வணக்கம் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.!
நினைவிருக்கிறதா? பிறந்தவுடன் ஏற்படும் சொந்தங்கள் ௬ட சில சமயங்களில் நீண்ட பிரிவு உண்டாக்கித் தரும் சூழ்நிலைகளில், ஒருவரையொருவர் சற்றே மறந்திட வாய்ப்புண்டு. ஆனால் வலையுலக சொந்தங்களுக்கு எந்த ஒரு நிலையிலும் பார்த்துப் பேசி பழகாவிடினும், ௬டவே தமிழை உறவாகக் கொண்டு எழுதி வ (ந்த )ரும் மற்றவரை மறந்திடாத ஒரு குணம் உண்டென்ற நம்பிக்கை எனக்குண்டு.
அந்த நம்பிக்கை உணர்வோடு, வலையுலகை மனதின் ஒரு ஓரத்தில் சுமந்தபடி, இது நாள் வரை சுற்றி வந்தேன் என்பதை வார்த்தைகளால், விளக்க இயலாது. சரி! வழக்கமான அறு (க்காமல் ) வையோடு விஷயத்திற்கு வருகிறேன்.
பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தன்னலம் என்பது மிகவும் பிடித்தமான ஒருவிஷயம் என்பது அனைவரும் அறிந்ததே! ( என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ) அதையும் மீறி நாம் பொது நலமெனும் நல்ல சிந்தனைகளை, கடவுள் அருளால் மனதின் ஓரத்தில் செடியாக்கி, மரமாக்கி, வலுவான விருஷமாக்கும் போது, தன்னலமகன்று ஒரளவு பிறர் நலம் பேணும் பக்குவம் பெறுகிறோம். அதிலும் பொது நலத்திற்காகவே வாழ்ந்து தம் வாழ்வை முடிப்பவர்களும் உண்டு. தன்னலத்தில் நாட்டமும் கொண்டு சமயங்களில் பொதுநல சேவை செய்போரும் உண்டு. தன்னலத்தில் கவனம் மிகக்கொண்டு பிறர் நலத்தை பற்றி கவலையாறது வாழ்பவர்களும் உண்டு. இப்படியாக விகிதங்களின் அடிப்படையில் அனைத்து உயிர்களையும், ஏன் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்திருக்கிறான். எது எப்படியாயினும் தன்னலம் பார்த்துக்கொள்ளும் நேரத்திலும் பிறர் மனம் புண்படாமல், அவர் நலத்தையும் கேட்டறிந்து உதவி செய்து வாழும் மனதை உயிர் உள்ளவரை தக்க வை இறைவா! என தினமும் வேண்டிக் கொள்வோம்.
இந்த நலங்கள் அதாவது , இந்த நல்லதை நினைக்கும், செய்யும் செயல்களை ஒவ்வொரு மனதிற்கும் தத்தம் குடும்பங்கள்தாம் கற்றுத் தருகின்றன.நம் தாய் தந்தையிடமிருந்து தொடங்கி சகோதரத்துவத்துடன் பயணித்து, அதன் பின் வாழ்வில் இணையும் உறவுகளுடன் இணைந்து படிப்படியாக முன்னேற்றம் காண்கிறது இந்த தன்னலம் மட்டும் கருதா நோக்கு என்பது என் தாழ்மையான கருத்து. இதற்கு பின்ணனியாக ஒரு சிறப்பான உரமாக, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை முழுமையாக வளர்த்துக்கொண்டால்,மனித நேயங்கள் சிறக்கும் எனவும் நம்புகிறேன்.
அதெல்லாம் சரி. இந்த விஷயங்கள் எங்களுக்கும் தெரியும். 2 மாதங்கள் வலைப்பக்கம் வாராத காரணம் என்ன? என காரணம் கேட்டால், இந்த தன்னலம் கருதா நோக்குதான் என்றுதான் கருதுகிறேன்.
கிட்டத்தட்ட ஒரு எட்டு பத்து பேருடன் காலை கண் விழித்ததும்,, காப்பியோடு போராட்டம். ஒருவருக்கு சர்க்கரை தூக்கல்,! மற்றொருவருக்கு அது அருகேயே வரக்௬டாது.! மிதமான குடிக்கும் சூடுடன் ஒருவருக்கு,! மற்றொருவருக்கு காப்பி சற்றே கொதிக்க வேண்டும்.! அளவுடன் டிகாஷன்,! பாலாக ஒரு காப்பி,! அதற்குள் முதலில் அருந்தியவர்களுக்கு மறுபடியும்.! இப்படியாக பார்த்துப்பார்த்து காப்பியுடன் கலக்கல், இடையிடையே வேலைக்கு விரையும் மூவருக்கு என்ன முடிந்ததோ அந்தளவிற்கு சமையல், டிபன் படலம்.! அதுமுடிந்ததும், மீதமிருப்பவருகளுக்கு எஞ்சிய டிபனோடு மீண்டும் வேறு ஒரு டிபன், சாப்பாடு தயாரிக்கும் வேலை,! இடையிடையே வேறு பல அன்றாட கடமைகள்,! நடுநடுவே செய்த சமையல், டிபனில் குற்றங்குறைகள், அல்லது பாராட்டுகளுடன் ௬டிய முகஸ்துதிகளை மனம் நி( கு )றைவாகவோ ஏற்றுக்கொள்வது, ! மறுபடியும், மாலை காப்பியில் ஆரம்பித்து, இரவு வயிற்றுபாடு என்று 2 மாதங்களாக என் குடும்ப சுழலுடன் ஓடிக்கொண்டிருந்த எனக்கு வலைப்பக்கம் எட்டிப் பார்க்க ௬ட நேரமில்லை.
ஆனால்,வலையுலக சகோதர சகோதரிகளுக்கு இந்த இடைவெளியில் தினசரி பல தடவைகள் பொரை ஏறி இருந்தால்,அன்றைய தினம் அதற்கு ஒருதடவையாவது கட்டயாமாக நான் காரணமாக இருந்திருப்பேன்.! அந்தளவுக்கு என் மனமெல்லாம் வலையுலகந்தான்.! சரி இரவு 12 மணிக்கு கடமைகள் முடிந்த பின் கணினி முன் வந்தமர்ந்தால், " பேயுறங்கும் நேரத்தில் ௬ட என்னை உறங்கவிட மறுக்கிறாயே? என்றபடி என் கண்கள்" என் அனுமதியின்றி மூடிவிடும்.
இப்போது இதெல்லாம் விரிவாக எப்படி? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.! என் தன்னலத்திற்காக என்னை சென்னைக்கு சென்று தங்கி வா"வென தற்சமயம் தள்ளி விட்டிருக்கிறானே! என்னப்பன் முருகன். மறுபடியும் தன்னலம் கருதா நோக்குடன் நீ செயல்பட வேண்டும் என அவன் எந்நேரமும்,ஆணையிடலாம். அதற்குள் உங்களையெல்லாம் ஒரு எட்டு பார்த்து விடலாம் என வந்திருக்கிறேன். ஒரே வேலையை தினமும் செய்து ஆய்ந்து ஓய்ந்திருந்த எனக்கும் அங்கிருக்கும் போது இப்படித்தான் பாடத் தோன்றியது.
ஆனால் வாட்டி வதக்கும் சென்னை வெய்யிலில் சங்கீதமும் சாத்தியமில்லை என தோன்றுகிறது. மதியம் ரோடில், வேண்டாம்...வீட்டு வாசலில் நடந்தாலே அது தில்லான்னாதான்.
படித்துப்பார்த்ததற்கும் காணொளியை கண்டு கேட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...