Sunday, August 2, 2015

பேராசை பெரும் அழிவு

கதையென கொள்வோம்.

இறைவன் அனைத்து உயிரினங்களையும் படைத்து முடித்தவுடன் (மனித இனத்தையும் சேர்த்துதான்) அவரவர்கள் ஆசைகளை பரிசோதிப்பதற்காக, அனைத்து உயிர்களிடமும், இவ்வுலகில் வாழ அவரவர் தேவைகளை ௬றினால், அதை வரமாக தருவதாகச் சொன்னான். மனிதனை தவிர அனைத்து உயிரினமும், “நீயே எனக்கு தேவையானவற்றை கொடுத்து விடு.! நீ என்னை வாழச்சொல்லி அனுப்பும் உலகில் வாழ எனக்கு என்ன தேவையென்று உனக்குத் தெரியாதா?” என்ற எண்ணத்தில் அமைதியாயிருந்தன. ஆனால் மனித இனம் மட்டும் நாம் என்னவெல்லாம் கேட்கலாம் என்று பட்டியலிட்டுக் கொண்டு யோசனை செய்தபடி இருந்தது.

அதை உணர்ந்த இறைவன், “உங்களின் தேவைகளை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.!” எனவும் அதற்காகவே காத்திருந்த மனித இனம் இறைவா! நீ படைத்த ஒவ்வொரு உயிரினத்திற்கும், ஒவ்வொரு குணங்களை தந்திருக்கிறாய்!. அவற்றிக்கு தந்த அறிவை விட ௬டுதலாக பகுத்தறிந்துநடந்து கொள்ளும் ஆற்றலையும் எங்களுக்கு மட்டும் தந்த நீ இவைகளின் இந்த அனைத்து குணங்களையும் மொத்தமாக எங்களுக்கு தந்தருள ௬டாதா? மேலும் இந்த உலகில் வாழ்ந்து வாழ்வை முடிக்கவும் எல்லோரும் சமமான நேரத்தையும் வகுத்திருக்கிறாய்.! ஆறறிவை கொடுத்த எங்களுக்கு சற்று நீடீத்திருக்கும் ஆயுளையும் கொடுத்து உலகில் வாழும் தகுதியையும் தரக்௬டாதா.? என்று பேராசை மிகுந்த குரலில் கேட்கவும், இறைவன் புன்னகையுடன் மற்ற உயிரினங்களை பார்த்து, “இவர்கள் விரும்பியபடி சற்று ௬டுதலாக வாழும் காலத்தையும் தந்து, உங்களுக்கு தந்திருக்கும் குணங்களில் சிறிதளவையும் இந்த மனித இனங்களுக்கு பகிர்ந்து தருவதில் உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே.?” என வினவினான்.

சற்று ௬டி ஆலோசித்த மற்ற இனங்கள், “இறைவா.! எங்களுக்கென்று தனிப்பட்ட எந்த ஆசையும் இல்லை! எங்களுக்கு என்ன தர வேண்டுமென நீ நினைக்கிறாயோ, அதை தந்து விடுவாய் என்ற  நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்குண்டான குணங்களில் மிகுதியாகவே இவர்களுக்கு தருவதிலும், எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. அவர்களின் வாழும் காலத்தை ௬ட்டுவதோடு, எங்கள் வாழும் காலத்திலிருந்தும், கொஞ்சத்தை எடுத்து அவர்களுக்கே தருவதற்கும் நாங்கள் பிரியபடுகிறோம். என்று பணிவுடன் ௬றின.

நல்லது.! பிறந்தவுடனேயே, பிறருக்கு உபகாரமாக இருக்கும் தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ளும் உங்களை படைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் விரும்பியபடி இந்த மனித இனத்திற்கு உங்களின் வாழ்நாளின் ஒரு பகுதியை தந்து விடுகிறேன். நீங்களே எவ்வளவு என்று முடிவு செய்து பகிர்ந்து விடுங்கள்.” என்று இறைவன் சொன்னதும், மனித இனத்துக்கு அவ்வளவு சந்தோசம்.! உலகில் அப்போதே சாதனையின் விளிம்பை தொட்டுவிட்ட மகிழ்வுடன், இறைவனுக்கும், மற்ற இனத்திற்கும் நன்றி தெரிவித்தன.

இவ்வாறாக அங்கே ஆசைகள் பேராசைகள் கணிக்கப்பட்டு, குணங்களின் பாகுபாடுகள் வகுக்கப்பட்டு, வாழும் நாட்களின் எண்ணிக்கைகள் நிர்ணயக்கப்பட்டு, ஜீவன்களின் தராதரங்களை யூகித்து இறைவன் ஒருவழியாக அனைத்தையும் படைத்து முடித்து உலகில் வாழ அனுப்பி வைத்தான். அதன்படி உலகிற்கு வந்த ஜீவன்கள் தத்தம் கடமைகளை ஆற்றத் தொடங்கின.
 

 மனித இனங்களும், இறைவன் தனக்கு அதிகப்படியாக தந்த பகுத்தறிவால், நன்மை, தீமைமைகளை புரிந்து கொண்டு பல பல சாதனைகளை, தனக்கும், தன்னை சார்ந்தவர்களும், உலகிற்கும் வழங்கி வாழ்ந்து வந்தாலும், தன்னுடன் வாழ்ந்து வரும் தன் இனத்தையே சில சமயம், (ஏன்,! பல சமயங்களில்,) பிற இனங்கள் அன்புடன் தந்த குணங்களின் தாக்கத்தின் விளைவால், தன் வார்த்தைகள் மற்றும் தன் செய்கைகளினால், தேளாக கொட்டி, பாம்பாக சீறி கடித்து விஷமிறக்கி துன்புறுத்தி, நாய், நரி, புலி, கரடி, சிங்கம் போன்ற வன விலங்குகளைப் போன்று கொடூரமாகவும் நடந்து கொண்டு, இறுதியில் தான் விரித்த தன் கிளைகளில் நிழல் தேடி குரங்கினமாக அங்குமிங்கும் தாவி, நிம்மதி இழந்து, தன் வினை சுமந்து திரிந்து, தான் இறைவனிடம் விரும்பி பெற்ற நீண்ட ஆயுளை நினைத்து கர்வப்பட்டு, ஆனந்தமடைந்து, சிலவேளை வருத்தமும் கொண்டு வேளை வந்ததும் வேறொரு உலகிற்கு பயணப்படுகின்றன.


 
 
 
மனித இனத்திற்கு தான் சிறிதளவு தந்திருக்கும், பிறரை மதித்து அன்பு செய்து இரக்கமுடன் நடந்து கொள்ளும் குணத்தை, மற்ற இனங்களுக்கும் இறைவன் தந்திருக்க மாட்டானா என்ன.? அதை கொஞ்சமேனும் யூகித்து இந்த மனித இனங்கள், பேராசைகள் மனதை மயக்க, தானமாக மற்ற இனங்களின் குணங்களை கேட்டு மகிழ்வுடன் அடையும் போது, அதனிடமுமிருக்கும் அன்பினால் மற்றவரை மகிழ்விக்கும் குணத்தை மட்டும்தானமாக கேட்டிருந்தால், அன்போடு அவையும் தாராளமாக தர இசைந்திருக்குமே.! அப்படி அன்பு குணங்கள் அன்போடு இணையும் பட்சத்தில், ஒவ்வொரு மனித இனமும் வாழும் காலம் வரை தெய்வங்களாகவே வாழ்ந்து மறைந்திருக்குமே.! ஆக பகுத்தறிவின் ஆரம்ப அவசர முடிவின் அலங்கோலம் இதுதான்.!

இப்படி தீவிரமாக சிந்தித்து பெற்ற குணங்களின் அடிப்படையோடு மனித குணங்களினூடே மறைந்திருக்கும் அரக்க குணங்களும், பின்னி பிணைவதால்தானோ, மனிதனை மனிதனே வதைக்கும், இம்சிக்கும் தீவிரவாதங்கள் உண்டானதோ.? தனக்கு ஒரு சேதம் விளைந்தாலும் பரவாயில்லை! அடுத்தவன் முழுச் சேதமும் அடைந்தே தீரவேண்டுமென்ற இந்த வெறி என்று தணிய போகிறது.? எவ்வாறு மறையும் இத்தகைய குணங்கள்.? இதற்கான வரத்தை மறுபடியும் எப்போது ஆண்டவனிடம் பெறப் போகிறோம்.? புரியவில்லை.!ஆனாலும் ௬ட்டு முயற்சியாக அதற்கான பிராத்தனைகளைஅவன்பாதத்தில் வைப்போம். நம் அன்பான பிராத்தனைகள் வெகு விரைவில் பலிதமாகுமென்றே நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் முதன்மையானது.

இந்த தீவிரவாதங்கள் இனியேனும் ஒழிந்து கீழேயுள்ளவர்களின் நிலை ( இந்த காணொளியில் நாம் காணும் நிலை ) ௬டிய விரைவில் வந்தால் மிகுந்த சந்தோஷமே.!

 


      

14 comments:

 1. காணொளி புன்னகைக்க வைத்தது.

  அன்பு பூமி எங்கும் நிறைந்து அமைதியும் சாந்தகும் நிலவட்டும்.

  https://www.youtube.com/watch?v=f6PBHeQINlQ

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். காணொளியை கண்டு ரசிததமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

   \\அன்பு பூமி எங்கும் நிறைந்து அமைதியும் சாந்தகும் நிலவட்டும்.//

   தாங்கள் குறிப்பிட்டிருந்ததையும் கண்டு ரசித்தேன். இனிமையான குரலில், அமைதியான முகத்தில், சாந்தமும், மகிழ்வும் அடைந்தேன். மிக்க நன்றி.

   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. பேராசைகள் மட்டுமே...? அகந்தையும்...

  முதல் காணொளி ரொம்பவே திகைத்து விட்டேன்...! பிறகு சிரித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். காணொளியை கண்டு ரசிததமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

   \\ பேராசைகள் மட்டுமே...? அகந்தையும்...//

   தங்கள் கருத்து உண்மைதான். ஆசைகள்தானே அகந்தை உட்பட அனைத்திற்கும் காரணமாகிறது.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. உங்களுடைய பிரார்த்தனைகளில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரார்த்தனைகளில் நீங்களும் கலந்து கொண்டதற்கும் என் பணிவான நன்றிகள்..

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. எங்களுக்கு பகுத்தறிவு வேண்டும் என்று கேட்டதுடன் நில்லாமல் விலங்குகளின் குணங்களிலும் கொஞ்சம் பெற்ற மனித இனம் இன்று பேராசைகளுடன் தான் வாழ்கிறது.
  நல்ல பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்களின் ௬ற்றுக்களை ஆமோதிக்கிறேன். பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்.

   நேரமின்மை காரணமாக தாமதமான பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. வணக்கம்,
  கெட்டது ஒழிந்து எங்கும் நல்லது பரவனும் என்பது தான் நல் இதயங்களின் வேண்டுதல் பார்ப்போம் நம்பிக்கையுடன்,
  பதிவு அருமைம்மா,
  வாழ்த்துக்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.
   வேண்டுதல் பலிக்க ஆண்டவனையே நம்புவோம். நன்றி.
   பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோ.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete

 6. அருமையான பதிவு சகோ. இரண்டாவது காணொளி நகைச்சுவையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். காணொளியை கண்டு ரசிததமைக்கும் அருமையான பதிவு என பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகளும்.

   நேரமின்மை காரணமாக தாமதமான பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. வணக்கம் சகோ நல்லதொரு கருத்தை முன் வைத்தீர்கள் அருமையாக சொல்லிச் சென்றுள்ளீர்கள்
  காணொனி கண்டு முதலில் திகைத்து விட்டேன் கலக்கலாக காணொளியிலும் அசத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.

   தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   காணொளியை கண்டு ரசிததமைக்கும் அருமை என் பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகளும். தங்களை விடவா ? எனினும் தங்களின் பாராட்டுக்கள் என் எழுத்துக்களையும் ஊக்கபடுத்தும் என நம்புகிறேன்.மிக்க நன்றிகள்.

   நேரமின்மை காரணமாக தாமதமான பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   Delete