Pages

Saturday, August 15, 2015

எங்களுக்கு எப்போது..?





சுதந்திரங்கள் என்றுமே உங்களுக்கு மட்டுந்தான்.!
சுற்றித் திரியும் சுகங்கள் எமக்கென்றும் இருந்ததில்லை!
எமது இனங்கள், வானிலே பறந்து வட்டமிடுவதையும்,
எட்டிப் பார்க்கும் எழுச்சியும் எமக்கிருந்ததில்லை.!
மனிதரின் பிரச்சனைக்கு தீர்வின் மருந்தாக மட்டும்
மண்ணில் வந்து சிறகின்றி அவதரித்தோமா.?
ஆயிரம் மாற்றங்கள் அனுதினமும் உருவாகியும்,
ஆண்டாண்டு காலமாய், அதற்குதானா இந்தச் சிறை.?
தெய்வங்களை நாங்கள் தினந்தோறும் ஸ்பரிசித்தும்,
தீர்வான பாதைகள் இன்னமும் திறக்வில்லை.!
சிறகுகள் இருந்தும், பறக்கப் பழகவில்லை.! உங்கள்
சிரிப்புக்கு பலியென அதை பரிசாகவே தந்து விட்டோம்.
உங்களின் காலத்தை கணிப்பது எங்கள் பணி, ஆயின்
எங்களின் காலங்ள் என்றும் கண்ணுக்கு தெரிந்ததில்லை.!
வருடங்கள் தினமும் சிறகோடு விரைவாக பறப்பதினால்,
வயோதிகங்கள் வளர்ந்தே எங்கள் வாழ்வும் முடிந்து விடும்
உங்களின் சுதந்திர தாகங்கள் தணிந்ததைப் போன்று,
எங்களின் தாகங்களும் என்றுதான் தணியுமோ?
மனமும் மார்க்கமும் உங்களுடன் அமைந்திருந்தால்,
மனதாற எங்களையும் மகிழ்வோடு மறுப்பின்றி,
சுற்றிப் பறக்க விட்டு சுதந்திரத்தின் காற்றுக்களை,
சுவாசித்து வாழ விட சற்று முயற்சித்து பாருங்களேன்.



வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.              .                
        படங்கள் : நன்றி ௬குள்                            

18 comments:

  1. கூண்டுக் கிளிகளின் குரல் கேட்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      கூண்டுக் கிளிகளின் குரல் கேட்டு வந்து கருத்து தந்தமைக்கு நன்றி. இனியும் தாங்கள் தொடர்ந்தால் என் எழுத்துகள் மேம்படும். ஆதலினால் தொடர வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. சிறைப்பறவைகள் உண்மையில் நாம்தான். ஐந்தறிவு ஜீவன்கள் கூட சுதந்திரமாகவே இருக்கின்றன. அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      \\ சிறைப்பறவைகள் உண்மையில் நாம்தான்.// தங்கள் ௬ற்று உண்மைதான். ரசித்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல.

      நேரமின்மை காரணமாக வந்த கருத்துக்களுக்கு நன்றி ௬றவே மிக நாட்களாகி விட்டது .மன்னிக்கவும்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நல்ல சிந்தனை. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. .வணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், நல்ல சிந்தனை என்ற கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வருகையினால் என் எழுத்துக்கள் மென்மேலும் முன்னேறும் என நம்புகிறேன். சுதந்திர தின நல்வாழ்த்துக்களுக்கு எனது வந்தனங்கள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. வணக்கம் சகோ இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
    அழகான கவிதை நம் தேசியக்கொடிக்குள் அழகுடன் கண்டே முயற்சி அருமை.
    நான் வேறு விடயத்தை இந்த மா3 செய்திருந்தேன் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      அழகான கவிதை என்றமைக்கும் அதை, தேசியக்கொடிக்குள் அழகுடன் தந்த முயற்சியை பாராட்டியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.இதில் என் மகளின் பங்கும் இருக்கிறது. அவருக்கும் தங்கள் பாராட்டுக்கள் சேரும்,. நன்றி.

      அதைப்போல் தாங்கள் செய்திருந்த வேறு மாதிரியையும் குறிப்பிடவும். காண ஆவலாயுள்ளேன்.

      நேரமின்மை காரணமாக வந்த கருத்துக்களுக்கு நன்றி ௬றவே மிக நாட்களாகி விட்டது .மன்னிக்கவும்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கூண்டுக் கிளிகளுக்கும் சுதந்திரம் வேண்டும். நல்ல சிந்தனையில் விளைந்த நற்கவிதை. பாராட்டுகள்.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், நல்ல சிந்தனை என்ற கருத்துப் பகிர்வுக்கும்,பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வருகையினால் என் எழுத்துக்கள் மென்மேலும் முன்னேறும் என நம்புகிறேன். சுதந்திர தின நல்வாழ்த்துக்களுக்கு எனது வந்தனங்கள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ஆழமான சிந்தனையில் விளைந்த
    அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், நல்ல ஆழமான சிந்தனை என்ற கருத்துப் பகிர்வுக்கும்,பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வருகையினால் என் எழுத்துக்கள் மென்மேலும் முன்னேறும் என நம்புகிறேன்.இனியும் தொடர்ந்து வந்து கருத்திட்டு என்னை ஊக்குவிக்க வேண்டுகிறேன். நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. அருமையான பகிர்வு அக்கா....
    அழகிய கவிதையாய் விரியும் எழுத்துக்கள் தேசியக் கொடிக்குள்....
    ஆஹா... அற்புதம்....
    அருமை... அருமை.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், அழகிய கவிதை என்ற கருத்துப் பகிர்வுக்கும்,பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களைப் போன்றோரின் சிறந்த கருத்துக்கள் என் எழுத்துலக கனவு வளர்வதற்கு, பயனாக அமையும் என மனப்பூர்வமாக நம்புகிறேன். தொடர்ந்து வந்து கருத்திட்டால், நன்றியுடையவளாக இருப்பேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அருமையான பதிவு சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்களின் வருகைக்கும், அருமையான பதிவிது என்ற கருத்துப் பகிர்வுக்கும்,பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
      தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. சிறந்த கண்ணோட்டம்

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. ணக்கம் சகோதரரே.

      தங்களின் வருகைக்கும், சிறந்த கண்ணோட்டம் என்ற கருத்துப் பகிர்வுக்கும்,பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      மேலும் தங்களின் சிறந்த தகவலுக்கு நன்றி சகோதரரே. தங்களின் வலைப்பூவிலும், வெகு விரைவில் இணைகிறேன். நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete