Saturday, May 5, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 2

ஆச்சு.... வேலையில் சேர்ந்து இரண்டு மாதம் முடிந்து அடுத்த மாதத்தின் இறுதியை தொட்டு விடும் ஆவலில் நாட்கள்  இறக்கையை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்தன . அவனுக்கு அம்மாவை பார்க்க வேண்டும் போல மனசு கிடந்து அடித்துக் கொண்டது....

அலுவலகத்திற்கு கொஞ்சம் அருகிலேயே தங்குமிடத்திற்கு சின்னதாக இரு அறைகளை கொண்ட ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டதால், ஒரளவு வசதியாக இருந்தது . அதனால், அம்மாவை  தன்னுடன் வந்து  ஒரு வாரமாவது தங்கிச் செல்லும்படி அழைத்தால் என்ன... என்ற யோசனை ஆசையாக அவனுள் வளர்ந்தது.

  "அன்புள்ள அம்மாவுக்கு, ஆயிரம் கோடி வணக்கங்களுடன் உன் மகன் பிரகாஷ் எழுதிக்கொள்வது... இங்கு நான் நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு இங்கு ஹோட்டல் சாப்பாட்டை சாப்பிட்டு, நீ பார்த்து பார்த்து வளர்த்து விட்ட நாக்கு செத்து போய் விட்டது.... உன் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது.... என்ன இருந்தாலும் உன் கைபாகமே தனிதான்.... அது போகட்டும், அதைக்கூட எப்படியோ சமாளித்து கொள்கிறேன். எனக்கு உடனே உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.      நான் இந்த ஆபிஸில் சேர்ந்த புதிதாகையால் நிறைய நாட்கள் லீவு எடுக்க முடியாது... எனவே நீ எனக்காக இங்கு வந்து என்னுடன் ஒருவாரம் தங்கியிருந்து செல்வாயா??? உன் சிரமத்திற்கு என்னை மன்னித்து, எனக்காக நீ ஒருதடவை அவசியம் இங்கு தயவு செய்து வரவேண்டும். உன் வரவை என் மனம் ஒவ்வொரு கணமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது......"
                                                        
                                                                             இப்படிக்கு,
                                                                          உன்அன்புமகன்,
                                                                             பிரகாஷ்.


   இந்த கடிதம் போய் சேர்ந்த நான்கைந்து நாட்களில் அவனுடைய தாய் மீனாட்சி, எப்படியோ கணவரையும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்தி விட்டு அவர்கள் சம்மதத்துடன் புறப்பட்டு வந்து சேர்ந்து விட்டாள்.

 அவள் வரும் விபரம் அறிந்த அந்த நாள்  ரயில்வே ஸ்டேசனில் தாயை வரவேற்று அழைத்துவர அவன் சென்றான். தாய் பசுவை கண்ட கன்று போல் பொது இடம் என்று பாராது,  "அம்மா..." என்று சத்தமாக கூறியவாறு ஒடி வந்து அவள் கையை பற்றிக் கொண்ட போது பாசத்தின் மிகுதியில் அவன் கண்களில் நீர் வழிந்தது.... உண்மையான அன்பு பொது இடம் என்று பார்த்துக்கொண்டு வருமா என்ன!

   இவன் எவ்வளவு அன்பை மனதில் வைத்துக்  கொண்டு வெளிகாட்ட முடியாமல் தவிக்கிறான். இவனைப்போய் புரிந்து கொள்ளாமல் கண்டபடி தனக்குத்தான் பேசத்தெரியும் என்ற அகம்பாவத்தில் பேசுகிறார்களே.... என்று கணவரையும், பிள்ளைகளையும் மனதிற்குள் கடிந்து கொண்ட மீனாட்சியின் கண்களிலும் கண்ணீர் தழும்பி வழிந்தது....

              "அம்மா!" என்றபடி அவன் அவசரமாக உள்ளே நுழைந்தான்..

            "என்னடா?"

அலுவலகத்திலிருந்து  மதியத்திற்கும் முன்பாகவே திரும்பி விட்ட மகனைக் கண்டு அதன் காரணம் கேட்பதற்குள்..

          "இன்று உன்னை வெளியே அழைத்துக்கொண்டு போய் சுற்றி காண்பிக்க போகிறேன்... சீக்கிரம் புறப்படம்மா.....இன்று  உனக்காக அலுவலகத்தில் எப்படியோ ஒரு நாள் விடுமுறை கேட்டு எடுத்து வந்து விட்டேன்...

