Pages

Friday, October 21, 2022

சிவகாமியின் பந்தம். 2 ம் பகுதி.

இது சென்ற முதல்  பகுதியின் சுட்டி

அக்கா.. எப்படி இருக்கிறாய்? இன்று கிளம்ப வேண்டியவன் கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. என் அலுவலக வேலைகள் முடிந்ததும், உடனே கிளம்பி வந்து விடுகிறேன். .இன்னமும் ஒரு நாளைககு மேலேயே ஆகும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. " தம்பியின் குரல் வருத்தத்தில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மறுநாள் பகலில் கைபேசியில் வந்தது. 

" அப்படியா? சரிடா.. இருந்து பார்த்து முடித்து விட்டு வா.! ! வேளைக்கு சாப்பிடு. வேலை இருக்குனு வயித்தை காயப்போடாதே...! எனக்கு ஒன்றும் சங்கடமில்லை. நீ நிம்மதியா வேலைகளை முடிச்சிட்டு வா...! என்றவள் அவன் தன்னிடம் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி கண் கலங்கினாள்..

"சின்ன வயதிலிருந்தே அவன் விருப்பபட்டதை வாங்கித் தந்து அவனை கண் கலங்கி முகம் சுளிக்காமல், பார்த்துக் கொண்ட நான் இப்போது ஒரேடியாக அவன் விருப்பத்தை மறுக்கிறோனோ. .... " மனசு தேவையில்லாமல் அலைபாய்ந்தது. 

மதியம் ஒரு மன மாற்றத்திற்காக அம்மாவின் பீரோவை சரி செய்யும் வேலையில் இறங்கினாள். அதை அவ்வப்போது சுத்தம் செய்து அவர்கள் உபயோகப்படுத்திய கொண்டாலும், தாயின் மறைவுக்குப் பின் அம்மா உபயோகப்படுத்திய துணிகள் அடங்கிய சில பெட்டிகளை நினைவாக இருக்கட்டுமென அதை எடுக்கவேயில்லை. இன்று அதை உதறி மடித்து வைத்தால் அம்மாவின் நினைவில் நேரத்தை கடத்தி விடலாம் என ஆரம்பித்தவள் ஒரு புடவையை எடுத்து உதறிய போது உள்ளிருந்து பழைய டைரி ஒன்று விழுந்ததை கண்டு அதை எடுத்துப் பிரித்தாள். 

"அம்மாவுக்கு எழுதும் பழக்கம் இருந்து பார்த்ததில்லையே" என்ற வினாவுடன் எடுத்துப் பிரித்தவளுக்கு ஒரு பக்கத்தில் ஒரு கடிதம் பல விதத்தில் கிழிந்து காணப்பட்ட நிலையில் ஒரு கவருக்குள் சுருண்டு மடங்கியிருந்ததை கண்டாள். டைரியில் அந்தப் பக்கத்தில், அம்மாவின் சற்றே கோணாலான எழுத்துக்கள். 

அன்புள்ள சிவகாமி... 

இதை நீ எப்போ பார்ப்பேனு எனக்குத் தெரியாது. நீ பார்த்த பையன் உன் அப்பாவை பார்த்து தன் விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்க வந்த போது உன் அப்பா அவரை அசிங்கமாக பேசி அவமானபடுத்தி அனுப்பி விட்டார். அதைக்கூட உன்னிடம் சொன்னேன். உடனே அப்பாவின் தீடிரென்ற பிரிவின் மனக்கஷ்டத்திலே இன்னொன்றை நான் கூறவில்லை. அதுக்காக இந்த அம்மாவை மன்னிச்சுடு. 

