ஆறுமுகமும்,
முகம் மாறா அழகும்,
ஆசையுடன்
அணிவித்த அணிகலன்களும்,
மாசுமருவற்ற
பரந்த நெற்றியும்,
மகிழ்விக்கும்
நெற்றியில் சுருண்டோடி
நெளிந்தோடும்,
தலைகேசமும்,
தலைகேசத்தின்
தவிப்புணர்ந்து
தாங்கி
நிற்கும் மணிகீரீடமும்,
மணிகீரீடத்தின் மதிப்பை குலைக்காமல்,
குடையாய்
கவியும் கோபுரமும்,
கோபுரத்தின்
நடுவில் நாட்டிய வேலினால்,
‘நான் வேலவன்’ என்று சொல்லும்
விரிந்த
நெற்றியில்
விரலிடை
வெண்ணீற்றுக்கு நடுவில்
சூரியனை
பழிக்கும் வண்ணம்,
சுடர்விடும்
செந்சாந்து குழம்பும்,
வில்போல்
புருவங்களும், அந்த
வில்லிருந்து
புறப்படும் கணையென
கருவண்டு
விழிகளும், வசீகரிக்கும்
காந்தபார்வைகளுக்கு இடையே,
கைத்துப்பாக்கியென நீண்ட நாசியும், எவரையும்
கைவிடமாட்டேன்
என்று,
சொல்லாமல்
சொல்லும்
செவ்விதழ்
கொவ்வை அதரங்களும்,
அதரங்களில்
மதுரமான புன்னகையும், இவை
அத்தனையும்
ஒரு சேர கண்டதும்,
வட்ட
நிலா வானிலிருந்து,
‘வந்ததோ’வென்ற
ஐயமுடன்
பூரண
சந்திரன் புது பொலிவுடன்
புவனத்தில்
இறங்கியதோ, என்று
திகைத்து
தட்டுத்தடுமாறி, பரவசித்த
திகைப்பின்று
விடுபட்டு, நீ எந்நாளும்,
எப்போதும்,
என்னுள் இருப்பாயா?
என்னை
விட்டு அகலாதிருப்பாயா? என
கேள்விக்கணைகளை என் நாவு
கேட்பதற்கு
முன், நீ சட்டென்று
சிலையாகி
போனாய்; நான்
ஜீவனுடன்
இந்த பூமியில்
நிலையாகி
போனேன்;
நான்கு
வேதங்களையும் படைத்த
நான்முகனிடமே, அந்த
நான்கினையும்
விளக்கச்சொல்லி
நல்லதோர்
பதில் வராமையால், அவரை
நான்கு
சுவர்களுக்குள்
நிறுத்தியதால்,
அதனை
நியாயம்
கேட்டவருக்கு, அந்த
நான்கும்
நன்குணர்ந்தவர்க்கு,
நல்ல
ஆசானாய், போதகனாயமர்ந்து,
நான்கினையும்
கற்றுணர்ந்தவன், இந்த
நான்கு
வயது பாலகன் என,
தந்தைக்கே
குருவாய் அமர்ந்த
தணிகை
மலை வாசா,
நான்
முறைப்படி இந்த
நாலையும்
கற்றதில்லை, எந்த
ஒரு
நுாலையும்
தொட்டதில்லை…
உன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்.
உன்
அருளையே சுவாசிக்க
ஆசைபடுகிறேன்.
உன்,
முகவிசாலத்தில் மயங்கி நீ
தந்த
முகவரியையும்
தொலைத்து விட்டேன்.
முருகா
என்னை
தொடர்ந்து
வரும் பாபங்களினால், உன்னை
தொடர
வழி தெரியவில்லை,
தொடராமல்
தொய்ந்திருக்கும் இந்த
தொண்டனுக்காக
பரிவுடன்,
மறுபடியும்
உன் மலர்ந்த
மந்தகாச
முகத்தில் மின்னலென கண்சிமிட்டி,
உன்
விலாசத்தை
விரைந்து காண்பிப்பாயா!! அதற்காக
விரல்
சொடுக்கும் நேரம் ௯ட
விழி
அசைக்காது உன்னை பார்த்திருக்கிறேன்
கணநேரமும்
உன்னை விடா மனமுடன்
கனிவுடன் காத்திருக்கிறேன்.
மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
ReplyDeleteமுருகனின் அழகை விவரித்துப் போகையில்
படிக்கிற எங்களுக்குள்ளேயே முருகன்
காட்சியாய் விரிவதை உணரமுடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தாங்கள் வந்து என் பதிவினை படித்து பகிர்ந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..
Delete//நான் முறைப்படி இந்த
ReplyDeleteநாலையும் கற்றதில்லை, எந்த ஒரு
நுாலையும் தொட்டதில்லை…
உன் அன்பை மட்டும் யாசிக்கிறேன்.
உன் அருளையே சுவாசிக்க
ஆசைபடுகிறேன்.//
அருமை அருமை, வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பகிர்விக்கும் மிக்க நன்றி..
Deletehi athai your lyrics was really good and keep it posting like this and moreover title is good!!!!!
ReplyDeleteபடித்து பார்த்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்.!
Deleteஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! உங்கள் அனைவருக்கும் உரித்தாகுக!
இன்று தங்கள்து வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ReplyDeleteவிவரங்களுக்கு - http://blogintamil.blogspot.com/2014/01/blog-post.html
வலைச்சர அறிமுகம் கண்டு வந்தேன்..
வடிவேல் முருகனைப்பற்றி வண்ண மயமான கவிதை..
முருகன் திருவருள் முன்னின்று காப்பதாக!..
வாழ்த்துக்கள்.. வாழ்க.. பல்லாண்டு!..
வணக்கம் சகோதரரே!
Deleteஎனது வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் தெரிவித்தமைக்கு,
மகிழ்ச்சியுடன் என் நன்றியையும் ௯றிக்கொள்கிறேன். வலைச்சர அறிமுகத்தில் எனது வலைத்தளத்திற்கு வந்து " முருகனுக்கோர் முகிலை " வாசித்து கருத்தும் , வாழ்த்தும் உரைத்த
தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வணக்கத்துடன் சகோதரி,
கமலா.ஹ
hi atha :) we all read your kavithais and we wonder your talent and its simply amazing, You are really God gifted :) :) :) ,
ReplyDeletetill today we dint know your talent , hereafter we wl not miss your blog,
We are very much impressed with your thoughts..
I am sending your home page Blog to my relatives , they love to read them.
Love you :)
Krithika & Parents :)
படித்து பார்த்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கிருத்திகா சந்திரசேகர் !!
Deleteஉங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
சமர்ப்பணம்…..
ReplyDeleteநான் எழுதியவைகளில் “மதிப்பெண்” பெற்று தந்தது, முருகனை பற்றி எழுதியதுதான். என் வருத்தத்தை “அவனிடம்” பேசி பகிர்ந்த போது மனதில் வார்த்தைகளை கோர்த்து கொடுத்தவன் “அவன்தான்”.
என் மனதின் வருத்தத்தில் உரிமையோடு , வசை பாடியதையெல்லாம், சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு, வலைப்பூக்களுக்காக, வார்த்தைகளை, கோர்த்து தந்து வலைச்சரத்தில், ஏற்றிவிட்டான். “அவனன்றி ஓர் அணுவும் அசையாது “ என்பதை மெய்ப்பித்து விட்ட “அவனுக்கு “அவனால் எழுத வைத்த அவன் எழுத்துக்களுக்கு கிடைத்த கருத்துரைகளை “ அவனுக்கே,” சமர்ப்பணம் செய்கிறேன்…..
முருகனுக்கு முதற்க்கண் என் நன்றிகளை பூக்களாய், பூச்சரங்களாய் தொடுத்து அணிவித்து வணங்குகிறேன்.
~கமலா. ஹ
அருமையான கவிதை. கவிதை புனைவதில் ரொம்பவே திறமைசாலியாக இருக்கீங்க. வாழ்த்துகள்.
ReplyDelete