   அவன் குரலில் இருந்த ஆவலை கண்ட அந்த தாய் அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் ௯றாமல் அவனுடன் கிளம்பினாள்...

  முதலில் நகரின் முக்கியமான இடங்களை சுற்றி காண்பித்தான்.. அதன்பின் ஒரு ஏ.சி. தியேட்டரில் ஒரு புதிய படம்...  பிறகு ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பாடு.... அதற்கு பிறகு, நல்ல உயர்ரக துணிக் கடையொன்றில் அம்மாவுக்கு பிடித்த கலரில் வறுப்புறுத்தி ஒரு புடவை  எடுத்துக்கொடுத்தான்...

   எல்லாவிடங்களிலும் அவனுக்கு ஈடு கொடுத்தாள் அவன் அம்மா......  வீடு திருப்பிய பின் ஆர்வமாய் அம்மாவிடம்.... "அம்மா எப்படிம்மா ஊரெல்லாம்??? ஜாலியா பொழுது போச்சில்லே....." உனக்கு பிடித்திருந்ததா?  என்றான் பிராகாஷ்..

 "நீ ஆசையாய் வாங்கி கொடுத்த புடவை மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்திச்சிப்பா... மத்தபடி நீ கூட்டிகிட்டு போன இடத்திலெல்லாம் பொழுது நல்லாதான் போச்சு... இருந்தாலும் எம்மனசுலே பட்டதைசொல்லேறேன்.. ஒரு கோவிலுக்குபோய் சுத்திட்டு ஐம்பது பைசாவுக்கு கற்பூரம் பொருத்தி வைச்சா ஏற்படற நிம்மதி, ஒரு சந்தோசம், இதுலே இல்லையேப்பா.... இதுக்குத்தான் சொல்றது இந்த கால நாகரீகத்திற்கு அர்த்தம் இல்லைனு......''

         அம்மா பேச, பேச, அவன் வியந்து போனான்..

        அம்மா எப்படி இந்த கால நாகரீகத்தை நாசூக்காய் சுட்டிக்காட்டி விட்டாள்... அம்மாவை நினைக்கும் போது அவனுக்கு மனம் முழுக்க பெருமிதமாக இருந்தது.....

தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 1

14 comments:

  1. அம்மா முடிவில் சொன்ன ஒரு வரியில் வாழ்வின் தத்துவம் அனைத்தும் அடங்கி விட்டது.

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      இன்று தாங்கள் என் கதைக்கு முதலில் வந்த வருகைக்கும், தந்த கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      அந்த ஒரு வரி வாழ்வின் தத்துவம் என்ற உண்மைக்கு நன்றிகள்.
      கதையை தொடர்ந்து வாசிக்கிறேன் என்று கூறி எனக்கு ஊக்கம் தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. தொடர்கிறேன். அன்பை வெளிக்காட்டத் தெரியாத மகனை அந்த அம்மா புரிந்து வைத்திருக்கிறார்களே... நெகிழ்வு. கதை முடிவில் அவன் சொந்தப் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட மாட்டீர்களே....!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      கதையை ரசித்துப் படித்தமைக்கு நன்றி சகோதரரே...

      /கதை முடிவில் அவன் சொந்தப் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட மாட்டீர்களே....!!/
      .ஆகா.. கதைக்கு இப்படி கூட ஒரு கரு முதலிலேயே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே..

      நாகரீகங்களை சற்று வெறுக்கும் இளைஞன் என்ற பாணியில் எழுதி உள்ளேன். அவ்வளவுதான்...

      கதையை தொடர்ந்து வாசிக்கிறேன் என்று கூறி எனக்கு ஊக்கம் தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அர்த்தமற்ற இக்கால நாகரீகம்..அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      ஆம் உண்மை.. அர்த்தமற்றவைதான் இக்கால நாகரீகங்கள். தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்..நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. //"அம்மா..." என்று சத்தமாக கூறியவாறு ஒடி வந்து அவள் கையை பற்றிக் கொண்ட போது பாசத்தின் மிகுதியில் அவன் கண்களில் நீர் வழிந்தது.... உண்மையான அன்பு பொது இடம் என்று பார்த்துக்கொண்டு வருமா என்ன!//

    அதுதானே!
    தானாய் இயல்பாய் அமையும் ஒரு உணர்ச்சி நிலை.

    //இதுக்குத்தான் சொல்றது இந்த கால நாகரீகத்திற்கு அர்த்தம் இல்லைனு......''//
    கதை தலைப்பு வந்து விட்டதே!

    இந்த காலத்தில் உயர்ரக ஓட்டலில் சாப்பிட்டால்தான் பெருமை என்று நினைக்கிறார்கள். அம்மாவை கோவிலுக்கு அழைத்து சென்றும், அன்பாய் கனிவாய் கையை பிடித்துக் கொண்டு பேசினாலே மகிழ்ச்சி அடைவார்கள். வேறு ஒன்றும் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /அதுதானே!
      தானாய் இயல்பாய் அமையும் ஒரு உணர்ச்சி நிலை./

      உண்மையை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். தானாய் இயல்பாய் வருவதென்பதுதான் அன்பென்னும் உணர்வுகள்...

      /கதை தலைப்பு வந்து விட்டதே!/
      ஹா.. ஹா.. ஹா அட..ஆமாம் இங்கேயே வந்து விட்டதே..

      /அம்மாவை கோவிலுக்கு அழைத்து சென்றும், அன்பாய் கனிவாய் கையை பிடித்துக் கொண்டு பேசினாலே மகிழ்ச்சி அடைவார்கள். வேறு ஒன்றும் வேண்டாம்./

      வாஸ்த்துவமான பேச்சு.. அன்னையின் மனம் மகிழ பணம் காசு செலவழிக்க வேண்டாம். இதமான பேச்சுகளும் அன்பான அரவணைப்புகளும் மட்டுமே போதும். தாய்க்கு மனம் குளிர்ந்து விடும். ஒரு தாய் எதிர்பார்ப்பதும் அதுதானே...

      தொடர்ந்து வந்து கருத்துக்கள் கூறி மகிழ்விப்பதற்கு மிகவும் நன்றி சகோதரி... கதை முடிவு வரை தொடர வேண்டுகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. உண்மையான அன்பு பொது இடம் என்றெல்லாம் பார்க்காது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /அன்பிற்கும் உண்ட அடைக்கும் தாழ்.. /உன்மையை சொன்னீர்கள் சகோதரி.அன்பென்ற சொல்லுக்கு ஏது தாழும், திறவுகோலும்...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அம்மா தன் மகனைப் புரிந்து கொண்டது போல் ஏன் அவன் தந்தையோ கூடப் பிறந்தவர்களோ புரிந்து கொள்ளவில்லையோ....அம்மாவேனும் பிரகாஷைப் புரிந்து கொண்டாரே...

    கதையின் தலைப்பு இங்கேயே வந்துவிட்டதே...அடுத்து என்ன சொல்லப்போகிறார் கதாசிரியர் என்று எதிர்பார்த்துத் தொடர்கிறோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      அனைத்து உறவுகளையும் விட புரிந்து கொள்ளும் மனப்பான்மை அன்னை என்ற உறவுக்கு தானே அதிகமாயிருக்கும் சகோதரி..

      /கதையின் தலைப்பு இங்கேயே வந்துவிட்டதே...அடுத்து என்ன சொல்லப்போகிறார் கதாசிரியர் என்று எதிர்பார்த்துத் தொடர்கிறோம்/

      ஆம்..சகோதரி..கடைசியில் தான் வரவேண்டும். ஒரு படத்தில் "எல்லோரும் எழுந்து சென்று விடுவார்கள். இப்போதாவது படத்தின் டைட்டிலை சொல்லவேண்டாமா?" என்ற காமெடி வசனம் வரும். அது போல் கடைசியில்தானே சொல்ல வேண்டும்...ஹா. ஹா. ஹா. ஹா.

      முடிவே தெரிந்து கொள்ளும் ஆவலில் கதையை தொடரும் பண்புக்கு, என் மகிழ்வும், நன்றியும் தங்கள் இருவருக்கும்..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எளிமையில் திருப்தியடையும் அம்மா. வாழ்வின் படாடோபங்களை பார்த்த பின்னும் இவை அர்த்தமற்றதாகத் தாய்க்குத் தோன்றுவதும் இது பற்றிக் கருத்துச் சொல்வதும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /எளிமையில் திருப்தியடையும் அம்மா. வாழ்வின் படாடோபங்களை பார்த்த பின்னும் இவை அர்த்தமற்றதாகத் தாய்க்குத் தோன்றுவதும் இது பற்றிக் கருத்துச் சொல்வதும் சிறப்பு.7

      கதையை படித்து ரசனையுடன் கருத்திட்டமைக்கு நான் மிகவும் மகிழ்வடைகிறேன்.

      விடுபட்ட முதல் பகுதியையும் கண்டு, அதனையும் படித்து அதற்கும் கருத்துக்கள் கூறி என் எழுத்துக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete