அன்றுதான் அவர்கள் அங்கு குடிவந்தார்கள், மூவருமே திருமணமாகதவர்கள் என்று அந்த வீட்டை குடக் கூலிக்கு விடும் சொந்தக் காரரிடம் தரகர் கூறியதை நினைவு கூர்ந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பிரம்மச்சாரிகள் என்றால் சோம்பேறிகள் என்பது என் ஆழமான கருத்து. இருப்பினும் இவர்களிடமும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இவர்களிலும் சிலர்
Pages
▼
Monday, May 30, 2011
கால்கள்
அன்றுதான் அவர்கள் அங்கு குடிவந்தார்கள், மூவருமே திருமணமாகதவர்கள் என்று அந்த வீட்டை குடக் கூலிக்கு விடும் சொந்தக் காரரிடம் தரகர் கூறியதை நினைவு கூர்ந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பிரம்மச்சாரிகள் என்றால் சோம்பேறிகள் என்பது என் ஆழமான கருத்து. இருப்பினும் இவர்களிடமும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இவர்களிலும் சிலர்
Sunday, May 29, 2011
Monday, May 23, 2011
ஏன் இந்த கண்ணீர்?
ஏன் இந்த கண்ணீர்?
உன்
எதிரில் உள்ளவரின் வேடிக்கையால்
விளைந்ததுவா? இல்லை,
ஏழ்மையின் கொடுமையால்
எழுந்ததுவா? இல்லை,
Wednesday, May 11, 2011
அம்மா யசோதை அம்மா
மண்ணை தின்ற கண்ணன்
மடிமீது அமர்ந்த போது,
மலர்ந்த முகத்துடன் அவனை
கடுஞ்சொல் கூறாது அன்போடு
கட்டியணைத்துக் கொண்ட
அம்மா,
கோபியர் கோள்கள் பலகூற,
கோபப்படாது சாந்தமாக பதிலுரைத்தபின்,
கோபாலனை பாசமாக கண்டித்து, உன்
கோபத்தை அன்பில் கரையவிட்ட
அம்மா,
கண்ணனை வளர்ப்பதில் பொழுதோடு உன்
கருத்தனைத்தையும் மொத்தமாக செலவிட்டு
நீ இந்த மண்ணில் பிறந்ததே உன் மைந்தன்
கண்ணனுக்காகத்தான் என்று மெய்பித்த
அம்மா!
உன் மகன் விழிசிவந்து
அழப்போகும் தருணத்தில்
அனைவரும் வியக்கும் வண்ணம் உன்,
புன்னகையால் அவன் இதழ்களிலும்,
மென்னகையை தவழ விட்ட தாயே!
யசோதை தாயே!
காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
கண்மணித் தாயை உன்னில் நான்
காண்கிறேன்!
தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்
எனக்காக, உன்,
மடிமீது தலைவைத்து,
மன சாந்தி நானடைய
உன் கண்ணனோடு
ஓரிடம் எனக்கும்
ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!
பகல் கனவு (வேண்டுதல்)
ஆரவாரமிட்டபடி ஆடி ஓடிய,
அணில்கள் காணாமல் போயின!
காகங்களின் கரையல் சப்தம்,
கார் முகிலின் இடியோசையில்,
கரைந்தே போயின! மற்ற
பறவைகளின் விதவிதமான ஒலிகளும்,
பறந்தே போயின! பிறநில வாழ்-
விலங்கினங்களும் விரக்தியுடன் இந்த
வில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின!
காரணம் என்ன வெனில், இது,
அணில்கள் காணாமல் போயின!
காகங்களின் கரையல் சப்தம்,
கார் முகிலின் இடியோசையில்,
கரைந்தே போயின! மற்ற
பறவைகளின் விதவிதமான ஒலிகளும்,
பறந்தே போயின! பிறநில வாழ்-
விலங்கினங்களும் விரக்தியுடன் இந்த
வில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின!
காரணம் என்ன வெனில், இது,