீடடைந்தேன்…!
மட்டற்ற உன்னழகில், மனம்
மயங்கி வீழ்ந்து விட்டேன்..! உன்
தாயின் பரிந்துரையில்,
உடுத்திய ஒளிரும் பட்டாடையும்,
தாயினும் பரிவாய், உன்
பட்டான பூ உடல் தழுவி மிளிர்விக்கின்றதே..!
கயல் பறக்கும்
கண்ணிரண்டின், காந்தப்பார்வைகளும், என்
கண்களுக்கு விருந்தாகி,
கவியொன்று சொல்கின்றதே..!
வீடுதேடி வந்தஎன்னை,
பூச்சொறிந்து வரவேற்க பூக்௬டை சகிதமாக,
வீறு கொண்ட உள்ளத்துடன்
வாசல் வந்து அமர்ந்தாயோ..?
..........................................................................................................................................................................
எண்ணங்களும், வண்ணங்களும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நினைப்பதெல்லாம் முடிவதில்லை…! அதன்
“நேரமென்ற”
ஒன்று வரும் பொழுது வரை…!
நினைத்தவுடன் நடந்து விட்டால், அதற்கு
“நீ” மட்டும் நிச்சயம்
காரணமில்லை..!
புரிந்திருந்தும், உணர்ந்திட மனம்
மறுக்கும்….!
புதியவன் சொல்ல கேட்க உள்ளம் வெறுக்கும்..!
எண்ணங்கள் இதுவெனில், வண்ணங்களும்
இவ்வகைதான்…!
இயற்கையின் வண்ணங்கள், என்றும் புதியதாய்
இயற்கையாயிருப்பது, இயல்பான ஒன்றல்லவா..?
வானத்தின் வண்ணங்களும், வட்டமிடும்
கதிரவனும்,
வாடா மலரணைத்தும், மற்றும் பல வண்ணமெல்லாம்,
வாடிக்கையாய் தினந்தினம் நிலைத்ததன்றோ..?
செயற்கையாய் ஒரு ஓவியத்தை, காவியமாய்
செதுக்கி வைக்க மனமதுவும், இச்சை கொண்டால்,
செலுத்தும் கவனமதும், சிந்தை ஒன்றி நிலைத்தச்
செயலும், மாறாதிருக்கும் அந்த மனமிரண்டும்,
“அவன்”
தந்தால்தான் அந்த “நேரமதில்” அது கலையாகும்.
அஃதில்லா போதினிலே, அரும் தூரிகைகளும்,
வரைத்துகிலும், விதங்களாய்,
வண்ணக்குப்பிகளும்
வரைபடமும், வகைவகையாய், வழங்கினாலும்,
அதை அற்புதமாய் கலையாக்க முயற்சியுடன் எத்தனித்தாலும்,
"அவன்" அருள் பெறாத வரை அது பயனற்ற செயலாகும்.
வெற்றிடத்தை கண்டு, “நேரமதை” விரிவாக எடுத்தியம்ப
விரும்பினாலும், என் “நேரமும்”, ஆச்சு வெறும் "24” தானே என்கிறது…!
பூக்கூடை பூவழகியின் பூவிழி வண்டு
ReplyDeleteதாங்கள் கோர்த்த பூமாலை நான் கண்டு
நிச்சயம் இதற்க்கு பரிசு உண்டு
அதற்க்கு அச்சாரமாய் எனது பூச் செண்டு.
................................................................................
நினைப்பதெல்லாம் முடிவதில்லை என்று
தாங்கள் வடித்த கவிதை நன்று
களத்தில் இக்கவிதை வென்று
வரும்மென்றே சொல்கிறேன் இன்று.
கவிதை அற்புமாய் இருக்கிறது சகோதரி வெற்றி பெற எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்,
வணக்கம் சகோதரரே!
Deleteஎன் வலைப்பூவிற்கு வருகை தந்து,
வார்த்தைகளின் வடிவமைப்பால்,
வர்ணஜாலங்களாய் எண்ணங்களை,
வாரியிறைத்து வாழ்த்துக்கள் பலவும்,
வழங்கியமைக்கு மனம் நிறைந்த,
வந்தனங்களைக் ௬றிக் கொள்கிறேன்.
பூச்செண்டுக்கும் நன்றி..!
பூக்களின் மணம் பரப்பும் “பா”க்களுக்கும் நன்றி..!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோதரி நடுவர்களுக்கு இணைப்பை அனுப்பி விட்டீர்களா ?
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteநடுவர்களின் மின்னஞ்சலுக்கு கவிதையின் விபரமதை அனுப்பி விட்டேன். அக்கரையுடன், நினைவுபடுத்தியமைக்கு மிகவும் நன்றி சகோதரரே..!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம்
ReplyDeleteகவிதையில் காதல் இரசனை சொட்டுகிறது நன்றாக உள்ளது
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே!
Deleteதங்களின் தமிழ் வளர்க்கும் இந்த தலையாய முயற்சிக்கு முதற்க்கண் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! என் கவிதை வந்து சேர்ந்த விபரத்தையும், அது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்ற விபரத்தையும், எனக்குத் தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகளைத் தெரியபடுத்திக் கொள்கிறேன். நடக்கும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தும் தங்கள் அன்புள்ளத்திற்கும், என் மனப்பூர்வமான நன்றிகள்.!!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கவிதைகள் அருமை..வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரி!
Deleteதங்கள் முதல் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோதரி தங்களது வலைப்பூ இன்றைய 27.08.2014 வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
Deleteவலைச்சரத்தில் என் வலைத்தள அறிமுகத்தை அறியச்செய்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரரே..!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
காதல் கவிதை ரசம் சொட்டுகிறது...
ReplyDelete“அவன்” தந்தால்தான் அந்த “நேரமதில்” அது கலையாகும்.// ஆம் சரியாகச் சொன்னீர்கள்...
கவிதைகள்..அருமையாக இருக்கிறது.
வெற்றிக் கனி கிடைக்க வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி.!
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.!
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.