அன்னைக்கு வந்துட்டு போன ஒரு வாரத்திலேயே அவர் மீண்டும் ஒருநாள் வந்து அப்பாகிட்டே ரொம்ப நேரம் பேசினாரு. அப்பாவும் பழைய கோபத்தோடுதான் அவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் போகும் போது உன் கிட்டே ஒரு கடிதாசியை மட்டும் கொடுக்கச் சொல்லி கொடுத்திட்டு போனார். அவர் தலை மறைஞ்சவுடனே அப்பா அந்த லெட்டரை கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு கோபமா வெளியே போயிட்டார். நான் அதை எடுத்து பத்திரப்படுத்தி உன்கிட்டே சமயம் பார்த்து கொடுக்க வச்சிருந்தேன். அதுக்குள்ளே உங்க அப்பா மரணமும், அடுக்கடுக்கா என்னென்வோ நடந்து போச்சு.. இப்ப இந்த புடவையை பிரிச்சதும் இந்த லெட்டரும் அந்த சம்பவமும் நினைவுக்கு வந்தது. உன்கிட்டே நேரடியா இதை தர இப்பவும் எனக்கு தைரியமில்லை. . இதை நீயா ஒரு நாள் பிரிச்சு பாத்துக்கோன்னு இந்த லெட்டரோடு என் கடிதாசியையும் எழுதி வைக்கிறேன். நீ. இதை பார்க்கும் போது என்னை மன்னிசுடும்மா.... 

சிவகாமிக்கு அம்மாவின் கடிதம் கண்களில் மளமளவென்று நீரை வரவழைத்தது. அப்பாவிடம் பேசிய நடராஜன் என்ன கடிதமென்றாலும் அதை என்னிடம் தந்திருக்கலாமில்லையா? அப்பாவிடம் அவன் பேசினதைப் பற்றி கூட தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அம்மா சொல்லித்தான் அறிந்து கொண்டாள். போகட்டும்....!!!! அப்பாவிடம் தைரியமாக பேசி அவர் மனக்குறைகள் போக்கி சம்மதம் வாங்கி விடலாம் என்றிருந்தவளுக்கு அப்பாவின் மரணம் சவுக்கடியைத்தான் தந்தது. அதன் பின் நடராஜனை பற்றிய திருமண நினைவுகளையும், ஒரு பள்ளி மாணவியாய், தான் அறியாமல் எழுதியதை ரப்பரால் அழிப்பதை போன்று அழித்து மனதோடு உதறி விட்டாள். 

"என்னை மணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா? என கண்ணியமாக கேட்ட நடராஜனின் உருவம் மட்டும் தன் மனதிலிருந்து அழியாததால், அப்பாவின் மறைவுக்குப் பின், தங்கைகளின் திருமணத்திற்குப் பின் தன் அம்மா எத்தனையோ நாட்கள் தன்னிடம் தன் திருமணத்தைப்பற்றி வலியுறுத்தும் போதும் அவள் அதை நிராகரித்து இருக்கிறாள். 

அம்மா.. எனக்கு இனி திருமண பந்தமே வேண்டாம். தம்பிதான் நான் பெறாத பிள்ளை. அவன் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவனுக்கு திருமணம் நடத்தி, அவன் வாரிசுகளை கொஞ்சி மகிழ்வதுதான் எனக்கு சந்தோஷம் தரும். அதை பார்க்கும் நாட்களுக்காக நீயும் என்னுடன் காத்திரு..!! இப்போதைக்கு நீயும், தம்பியுந்தான் நான் பாதுகாக்க வேண்டிய என் இரு கண்கள்....! இப்போதைக்கு அதை தவிர வேறு ஏதும் பேசாதே.. .! என கண்டிப்பான உறுதியுடன் சொல்லும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்து ஓடும். 

நினைவுகளின் சுமையில் ஆழமான மூச்சு வெளிப்பட்டது சிவகாமிக்கு. மெல்ல அந்த கடித துணுக்களை சேர்த்தெடுத்து வேறு ஒரு காகிதத்தில் பரப்பி சேர்த்து வைத்து படிக்கும் ஆவல் வந்தது. இதற்காகவே இன்று தம்பியை தன்னிடமிருந்து இறைவன் பிரித்து வைத்து வேடிக்கை செய்கிறானோ எனவும் தோன்றியது. 

தன் திட்டப்படி வேறு காகிதத்தில் நிறைய நேரங்களுக்குப்பின் கிழிந்த காகித துணுக்குகளை ஒன்று சேர்த்து வைத்து உருவாக்கிய கடிதத்தை ஒரு வழியாக படிக்க ஆரம்பித்தாள். 

அன்புள்ள சிவகாமிக்கு 

நான் எவ்வளவோ முயன்றும் உங்கள் தந்தை நம் திருமணத்திற்கு மறுத்து விட்டார். மற்றவர்கள் போல் அவர் உத்தரவு இல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்வது அந்த பந்தத்திற்கே இழுக்கு. ஆகவே காத்திருப்போம். உங்களால் உங்கள் குடும்ப சூழலால் அது முடியவில்லையென்றாலும், மற்றபடி இதற்கு முடிவேதும் கிடைக்கவில்லையென்றாலும், நான் இப்படியேதான் இருப்பேன். . உங்களைப் போல் என் குடும்பம் என்ற பந்தங்களும் என்னுடன் பிணைந்து சுற்றுவதால், என் காத்திருப்பு வேதனைகளும் எனக்கு பெரிதாக தெரியாது. உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு அகலுகிறேன். நம் சந்திப்புகள் தொடர்ந்து இருந்தால், உங்கள் மனம் வேதனையுறும். அதன் விளைவுகள் உங்கள் குடும்பத்தில் எதிரொலிக்கும் என்பதால், வேறு ஊரில் வேலை தேடி போகிறேன். என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்கும் போதும் இந்த நடராஜன் சிவகாமி இல்லாத பழைய நடராஜனாகத்தான் இருப்பான். அது நிச்சயம். ...! ஏன். சத்தியமும் கூட... 

இப்படிக்கு

உங்கள் நடராஜன். 

தடுமாறியபடி கடிதத்தை படித்து முடித்ததும், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் சிவகாமி. தன் வாழ்வின் திசை திரும்பல்கள் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை நினைத்து வேதனைபடுவதா. .. வியப்படைவதா... எனத் தெரியாமல் அப்படியே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாள். 

தொடர்ந்து வரும்.

20 comments:

  1. சிவகாமியும், நடராஜனும் ஒரே முடிவுதான் எடுத்து இருக்கிறார்கள். கதையில் இன்னொரு திருப்பமும் ஏற்பட போகிறது என்று நினைக்கிறேன். உண்மை காதல் இணையும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      இதை உடனே முடித்து வெளியிட வேண்டுமென நினைத்திருந்தேன். நடுவில் ஏகப்பட்ட பிரச்சனைகள். இப்போது என் கால் வீக்கம் குறைந்துள்ளது. கொஞ்சம் வலி மட்டும் உள்ளது. ஏதோ எனக்குத் தெரிந்த மாதிரி ஒரு கதை எழுதி அந்தக் கதையை தொடங்கியவளுக்கு தொடராமல் விட்டது என்னவோ மாதிரி இருந்தது. நீங்களும் ஆவலோடு காத்திருந்து உடன் வந்து படித்து கருத்திட்டது எனக்கு மிக்க மகிழ்வாக உள்ளது. அடுத்த பகுதி முடிந்து விடுமென நினைக்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. வேளைக்கு சாப்பிடு. வேலை இருக்குனு வயித்தை காயப்போடாதே...! //
    தாய் சொல்லுவது போலவே தாய் போல பார்த்து கொள்ளும் தமக்கையும் சொல்கிறார்.
    என் அம்மாவும் எப்போதும் இப்படித்தான் சொல்வார்கள்.
    நானும் பிள்ளைகளிடம் சொல்வது இதுதான்.
    இப்போது அவர்கள் என்னை "நேரத்திற்கு நன்றாக சாப்பிடுங்கள் எதை பற்றியும் கவலைபடாதீர்கள்"என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். தாயின் கவனம் முழுக்க தன் பிள்ளைகளின் வயிற்றுப் பசியைப் பற்றிதான். ஒரு வேளை உணவு தாமதமானால் கூட ஒரு தாய்க்கு வரும் தவிப்பு வேறு யாருக்கும் வராது.

      எங்கள் அம்மாவும் அந்த காலத்தில் எனக்கு எழுதும் கடிதங்களில் அந்த வரியை குறிப்பிடாமல் இருக்க மாட்டார். "வேலை வேலையென்று பட்டினி கிடைக்காமல் வேளைக்கு சாப்பிடு. வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து குளி." போன்ற வாசகங்கள் வரும் கடிதந்தோறும் வந்து விடும். இப்போது நம் குழந்தைகளுக்கு நாமும் அதையே சொல்கிறோம். இது ஒரு தாயின் பாசம் கலந்த கடமை அல்லவா?

      தாயைப்போல வளர்த்ததால் தமக்கைக்கும் அதே பாசம். கதையை நன்கு படித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு என் மனம் மகிழ்ந்த நன்றி சகோதரி. தொடர்ந்து வாருங்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நான் யூகம்செய்திருந்தது சரியா இருக்கு. விரைவில் நடராஜனும் சிவகாமியும் ஒன்று சேரப் பிரார்த்தனைகள். எங்க வீட்டிலேயும் உறவினர் ஒருத்தருக்குப் பொறுப்புகள் நிறைய என்பதால் பெற்றோரே திருமணத்திற்கு மறுத்ததும் பின்னர் திருமணம் செய்து கொள்ளா விரும்பியும் முடியாமல் போனதும் நடந்திருக்கு. :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எங்க வீட்டிலேயும் உறவினர் ஒருத்தருக்குப் பொறுப்புகள் நிறைய என்பதால் பெற்றோரே திருமணத்திற்கு மறுத்ததும் பின்னர் திருமணம் செய்து கொள்ளா விரும்பியும் முடியாமல் போனதும் நடந்திருக்கு. :(/

      அடாடா.. நிகழ்விலும் கதைகளில் வரும் இதுபோல் நடப்பதும், அதைப்பார்ப்பதும் கஸ்டமான தருணங்கள்தாம். என்ன செய்வது? நாம் எழுதும் கதைகளின் சாராம்சம் சிலசமயம் நிழலும், நிஜமும் பிரிக்க முடியாதபடியாக இருப்பதைப் போல நம் அனைவரின் வாழ்க்கையிலும் பிரதிபலித்து வந்து விடுகிறது.

      தங்கள் பிரார்த்தனைகளுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.தொடர்ந்து வந்து நல்லதொரு கருத்து தருவதற்கும் மிக்க நன்றி. இன்னமும் தொடர்ந்து வாருங்கள். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நடராஜனும், சிவகாமியும் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று நம்புகிறேன்.

    தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையைப் படித்து தங்கள் கருத்த்தை தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே. நம் நம்பிக்கைகள் என்றும் பொய்யாவதில்லை.

      /தொடர்ந்து வருகிறேன் /

      தங்கள் ஆதரவுக்கும், ஊக்கம் அளிக்கும் வகையில் உடனடியாக வந்து தரும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. மனதை நெகிழச் செய்கின்றது கதை.. இப்படியும் மனிதர்கள்..

    நடராஜனும், சிவகாமியும் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று நானும் நம்புகின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மனதை நெகிழச் செய்கின்றது கதை.. இப்படியும் மனிதர்கள்../

      ஆம்.. சில மனிதர்களின் மனப்பக்குவங்கள் உயர்ந்ததுதான். தங்களின் நல்லதொரு கருத்து என் மனதையும் மகிழச்செய்து நெகிழ வைக்கிறது. உடனடியாக வந்து தந்த தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      தொடர்ந்து வந்து கதைக்கு ஆதரவு தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அப்பாவின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று சொல்லும் யோக்கியன், நேர்மை ஆச்சர்யம் அளிக்கிறது.  ஐவரும் திருமணம் செய்யாமல் இருப்பதும் ஆச்சர்யம் என்றாலும் நடப்பதுதான்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நல்லவர்களை இது போன்று கதையில் காணும் போது மகிழ்ச்சியாகத்தானே உள்ளது.

      /ஐவரும் திருமணம் செய்யாமல் இருப்பதும் ஆச்சர்யம் என்றாலும் நடப்பதுதான்!/

      ஆம்.. நடப்பதுதான்.. எத்தனையோ இடங்களில் இதுபோல் தியாகத்துடன் கூடிய உள்ளங்கள் எடுக்கும் முடிவுதான். நம் பார்வைக்கு படுவது கொஞ்சம். சிலது சிலர் பார்வையில் விகாரமாவது வேறு விஷயம்.

      தாங்கள் தொடர்ந்து வந்து கதைக்கு இது போன்ற நல்லதொரு கருத்துரையை தாருங்கள். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    இன்றைய கதைப் பகுதியை படித்து நல்லதொரு வார்த்தைகளாக தரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

    மேலும் தொடரும் கதைக்கு தொடர்ந்து வந்து கருத்துகள் தந்து கதையை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஊக்கம் என் எழுத்துக்கு ஆக்கம் தரும். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே.

      முதலில் தந்த உங்களின் கருத்துக்கு இந்த பதிலைத்தான் தந்தேன். இப்போது என்னுடைய பதில் மட்டும் உள்ளது. உங்கள் கருத்து எங்கோ மாயமாகி விட்டது. எங்கு சென்று தேட என்று தெரியவில்லை. என்னென்னவோ பிரச்சனைகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. பிளாக்கர் ஸ்பாமில் இருக்கும்.  அதை விடுவியுங்கள்!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      எனக்கு இந்த பிரச்சனைகள் இதுவரை அவ்வளவாக வராமல் இருந்தது. இந்த கைப்பேசியில் இந்த விபரமெல்லாம் தெரியவில்லை. அதை எப்படி அணுகுவது, கையாள்வது என்ற முறையும் கற்கவில்லை. முயன்று பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்கு என் மன மகிழ்வுடனான நன்றி.

      உங்கள் ஊக்கம் தரும் கருத்து என் எழுத்துகளுக்கு பலம். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      Delete
  9. கமலாக்கா இப்பகுதியை இப்பத்தான் வாசிக்கிறேன் எப்படி விட்டுப் போச்சோ!!

    இப்ப சிவகாமியும் நடராஜனும் தனியாகத்தான் இருக்க்காங்க...முடிவு ஒர போன்று.....நடராஜன் சூப்பர் அப்பாவின் சம்மதம் இல்லாமல் திருமணம் வேண்டாம் என்பது.....

    நடராஜன் போன்றும் சிவகாமி போன்றும் இருவர் அந்தக்காலத்தில் இருந்தார்கள். அதாவது நான் கல்லூரி படித்த போது. அதன் பின் என்னாச்சு என்று தெரியவில்லை... அடுத்த பகுதிக்குப் போகிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அதற்கென்ன.. தங்களுக்கு வேலைகள் அதிகமாக (தீபாவளி வேலைகள் வேறு சேர்ந்திருக்கும்..) இருந்திருக்கும் என ஊகித்துக் கொண்டேன். கதையை எப்போது வேண்டுமானாலும் எந்த பகுதியிலிருந்தும் தொடங்கி படித்து கருத்திடலாமே..! நானும் தாமதமாக பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும்.

      ஆம். எல்லா காலத்திலும் இவர்களைப் போல மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். கதையை தொடர்ந்து வந்து வாசித்து கருத்துக்கள் தருவதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete